Thursday, January 14, 2016

உயர்கல்வி - யாரால்? யாருக்காக?



நாட்டின் கதவுகளை அகலத் திறந்துவிட்டு, வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு புகுந்து வந்து, தங்கள் பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் தாராளமாக, எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவலாம். எந்த அனுமதியும் தேவையில்லை. எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்கலாம்.
(உயர்கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்’ என்ற பொருளில் 5.11.15 அன்று சென்னையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட தொடக்க உரை)
இந்திய நாட்டின் மிகப் பெரும் தோல்வி, இமா லயத் தோல்வி கல்வியில்தான். கல்வி அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் இந்தத் தோல்வி இந்தியாவின் உயிர் குடித்துக் கொண்டிருக் கிறது. உலகிலேயே மிகக் கொடிய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பை இந்தியா உருவாக்கி, அதன் பெரும்இழப்புகளை அனுபவித்துக் கொண்டிருக் கிறது.
நாட்டின் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு பெரும் துரோகம் இழைக்கும் கல்வி; அறிவு வளர்ச்சி, விஞ்ஞானக் கண் ணோட்டம், சமூக ஈடுபாடு, விமர்சன - பகுத்தறிவுப் பார்வை, மனிதநேயம், ஜனநாயக நெறிகள், மதச்சார்பற்ற விசாலப்பார்வை , படைப்புத்திறன், இவை எதையுமே அளிக்கத் தவறும் கல்வியை நம் குழந் தைகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனிதனை மனிதன் விழுங்கும் கொடூரப் போட்டி உலகத்திற்குள் தள்ளப்பட்டு, குழந்தைகள் குழந்தைப் பருவத்தையே இழந்துவிட்டனர். மிகப் பெரும்பாலான குழந்தைகளை, இளைஞர்களை , வாய்ப்பு வட்டத்தினின்று வெளியே தள்ளி, சமுதாயத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஒருசிலருக்கே அனுகூலங்களை அளிக்கும் கல்வி, தனியார்மய மாக்கப்பட்டு மார்க்கெட்டில் விலை போ கும் பண்டமாக மாற்றப்பட்டிருக்கும் கல்வி, நவீன தாராளமயக் காலம்தொடங்கியதிலிருந்து இந்தப் போக் குகளெல்லாம் தீவிரமடைந்திருக்கின்றன. நாடே பலியாகிக் கொண்டிருக்கிறது.இன்று நாம் எடுத்துக் கொண்டிருப்பது உயர்கல்வி மட்டுமே. இங்கு நாம் கூடியிருக்கும் இந்நேரம் ‘டீஉஉரயீல ருழுஊ’, ‘யுஜிசியை முற்றுகை இடுவோம்’ என்ற இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. மற்றமட்டங்களில் போலவே உயர் கல்வியும்பெரும் சவால்களை , பெரும் தாக்குதல் களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோசமான வணிகமயம், தனியார்மயம், தன் அடிப்படைப் பொறுப்புகளை உதறித்தள்ளும், கார்ப்பரேட்டுகளின் கையில் கல்வியை அடகு வைக்கும் அரசு. அத்துடன் இன்றைய அரசின் அபாயகரப் போக்கான காவிமயமாகும் கல்வி. இவ் வாறு பல சம்மட்டி அடிகளை உயர் கல்வி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.புதியக் கல்விக் கொள்கை ஒன்று உருவாக்கப் போவதாக இந்திய அரசு அறிவித் திருக்கிறது. அது எப்படி இருக்கும் என்றுநம்மால் யூகிக்க முடியும். அதனை உருவாக்க நியமிக்கப்பட்டிருக்கும் குழுவில் அனைவரும் (ஒருவர் தவிர) அரசு செயலர் கள் . இந்நாட்டின் சிறந்த கல்வியாளர்கள் அதில் இருக்க வேண்டியதில்லை என்று அரசு முடிவு செய்திருக்கிறது.
1. முதல்பிரச்சனை, கல்வி சந்தைப் பொருளாக , வணிகப் பண்டமாக ஆக விடலாமா? அரசுக்குக் கல்வியில் பொறுப்பில் லையா? தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, கைகழுவி விட அனுமதிக்கலாமா?உலகம் முழுவதும், அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளிலும், முன்னணி வளரும் நாடு களிலும்கல்வி அரசின் பொறுப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனைவருக்கும் இல வசக் கல்வி அளிக்கப்படுகிறது. இது ஏதோசோசலிச நாடுகளில் மட்டும் என்று நினைத்து விடக் கூடாது. மக்கள் நல அரசுக் கொள்கைகளை (றுநடகயசந ளவயவந யீடிடiஉநைள) ஏற்றுக் கொண்ட நாடுகளி லும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ மார்க்கெட் பொருளாதார அமைப்பு களைக் கொண்ட நாடுகளிலும் (னநஎநடடியீநன அயசமநவ நஉடிnடிஅநைள) கூட கல்வி அரசின் பொறுப்பில்தான் அளிக்கப்படுகிறது. இதுஅடிப்படைப் பள்ளிக் கல்வியில் மட்டு மல்ல, உயர்கல்வியும் இலவசமாக அல்லது பெரும் மானியத்துடன் அளிக்கப்படு கிறது. சமீபத்தில், ஒரு பத்து நாட்களுக்கு முன்தான், ஜெர்மனியில் உயர் கல்வி முழுவதும் இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாமோஎதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இது வீழ்ச்சிப் பாதையன்றி வேறு என்ன?கல்வி அரசின் முழுப் பொறுப்பாக ஏற்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன? கல்வி அளத்தற்கரிய , எல்லையில்லா பெரும் நலன்களைப் பயப்பது; சமுதாயத்தின் பொது சொத்து; மனித வளர்ச்சிக்கு அத்தியாவசியமான , மொத்த மனிதவளத்தின் பயனை சமுதாயம் அறுவடைசெய்வதற்கு ஆன சமூக முதலீடு; சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான கருவி; வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும் அளவு கோல். இவ்வாறு ஒரு சமுதா யத்தை நிறுவும், நிர்மாணிக்கும் இந்த ஆதாரத் தேவையை மார்க்கெட் பூர்த்தி செய்ய இயலாது. மார்க்கெட்டிடம் விடப் பட்டால் சமுதாயத்தின் தேவைக்கு மிகக் குறைவாகத்தான் முதலீடு செய்யப்படும். இந்த ஆழ்ந்த அறிவும், புரிதலும்தான் கல்வி அரசின் கையில் , அரசின் முழு நிதிஒதுக்கீட்டில், அனைவருக்கும் இலவச மாக அளிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் ஞானத்தை உறுதிப்படுத்திற்று.உயர்கல்வி இன்று ஒரு அவசியத் தேவை. அதிலும், உலகமயமான, தொழில் நுட்ப சகாப்தத்தில், தன்பிரஜைகளில் மிகப்பெரும்பாலோர் உயர் கல்வி பெறாமல் ஒரு நாடு முன்னேற்றம் காண்பது இயலாது. அத்துடன்,பின் தள்ளப்பட்ட , நலிந்த பிரிவினர் வாழ்வில் உயர்வதற்கு உயர் கல்வி ஒன்றே வழி. ஆகவேதான், வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடே உயர்கல்வி கற்ற மக்கள் செல்வம் என்று கருதப்படு கிறது. அதிலும், ஏழ்மையில் ஆழ்ந்து கிடக்கும் நம் நாட்டில், அரசு முழுப் பொறுப் பேற்பதும், மார்க்கெட்டை அண்ட விடா மல் தடுப்பதும் கல்விக் கொள்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும்.நம் நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் சதவிகிதம் (ழுசடிளள நுசேடிடஅநவே சுயவiடி(ழுநுசு) வெறும் 18 சதவீதம் உலக நாடுகளின் சராசரி 30 சதவீதம்உயர் கல்விஇலவசமாகக் கிடைத்தாலன்றி விடப்பட்டிருக்கும். இந்தப் பெரும் மக்கள் திரள் பயனடைய இயலாது. விடப்பட்டோரில் மிகப்பெரும் பகுதி, எஸ்.சி, எஸ்.டி. சிறுபான் மையினோர், குறிப்பாக அவற்றில் பெண்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. கொள்ளை அடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களால் இப்பெரும் சமூகப்பொறுப்பை ஏற்றுக் கொள்வது கொஞ்ச மும் இயலாது.
2. இன்றைய அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெருமளவு குறைத்துக் கொண்டிருக்கிறது. கல்விக்கான மொத்தபட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 82,771 கோடியி லிருந்து, ரூ.69, 074 ஆகவும், திட்ட ஒதுக் கீட்டில் 25 சதவீதமும் குறைத்திருக்கிறது. பள்ளிக் கல்வியில், எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களுக்கும், உயர் கல்வியில், பல் கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கு 48 சதவீதமும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆராய்ச்சி மிகக் குறைவாக நடக்கும் நிலையில், இன்று மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது . `டீஉஉரயீல ருழுஊ’ போராட்டத்தைப் பற்றிக் குறிப் பிட்டேன். ஆய்வு மாணவருக்குக் கொ டுத்துவரப்பட்ட நெட் (சூயவiடியேட நுடபைibடைவைல கூநளவ, சூநுகூ) அல்லாத உதவித் தொகை நிறுத்தப்பட்டு விட்டது. ஒரு ஆராய்ச்சி மாணவருக்குக் கொடுக்கப்பட்டது. வெறும்ரூ.5000 தான். ஆராய்ச்சி நிறுவனங் களுக்கான நிதி கடுமையாக வெட்டப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஆர் நிறு வனங்கள் , ஐஐடிகள் அனைத்திற்கும் தங் களுக்கு வேண்டிய நிதியை அவர்களே கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தகைய ஆய்வுகளுக்கு நிதி அளிக்கும்? தங்களுக்கு அதிக லாபம் அள்ளித் தரக் கூடிய ஆராய்ச்சிகளுக்குத்தான் நிதி அளிக் குமே அன்றி , அறிவியல் வளர்ச்சிக்கோ, சமூகத் தேவையான ஆய்வுகளுக்கோ உதவும் நிதி அவைகளிடமிருந்து பெற இயலாது.
3. ‘அறிவு’ என்பதே மோசமான திரிபுகளுக்கு உள்ளாக்கி இருக்கிறது .அறிவு என்பதன் பொருள்தான் என்ன? அறிவுக்கு அர்த்தம் கூறுவது, இலக்கணம் வகுப்பது யார் பொறுப்பு? மனித வரலாறு முழுவதும் அறிவியலாளர்கள், பல்துறை அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் , தேச நிர்மாணத்தில் அக்கறை கொண்டோர், இவர்கள்தான் அறிவுக்கு இலக்கணமும், இலக்குகளும் வகுத்தவர்கள். இன்று அந்தப் புனிதப் பொறுப்பை , உள்ளூர், வெளியூர் கார்ப்ப ரேட் முதலாளிகள் அபகரித்துக் கொண்டுவிட்டனர். அவர்களது ஒரே குறிக்கோள் லாபப் பெருக்கம். அதற்குத் தேவை யான திறமைகளை அளிப்பது மட் டுமே கல்வியின் நோக்கம். அவர்கள் தான் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டு மென்று விதிக்கின்றனர். நமது பல்கலைக்கழகங்களும் அக்கட்டளைகளை சிரமேற்று, அவசர அவ சரமாகத் தங்கள் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கின்றனர் தங்கள் மாணவருக்கு வேலை பெறும் தகுதியை அளித்துவிட்டோம் என்று பெருமையுடன் பறை சாற்றுகின்றனர். மனிதகுல வரலாறு நெடுகிலும் ஆராதிக்கப் பட்ட அறிவின் அர்த்தத்தில் இது ஒரு ஆழிச்சுழற்சி.
4.அடுத்து, கல்வியை காவிமயமாக் கும், துவேஷம் வளர்க்கும் கல்வி யைத் திணிக்கும்திட்டம். அனைத்து உயர் நிறுவனங்களிலும், இந்துத் வாவாதிகள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். பல நிறுவனங் களின் புகழ் பெற்ற தலைவர்கள் நிர்ப்பந் தத்திற்குத் தள்ளப்பட்டு, ராஜினாமா செய்திருக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாளந்தா பல்கலைக் கழகத்தில் தொடர முடியாது என்று வெளியேறினார். குடைஅ யனேகூநடநஎளைiடிn ஐளேவவைரவந டிக ஐனேயை (குகூஐஐ), தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிநிறுவனம் (சூயவiடியேட ஊடிரnஉடை டீக நுனரஉயவiடியேட சுநுளநயசஉh யனே கூசயiபேiபே (சூஊநுசுகூ), இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ஐனேயைn உடிரேஉடை கடிச ழளைவசடிiஉயட சுநளநயசஉh (ஐஊழசு), நேரு நினைவு நூலகம் (சூநாசர ஆநஅடிசயைட டுiசெயசல), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்திய கலாச்சார உறவுக் கழகம் (ஐனேயைn ஊடிரnஉடை டிக ஊரடவரசயட சுநடயவiடிளே ). தேசிய புத்தக நிறுவனம் (சூயவiடியடே க்ஷடிடிம கூசரளவ), ஏளைஎநளஎயசயலய சூயவiடியேட ஐளேவவைரவந டிக கூநஉhnடிடடிபல, ஊநவேசயட க்ஷடியசன டிக குடைஅ ஊநசவகைiஉயவiடிn, ஞசயஉhயச க்ஷhயசயவாi முதலான பல முதன்மை நிறு வனங்கள் இந்துத்வவாதிகளின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.பாடத்திட்டங்களில் மத துவேஷத்தை, சிறுபான்மையினர் விரோதத்தை விதைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்தியவரலாறு சொல்லொண்ணா திரிபுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்தியா ஆயிரம்ஆண்டு காலம் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது என்று சொல்லி, இஸ்லாமி யர்களை அந்நியராகவும், முகலாயர் காலத்தை அந்நிய ஆட்சி என்றும் பாடம் போதிக்கப்படுகிறது. இந்தியா ஐயா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மகோன்னத இந்து கலாச்சாரத்தை நிறுவி வெற்றி கண்டது. இந்துக்கள் விண்வெளியில்கிரகங்களுக்கிடையில் பயணிக்கும் மகிமை கொண்டிருந்தனர்; ஞடயளவiஉ ளரசபநசல யும் பநநேவiஉ வநஉhnடிடடிபலயும் அன்றேஅவர்களுக்குக் கைவந்த கலை, என்றெல் லாம் எந்த ஆதாரமுமற்ற, நகைப்புக்குரிய கட்டுக் கதைகள் வரலாறு என்று கூசாமல் சொல்லப்படுகின்றன. இந்தியா இந்து நாடு, மற்ற மதத்தினர் அந்நியர் என்பதை வலியுறுத்த வரலாறு என்ற களம் பயன்படுத்தப்படுகிறது.

5. இவை அனைத்துடனும் இன்று புதியஅபாயங்கள் காத்திருக்கின்றன. நம் நாட்டின் உயர்கல்வியை உலக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் அபாயம் இன்று நம் முன்னால் நிற்கிறது. உலகவர்த்தக மையம்-சேவைத் துறைகளில் வர்த்தகம் செய்வதற்கான பொது உடன்படிக்கை (றுகூடீ-ழுஹகூளு) என்கின்றபெரும் பூதங்களின் வடிவில் இந்த அபாயம் நம்மை விழுங்கக் காத்திருக்கிறது. உயர் கல்வி முழுக்க முழுக்க ஒரு மார்க்கெட் பண்டமாக, சந்தைப் பொருளாகமாறும் அபாயம், உயர் கல்வியில் நாடுதன் இறையாண்மையையே இழக்கும் அபாயம். நாட்டின் கதவுகளை அகலத் திறந்துவிட்டு, வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இங்கு புகுந்து வந்து, தங்கள் பல்கலைக்கழகங்களையும், கல்லூரி களையும் தாராளமாக, எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவலாம். எந்த அனுமதியும் தேவையில்லை. எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக் கலாம். நம் நாட்டுக் கல்வி நிறுவனங் களுக்கு நம் அரசு அளிக்கும் மானியம், உதவித் தொகை , மற்ற சலுகைகள் ஆகிய அனைத்தும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இந்தஅந்நிய நிறுவனங்களைக் கட்டுப்படுத் தும் எந்த அதிகாரமும் இருக்காது. எந்தச் சட்டங்களும், விதிமுறைகளும் , இடஒதுக்கீடுகளும், சமூக நீதி நெறிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தாது. நமது நாட்டு நீதிமன்றங்களுக்கும் அவற்றின் மேல் எந்த அதிகாரமும் இருக்காது. நினைத் துப் பார்க்கவும் இயலா. இந்த அராஜகம் வெகு தூரத்தில் இல்லை, நண்பர்களே. வரும் டிசம்பர் மாதமே நைரோபிநகரில் றுகூடீவின் அதிகாரப் பூர்வ உயர் மட்ட அமைப் புக் கூட்டத்தில் இந்தியாவின்தலைவிதி நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இந்திய அரசு ஏற்கெனவே ழுஹகூளு கட்ட மைப்புக்கு உள்ளாக வரத் தயார் என்றுஏற்பளித்திருக்கிறது. கொடுத்திருக்கும் அந்த தற்கொலைப் பத்திரம், சுய மரண சாசனம் திரும்பப் பெறுவதற்கு நைரோபி மாநாட்டில் இறுதி வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன் படுத்தத் தவறிவிட்டால் அந்தக் கடுமை யான உலக கார்ப்பரேட் ஆதிக்கத்தி லிருந்து மீள வழியில்லை. அதை அனுமதிக்கப்போகிறாமா என்பது நம் முன் இருக்கும் புதிய, பிரம்மாண்ட சவால்.(பின்குறிப்பு: இந்த உரை 2015 நவம்பர் மாதம் நடைபெற்ற உயர்கல்வி குறித்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட தொடக்க உரை. இதற்குப் பின் 2015 டிசம்பரில் நைரோபியில் நடைபெற்ற றுகூடீ மாநாட்டில் உயர் கல்வி குறித்த முடிவுகள்எடுக்கப்பட்டனவா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட வில்லை. அப்படியென்றால், அபாயம் விலகிவிட்டது என்பதல்ல பொருள். அடுத்து விரைவிலேயே நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டில் இது விவாதத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.)கட்டுரையாளர்:மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர்

தீக்கதிர் 14/01/2016

Tuesday, January 12, 2016

அறிவியலையும் மதத்தையும் கலக்கக் கூடாது பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர் ராவ் கருத்து

அறிவியலையும் மதத்தையும் கலக்கக் கூடாது 
பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர் ராவ் கருத்து

பெங்களூரூ ஜன.10-
அறிவியலையும் மதத்தையும் ஒன்று கலக்கக்கூடாது; நம் பிக்கையை அறிவியலோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.சி.என்.ஆர்.ராவ் இந்தியாவில் பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக பணியாற்றி ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். சிறந்த அறிவியலாளருக்கான பாரத ரத்னா விருது பெற்றவர்.பெங்களூரில் மோடியின் அறிவியல் கொள்கை மற்றும் மதம் ,சகிப்பின்மை குறித்து பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் கூறியுள்ள தாவது:தனி நபர் ஒருவரோ அல்லது அமைச்சகத்தில் உள்ள எந்த ஒருவரோ தனியாக அறிவியலின் அல்லது சமூகத்தின் பிரச்சனை களை தீர்த்து விட முடியாது.அறிவியலைப் பயன்படுத்தி உலக நாடுகளுடன் போட்டி யிட்டு கொண்டே வறுமை போன்ற கடினமான பிரச்சனை களை தீர்க்கலாம். இதற்கு பிரதமர் மோடிக்கு சரியான அறிவியல் ஆலோசகர்கள் அமைய வேண்டும். அப்போதே முதன்மை யான பிரச்சனை எது என்பதை அறிய முடியும். அறிவியலுக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சிறிய அளவு நிதியான ரூ.10-20கோடிகளும் தற்போது நிறுத் தப்பட்டுவிட்டது. எனவே மோடி அரசு நல்ல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச நிதியாவது ஒதுக்க வேண்டும். மோடி அரசு சில பிரச்சனை களுக்கென தனியான அறிவியல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் . தரமான விதைகளை உருவாக்கவும்,பாதுகாப்பான குடிநீருக்காகவும், கல்வியின்மை யை ஒழிக்கவும் மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கவும் அறிவியல் திட்டங்களை உருவாக்கி நிதி ஒதுக்க வேண்டும்.மோடி அரசுக்கு தேவைப் பட்டால் நான் பணிபுரியத்தயார்.அறிவியல்தான் அனைத் திற்கும் அடித்தளமாகும். அறிவியல் வளர்ச்சி இன்றியோ உயர் கல்வியின் வளர்ச்சியின்றியோ இந்தியா எப்படி உலகிற்கு தலைமையை அளிக்க முடியும்?நான் அற்புதங்களில் நம்பிக்கை வைப்பவன் அல்ல.

ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் மதம், நம்பிக்கை, மூட நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் போட்டு குழப்பிக் கொள்வது நடக்கிறது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறியது போன்று, யாரும் நம்பிக்கைகள் இன்றி இருக்கமுடியாது. நீங்கள் ஏதாவது மதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதைவாழ்க்கையின் பிற விசயங் களோடு இணைத்துக் கொள்ளக் கூடாது. இயற்பியல் விதிகளுக்கு மாறாக நடக்கும் விசயங்களை நம்பக்கூடாது. அந்த வகையில் அறிவியலையும் மதத்தையும் ஒன்றாக கலக்கக்கூடாது.இவ்வாறு ராவ் கூறியுள்ளார்.(பிடிஐ)

மந்தமாகச் செயல்படுகிறது மோடி அரசு!- அமர்த்ய சென் பேட்டி

மந்தமாகச் செயல்படுகிறது மோடி அரசு!- அமர்த்ய சென் பேட்டி
   
முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிக மந்தமாகச் செயல்படுகிறது, வாக்குறுதிப்படி செய்துமுடிக்கத் தவறிவிட்டது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்ய சென். அவரது பேட்டி:
பொருளாதார ஒழுங்கமைவு எந்த திசை நோக்கிச் செல்கிறது என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளும் திசையில் செல்கிறதா?
ஏராளமான மாறுதல்கள் நிகழ்கின்றன, அவற்றில் பல அங்கீகரிக்கப்பட வேண்டியவை. பொருளாதாரக் கொள்கைகளின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட பலன்கள் புள்ளிவிவரங்களில் எதிரொலிக்கின்றன என்பது ஆக்கப்பூர்வமான நிகழ்வு. கணிதவியல் அடிப்படையி லான பொருளாதாரமும், கணிதம் சாராத பொருளாதாரத் தேற்றங்களும் இணைக்க முடியாதவை அல்ல; பாரம் பரியமான பொருளாதாரச் சிந்தனைகளில் பல, இந்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளில் சேர்க்கப்படவில்லை. எதிர்காலப் பொருளாதாரத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை பயனளித்துவரும் பொருளாதாரக் கொள்கைகளின் மீது கவனம் செலுத்தாமல் பலனை அடைய முடியாது.
இந்தியாவுக்கான பாடங்கள் எவை?
பொருளாதாரம் கற்றுத்தரும் 3 முக்கிய பாடங்கள் முழுதாக மதிக்கப்படவில்லை.
முதலாவதாக, பொருளாதாரம் வேகமாக வளரவும் மேம்பாடு அடையவும் வெற்றிகரமான சந்தை அமைய வேண்டும். அது இப்போது கவனிக்கப்படுகிறது. ஆனால் மோடி அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மிகவும் மந்தமாக இருக்கிறது, வாக்களித்த சில சீர்திருத்தங்களைக்கூட இன்னமும் மேற்கொள்ளவில்லை.
இரண்டாவதாக, சந்தை சார்ந்த பொருளாதாரமானது தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்துக்கும் நன்மைகளைச் செய்தாலும் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு நன்மைகளைச் செய்யவில்லை. இந்த இடத்தில்தான் ஒரு அரசு தன் பங்கைச் செய்ய வேண்டும். இதை ஆடம் ஸ்மித் 1776-லேயே கூறினார். அது புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசு இத்திசையில் குறைவாகச் செயல்பட்டது; மோடி அரசு அதைவிட மோசம்.
மூன்றாவதாக, சமச்சீரற்ற தகவல்கள். விற்பனையாளர் எதை விற்கிறார் என்பதே நுகர்வோருக்குத் தெரியாதது பெரும்பாலும் நிகழ்கிறது. சந்தைப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள இது மிகவும் அடிப்படையானது. பொதுச் சுகாதாரத்தை அரசு வழங்காமல், மருத்துவ சேவையைத் தனியாரிடம் விடும் எண்ணம் இதனால்தான் ஏற்படுகிறது. இந்தியா உள்பட எந்த நாட்டிலும் இப்படிச் செய்வது சாத்தியமே இல்லை.
அனைவருக்கும் கல்வி, மருத்துவ சேவை போன்ற வற்றைத் தனியார் துறை மூலம் அளிக்க இந்தியா மட்டுமே முயல்கிறது. ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, வியத்நாம், கியூபா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வலதுசாரிகள் ஆண்டாலும் இடதுசாரிகள் ஆண்டாலும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் அரசிடம்தான் முழுக்க முழுக்க இருக்கின்றன. அவ்விரு சேவைகளும் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.
அனுபவ அறிவை அதிகம் சார்ந்திருப்பது, கோட்பாடு சார்ந்த பொருளாதாரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிறீர்களா?
அனுபவம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையையும், கோட்பாடு சார்ந்த பொருளாதாரக் கொள்கையையும் ஒரு காரணமும் இல்லாமல் உருவாக்கலாம். பொருளாதாரம் என்பது அனுபவம் சார்ந்த ஒன்று என்பதை அங்கீகரிக்க வேண்டும்; கோட்பாடானது நிஜ உலகில் ஏற்படும் அனுபவங்களைப் பற்றியதே. உலகம் எப்படி இயங்குகிறது என்பதைச் சொல்லும் அதே நேரம், எப்படி இயங்கினால் (பொருளாதார ரீதியாக) நல்லது என்றும் சொல்வதே கோட்பாடு. இக்கூறுகளைக் கொண்டதுதான் நல்ல பொருளாதாரக் கொள்கை. இதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை அல்ல என்று நீங்கள் கருதலாம். ஒரு பொருளாதாரம் நன்றாகச் செயல்படுகிறதா, இல்லையா என்று மதிப்பிட சில வழிகள் இருக்கின்றன. நடுநிலையுடன் அணுகத் தயாராக இருந்தால் இது சாத்தியமே.
பொருளாதார வளர்ச்சிக்கு ஜான் மேனார்ட் கீன்ஸ் காட்டிய அணுகுமுறை இன்றைக்கும் பொருத்தமானது என்று கருதுகிறீர்களா?
வேலைவாய்ப்பு, உற்பத்திப் பெருக்கம் தொடர்பான அவருடைய கோட்பாடுகளைத்தான் கீன்ஸின் அணுகுமுறை எனக் கூறுகிறீர்கள் என்று கருதுகிறேன். உலகின் பல நாடுகளுக்கு இன்றைக்கும் அது பொருந்திவருகிறது. அவருடைய கோட்பாட்டின் சில முக்கிய அம்சங்களை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாளுமன்றத்திலும் புறக்கணித்துவிட்டார்கள். ஆனால் அமெரிக்காவின் மத்திய வங்கி அதை மறந்துவிடவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி குறைந்து, வேலைவாய்ப்பு சரிந்து, மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அரசின் வரவுக்கேற்றபடி செலவைக் குறைக்கும் சமநிலை பட்ஜெட்டுக்கு அவை முக்கியத்துவம் தருவது புத்திசாலித்தனமாக இல்லை. பொதுக் கடனுக்கும் தேசிய வருவாய்க்கும் உள்ள விகிதம் அதிகரித்ததையே பெரிதாகக் கருதுகின்றனர். ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கொள்கையில் ஒரேயொரு அம்சத்துக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது அரசு தன்னுடைய செலவை அதிகப்படுத்த வேண்டும், பற்றாக்குறை பட்ஜெட் பற்றி கவலைப்படக்கூடாது, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கீன்ஸ் சொல்லித் தந்ததை மறப்பது மிகப்பெரிய தவறு.
இந்தியாவிலும் பொருளாதாரக் கொள்கையிலும் அணுகுமுறைகளிலும் தவறுகள் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் சரி, இப்போது பாஜக கூட்டணி அரசிலும் சரி கீன்ஸின் பேரியல் பொருளாதாரக் கோட்பாடுகள் பெரும்பாலும் அமல்படுத்தப்படுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மோடி தலைமையிலான அரசு இரண்டாம் ஆண்டின் இறுதிப்பகுதியை நோக்கிச் செல்கிறது; முதலாண்டு முடிவில், மோடி அரசின் வளர்ச்சிக் கொள்கையானது பெருநிறுவனங்கள் சார்ந்திருக்கிறது, தனிநபர் வளர்ச்சி சார்ந்து இல்லை என்று கூறியிருந்தீர்கள்?
நான் அப்படிக் கூறினேனா? தொழில்துறையில் முதலீடு செய்தால் மட்டும் போதும் என்று கருதுகிறார்கள்; கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு செய்து பெருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்றுதான் குறிப்பிட்டேன். அது முதலாண்டின் இறுதியில் மட்டுமல்ல, முதலிலும்கூட அப்படித்தான். அது அவர்களுடைய கொள்கை; இப்போதும் அதே நிலைதான். காங்கிரஸ் கூட்டணி அரசு கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை மிக மோசமாக அலட்சியப்படுத்தியது, பாஜக கூட்டணி அரசில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
திறன்மிகு இந்தியா, ஜன் தன் யோஜனா, காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவை தனி நபர் வாழ்க்கை நிலையை மேம்படுத்துபவை. அவற்றை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
இந்திய மக்களை அடிப்படையில் பாதிப்பது கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசின் முதலீடு குறைவாக இருப்பதுதான். ‘புதுமை போல’த் தோற்றமளிக்கும் திட்டங்கள் எத்தனை வந்தாலும் தகுந்த கல்வி பெறாத, முறையான சுகாதார வசதிகளைப் பெற முடியாத தொழிலாளர்களால் உற்பத்தியைப் பெருக்கவும் முடியாது, அதிக வருவாயையும் அவர்களால் ஈட்டவும் முடியாது. எனவே பொருளாதாரத்திலும் உயர் வளர்ச்சியை அவர்களைக் கொண்டு எட்டுவது இயலாது. அரசின் திட்டங்கள் புதுமை போலத் தோன்றுவனவே தவிர உண்மையில் பெரும் பயனைத் தரவல்லவை அல்ல.
சமையல் எரிவாயு மானியத்தை வழங்குவதிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திலும் பயனாளிகளுக்கு பணப்பயனை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றிவருகிறது அரசு. இது நன்கு செயல்படுகிறது என்று கருதுகிறீர்களா, பொது விநியோக திட்டத்துக்கும் (ரேஷன் முறை) இது விரிவுபடுத்தப்பட வேண்டுமா?
சமையல் எரிவாயு மானியத்தை முழுதாக விலக்க வேண்டும் என்று நான் திரும்பத் திரும்பப் பரிந்துரைத்து வருகிறேன். அதை இன்னமும் அவர்கள் செய்யவில்லை. எல்லோருக்குமே மானியத்தை வெட்ட வேண்டும். இந்தியா வின் பல பகுதிகளுக்கு மின்சார இணைப்பே இல்லாத போது பெரும்பாலானவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது அல்லது இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது, இது நல்லதே அல்ல. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும். எல்லோருக்கும் மின்சார வசதி கிடைக்க வேண்டும், அதற்கு எல்லோரும் உரிய கட்டணம் செலுத்தியாக வேண்டும். காங்கிரஸ் அரசைவிட மோடி அரசு மானியங்களைக் குறைப்பதை நன்றாகச் செயல்படுத்தி வருகிறது. ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அவர்கள் முதலில் கடுமையாக எதிர்த்தார்கள், இப்போது மனம் மாறி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றுவது சாத்தியமா, தொடருமா?
இதில் சில நன்மைகளும் உண்டு, சில தீமைகளும் உண்டு. பாலினப் பாகுபாடு குடும்பத்தில் இருந்தால் பாதிப்புகள் உண்டு. ஒரு குடும்பத்துக்குக் கிடைக்கும் வருவாயில் அதிகம் ஆண் பையன்களுக்குச் செலவிடப்படும் பெண் குழந்தைகளுக்குக் குறைவாகச் செலவிடப்படும். பணமாகத் தருவதற்குப் பதில் பண்டமாகத் தந்தால் இது நேராது. இந்த நடைமுறை ஏன் அனைவரையும் ஈர்க்கிறது என்று புரிகிறது, அதே வேளையில் இதன் பாதகமான அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டெல்லி மாநகரில் ஒற்றைப்படை எண் வாகனங்கள் ஒரு நாளும் இரட்டைப்படை எண் வாகனங்கள் இன்னொரு நாளும் செல்ல வேண்டும் என்ற ஏற்பாட்டைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
(சிரிக்கிறார்) அவர்கள் அளவுக்கு நான் பெரிய ‘சிந்தனாவாதி’ அல்ல!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃப்ரீ பேசிக்ஸ் என்ற திட்டம் குறித்து?
மக்கள்தொகையில் பாதிப்பேர் பள்ளிக்கூடம் போய் படிக்கவில்லை என்னும்போது, இணையதளம் குறித்து இந்த அளவுக்குக் கவனம் செலுத்துவது தவறு என்றே கருதுகிறேன்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி

இந்தியாவில் இனி உயர் கல்வி

இந்தியாவில் இனி உயர் கல்வி பயில விரும்பும் மாணவர் களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவை மறந்துவிட வேண்டியிருக்கலாம். பள்ளிப் படிப்புடன் தங்கள் கல்வியை நிறுத்திக்கொண்டு, கிடைக்கும் வேலைகளில் சொற்ப சம்பளத்துடன் வாழ்க்கையை மேற்கொள்ள நேரலாம். கல்வியில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அரசுக் கல்வி நிறுவனங்கள் நலிவடைந்து தனியார் கல்வி நிறுவனங்களே எல்லா இடத்திலும் வியாபித்துவிடலாம். நினைத்தாலே பயங்கரமாக இருக்கும் இச்சூழல் சாத்தியமாக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ஆம், காட் (GATT ‘GENERAL AGREEMENT OF TARIFFS AND TRADES’) ஒப்பந்தத்தின்கீழ் உயர் கல்வி வர ஒப்புக்கொள்ளும் நாடுகளில் இதுதான் நடக்கும். இந்தியாவும் இந்த அபாயத்தில்தான் இருக்கிறது. கென்யா தலைநகர் நைரோபியில் கடந்த டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இதற்கான முயற்சிகள் நடந்தன.

காட் என்றால் என்ன?

1930-ல் அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட நாடுகளில் கடும் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டெழும் நேரம் இரண்டாம் உலகப் போர் மூண்டது. தொழில்புரட்சியின் பயனாய் வளர்ச்சியடைந்த நாடுகள் தத்தம் உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி (Tariff) விதித்தனர். இதனால், பன்னாட்டில் கிளை பரப்பத் துடித்த பெரும் தொழிலதிபர்கள், தங்கள் வியாபார வளர்ச்சிக்கு, லாபவெறிக்கு இது தடையாக இருக்கும் என்று கருதினர். விளைவு, இரண்டாம் உலகப் போர் முடிவடையும் சூழலில் காட் எனப்படும் வரியில்லா வாணிபத்துக்கான ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தனர்.

1947-ல் உருப்பெற்று, 1995 வரை இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உற்பத்தியாகும் பொருட்களைத் தாண்டி விவசாயம், நெசவு உள்ளிட்ட பல துறைகளிலும் விரிவாக்க முயற்சித் தனர். இவர்கள் சொன்னதெல்லாம் இப்படி ஒப்பந்த மிட்ட நாடுகள் அவர்களுக்குள் தங்கு தடையின்றி வாணிபம் செய்துகொள்ளலாம் என்பதே. இது விரிவடைந்த ஒப்பந்தமாக மாறும்போது ஒரு அமைப்பின் கீழ் இதைக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவ்வாறு 1995-ல் உருவானதுதான் உலக வர்த்தக அமைப்பு!

இந்தியா இதில் எப்படிச் சிக்கியது?

1980-களில் இந்தியா உலக வங்கியிடம் கடன் வாங்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல மீள முடியாத அளவு கடன், உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து பெறப்பட்டது. பொறியில் சிக்கிய எலியாகக் கடன் வாங்கிய நாடுகள் ஒவ்வொன்றும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளாக வேண்டிய நிலை உருவானது. 1996-ல் இந்தியா இதன் உறுப்பு நாடானது. இதன் கீழ் காட் கொண்டுவரப்பட்டது. காட்ஸ் (GENERAL AGREEMENT ON TRADE IN SERVICES) உருவானது. சேவையில் வர்த்தகத்துக்கான பொது ஒப்பந்தம் அனைத்து சேவைத் துறைகளையும் சந்தைக்குத் திறந்துவிட மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும்.

2004 ஜனவரி மாதம் தொடக்க விருப்பமாக மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளில் சந்தையை அனுமதிக்க, இந்தியாவால் விருப்பம் தெரிவிக்கப் பட்டது. 2005 ஆகஸ்ட் மாதம் கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளில் சந்தையை அனுமதிக்க இந்தியா விருப்பம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள்…

விருப்பம் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்ற வடிவில் நடைபெறும் செயல்பாடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளாலும் காட்ஸ் ஒப்பந்த ஷரத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படும். விருப்ப நிலையில் ஒரு நாடு விலகிக்கொள்ள முடியும். விருப்பம் என்பது ஒப்பந்தமாக மாறிவிட்டால், திரும்பப் பெற இயலாது என்று காட்ஸ் ஒப்பந்த விவர ஆவணங்களைக் கூர்ந்து படிக்கும்போது தெரியவருகிறது.

அப்படியென்றால், ஒரு அரசு தவறு செய்துவிட்டது என்பதால், மக்கள் தேர்தலில் அந்த அரசை மாற்றி, புதிய அரசைத் தேர்ந்தெடுத்தாலும், முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைப் பிந்தைய அரசுகள் திரும்பப் பெற இயலாது. அதாவது, இந்த நாட்டு மக்கள் தங்கள் இறையாண்மையை இழக்கிறார்கள் என்று பொருள்.

கல்வியில் சந்தையை அனுமதிக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டால், சட்டப்படி கல்வி ஒரு வணிகப் பொருளாகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் கல்வி விற்பனைக்குரிய சந்தைப் பொருள் அல்ல என்ற 1993 உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது நடைமுறையில் உள்ளது. காட்ஸ் ன் கீழ் கல்வி வந்தால் இந்த நிலை மாறிவிடும்.

என்ன விளைவுகள் ஏற்படும்?

நமது அரசு நடத்தும் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் பெறும் அரசு மானியம், உதவித் தொகைகள் இல்லாமல்போகும். ஏனெனில், சந்தையில் ஆடுகளம் சமமாக இருக்க வேண்டும். நிதி முதலீட்டாளர்களின் நலன் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என இந்த ஒப்பந்தம் கூறுகிறது. மானியங்கள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளும் வரை பேச்சுவார்த்தை தொடரும் என்கிறது.

அடிப்படையில் கல்வி என்பதன் பொருளையே இந்த ஒப்பந்தம் மாற்றிவிடுகிறது. பொதுநலன், மனித மேம்பாடு, சமூக வளர்ச்சி ஆகிய இலக்குகள் கொண்ட பொதுச் சொத்தாகக் கருதப்படும் கல்வி ‘வணிகப் பொருளாக’ மாற்றப்படுகிறது.

அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் சர்வதேசப் பாடத் திட்டம் என்ற பெயரில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தேவைக்கு அல்லாமல், பன்னாட்டு நிதி மூலதனம் கொண்டுவரும் நிறுவனங்களும் திறன் மிக்க ஊழியர்களைத் தயார் செய்யவே உதவிடும் என யுனெஸ்கோ வெளியிட்ட ஆவணம் எச்சரிப்பதோடு உலக மொழிகள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்படும் என்று கூறுகிறது. குறிப்பாக, அமெரிக்க ஆங்கில மொழி மட்டுமே பாட மொழியாக இருக்கும் எனவும் கூறுகிறது.

சமூக ஒடுக்குமுறை நிறைந்த இந்த நாட்டில், பெண் என்றாலே செலவு என்ற கருத்தோட்டம் கொண்ட நாட்டில், மானியம், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு ஆகியவை கூடாது எனச் சொல்லும் GATS ஒப்பந்தத்தில் கல்வி பேசப்பட்டால் சமூக நீதியின் பால் உருவான அனைத்துச் சட்டங்களும் திட்டங்க ளும் செல்லாது என்ற நிலை ஏற்படும். இந்திய நீதிமன்றங்கள்கூட இதில் தலையிட முடியாது.

வளர்ந்த நாடுகளின் நிலை என்ன?

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் பேராசிரியர்கள் ஒன்றுகூடி இதே கோரிக்கையைத் தத்தம் அரசுகளுக்கு வைத்தார்கள். பேராசிரியர் ஜேபிஜி திலக் எழுதி யுனெஸ்கோ வெளியிட்ட ஆவணம், கல்வியை விற்பனைப் பொருளாகக் கருதுவதோடு உள்நாட்டு வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். காட்ஸ் ன் விருப்ப ஒப்பந்தத்தை உறுதிப் படுத்தியிருப்பவை அமெரிக்கா, சீனா போன்ற மிகச் சில நாடுகளே. வளர்ந்த நாடுகள் என்பதால் தங்க ளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று நினைத்துச் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவால்கூட இந்த ஒப்பந்தத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது என்கிறார் திலக்.

அப்படியானால், தப்பிக்க வழியே இல்லையா?

இந்தப் பேராபத்திலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. கல்வியைச் சந்தைப் பொருளாக்க இந்தியா 2005-ல் தெரிவித்த விருப்பத்தைத் திரும்பப் பெறுவது. கல்வியை இந்த ஒப்பந்தத்தின் கீழ் சந்தைப் பொருளாக்கும் பேச்சுக்கு இடமேயில்லை என்ற உறுதியான வாக்குறுதியை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அளிக்கச் செய்வது.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் கல்வியை காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். தேசியத் தகுதித் தேர்வு சாரா கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய முயற்சிகள் நடப்பதை எதிர்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் போராடிவருகிறார்கள். காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் கல்வி கொண்டுவரப்படக் கூடாது என்றும் குரல் கொடுத்துவருகிறார்கள்.

அரசு செய்ய வேண்டியது என்ன?

மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு சமத்துவச் சமூகத்துக்கு காட்ஸ் ஒரு தடைக் கல் என்பதை உணர்ந்து, இந்திய அரசு தான் தெரிவித்த விருப்பங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நடந்து முடிந்த நைரோபி மாநாடு எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் முடிவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, கழுத்தில் கயிறு இறுகுவதற்கு முன் கல்வி காப்பாற்றப்பட வேண்டும்.

- பிரின்ஸ் கஜேந்திர பாபு

தொடர்புக்கு: spcsstn@gmail.com

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு பற்றிய கூச்சல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு என்பது வீரத்த தமிழனின் பாரம்பர்யக் கலை என்றும் அநியாயமாக நீதிமன்றம் தலையிட்டு நிறுத்திவிட்டது என்று குற்றஞ்சாட்டுவதோடு, ஜல்லிக்கட்டு நின்று போனதற்கு அடுத்தகட்சிதான் காரணம் என்று ஒவ்வொரு கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன. நான் இந்தக் கூச்சலிலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன்.

 

காளையை என்ன அதைவிட பெரிய மிருகமான யானையையும், கொடிய மிருகமான சிங்கத்தையும் அடக்கியவன் மனிதன். இதற்குள் என்ன வீரம் இருக்கிறது? ஒருவனால் முடியாவிட்டால் என்ன இருவர் சேர்ந்து அடக்க வேண்டியதுதான் இல்லாவிட்டால் அதை அடக்குவதற்கென்று உருவாக்கப்பட்ட கருவியின் தானியங்கி பித்தானை காணொலித் தொலைக் காட்சியின் மூலம் அழுத்தினால் போதும். எதற்காக இதை வீரம் என்று போலியாக பறைசாற்றிக் கொள்வது? தனிநபரின் உடல்பலத்தைக் காட்டுவதுதான் வீரம் என்ற காலகட்டம் இன்றைக்கு மாறிவருகிறது. இன்றைக்கு “விரத்துடன்“ இயங்கும் “போல்டான“ ஆட்கள் - அதான் நடுநடுங்க வைக்கும் நமது ரவுடிகள் என்றைக்காவது சினிமாவில் வசனம் பேசுவது போல் ஒற்றைக்கு ஒற்றை என்று பீமனும் துரியோதனதும் சண்டையிட்டதாக கூறிக் கொள்வதைப்போல் சண்டையிட்டிருக்கிறார்களா? ஒரு ரவுடி தன்னுடைய ஆட்களுடன் சூழ்ச்சி செய்து மற்றொரு ரவுடி அசந்த பொழுது அவனைப் போட்டுத்தள்ளுவது இன்றைக்கு “வீரம்“ என்று வியாக்யானப்படுத்தப்படுகிறது.

 

பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதனின் மூளை வளர்ச்சியானது மற்ற விலங்கினங்களின் வளர்ச்சிப்போக்கைவிட தாவிப்பாய்ச்சல் வளர்ச்சி ஏற்பட்டது தற்செயலாக நடந்த ஒரு இயற்கைபோக்கு. இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல. இதன் விளைவாக அவன் அவனைவிட வலிய மிருகங்களை அடக்கியாள்வது சாத்தியமானது. ஜல்லிக் கட்டு என்பது சும்மா தமிழனின் இனஉணர்வை உசுப்பேற்றி அதில் குளிர்காயும் நடவடிக்கையே.  இதுதான் தற்பொழுது நடந்து வருகிறது. ஆளும் பொறுப்பில் இருக்கும் பாஜக, குறிப்பாக மனிதர்களைவிட மிருகங்களின் மேல் அக்கரையுள்ள கட்சி இந்த ஓட்டு பொறுக்கும் போட்டியில் தன்னுடைய மிருகாபிமானத்தை கைவிட்டு விட்டு. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விரைவில் நல்ல செய்திவரும் என்று ஆருடம் கூறிவருகிறார்.

 

ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பர்யக் கலை என்ற விஷயத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. வரலாற்றைத் தோண்டினால் எந்த ஒரு விஷயமும் ஏதேனும் ஒரு அற்ப காரணத்திற்காக யாரேனும் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளப்பிவிடப்பட்ட விஷயமாகத்தான் இருக்கும். நேற்று கூட சென்னையில் ஒரு பள்ளியில் வெடிகுண்டு என்ற வதந்தி வாட்ஸ்அப் மூலமாகப் பரவி பெற்றோர்கள் அனைவரும் எல்லாப் பள்ளிகளையும் முற்றுகையிட்டு சில பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இது வரலாறாக பதிவு செய்யப்பட்டால் என்ன விபரீதம் ஏற்படும்? அடுத்த நூற்றாண்டுக் குழந்தைகள் எந்தத் தேதியில் இம்மாதிரி செய்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவியது என்பதை மனப்பாடம் செய்து பரிட்சையில் எழுதுவார்கள். மனப்பாடக்கலையில் தேர்ச்சிபெற்றவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாகி நாட்டை நிர்வகிக்கும் நிலை தொடரும். எல்லா வரலாறும் இப்படிப்பட்டதுதான். அனைத்தும் சந்தேகத்துக்குரியது. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அது இருக்க வேண்டுமானல் மனித குலத்தின் வரலாறு என்பது மார்க்ஸ் எழுதியது போல் அது வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகத்தான் இருக்க முடியும் 

 

தமிழனின் பாரம்பர்யக் கலை என்று பீற்றிக் கொள்ளும் இந்த ஜல்லிக் கட்டின் இன்றைய நிலை என்ன? ஜாதியத்தின் கோரமுகமாக தமிழகத்தில் இன்றைக்கு இது உலா வருகிறது. பிராமணர்களை விடுத்து கிராமப்புரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் இதர ஆதிக்க சாதியினர் தங்கள் சாதிய உணர்வை கெட்டிப்படுத்தும் கருவியாக இந்த ஜல்லிக்கட்டு பயன்படுகிறது. ஆகவேதான் தான் நான் கூறுகிறோன் ஒழியட்டும் ஜல்லிக்கட்டு என்று! மிராசுதாரின் ஜல்லிக்கட்டுக் காளையை அதன் கொட்டிலிலிருந்து திறந்து விடுவதற்கு பறையடிக்க வேண்டும். இந்த பறையடிக்கும் வேலை மட்டும் தலித்துகளுக்கு. “வீரத்தை காட்டுபவர்கள்” ஆதிக்க சாதியினர்!இந்தியாவில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்ததன் விளைவாக ஓரிரு கிராமங்களில் தலித்துகள் பொருளாதார ரீதியாக சற்று முன்னேறியிருக்கிறார்கள். அம்பேத்கார் கூறியது போல் சாதியத்தின் தத்துவார்த்த அடித்தளமானது ஒவ்வொரு சாதியனரையும் அந்ததந்த சாதியினரை சாதிய ஏணியின் அடுத்த படிக் கொண்டு செல்ல தூண்டுகிறது என்பது தலித்துகளுக்கும் பொருந்திப் போகிறது. பொருளாதார ரீதியாக முன்னேறிய தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கும் கிராமங்களில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் அங்கேயும் ஜல்லிக்கட்டு உண்டு. எனினும் தமிழகத்தின் மிக மிகப் பெரும்பான்மையான கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பிடியில் இன்று ஜல்லிக்கட்டு. பலமாக இருக்கும் (வேறொறும் இல்லை எண்ணிக்கையில்தான்) இரு பிற்படுத்தப்பட்ட சாதியினர்கள் வசிக்கும் ஊர்கள் அருகருகே இருந்தால் இந்த ஜல்லிக்கட்டானது அங்கே சாதிய மோதலை உண்டு பண்ணும் கருவி! ஆகவேதான் சொல்கிறோன் ஒழியட்டும் ஜல்லிக்கட்டு என்று!

 

பாரம்பர்யக் கலை என்று போற்றி காலத்தால் பிற்போக்கானதை எவ்வளவு காலம் ஒரு சமூகம் தூக்கிச் சுமக்க முடியும்? இதற்கு பண்பாடு என்ற முலாம் வேறு பூசப்படுகிறது. பண்பாடு என்பது  ஒரு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் வாழும் மாண்பை வெளிப்படுத்தும் அம்சமே. இது கெட்டிதட்டி இறுகிப் போன விஷயமல்ல. ஆகவே ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டால் தமிழனின் பண்பாடுத் தொடர்ச்சி அறுந்து போய்விடும் என்று பண்பாட்டைப் பற்றிய மொன்னையாக புரிதல் உள்ளவர்கள் கூறிவருகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழும் மனிதர்கள் - அவர்கள் வாழ்நிலை விழுமியங்களை வெளிப்படுத்தும் மாண்புகள் மாறிக் கொண்டே இருக்கிறது.

 

ஜல்லிக்கட்டு என்பது ஒரு நிலப்பிரபுத்துவப் பண்பாடு. ஆம் அரசனுக்கும் நிலப்பிரபுக்கும் தங்க்ள் சுரண்டலை நீடித்து நிலைத்திருப்பதற்கு வேண்டிய அடியாட்கள்,சதையாட்கள் (Muscleman) தேவைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களை எங்கிருந்து பெருவது? எங்கிருந்து அணிதிரட்டுவது? சமூகத்திலிருந்துதான்!எப்படி ஊக்கம் (Motivate) கொடுத்து இவர்களை அணிதிரட்டுவது? அதற்கு உதவும் ஆயுதம்தான் இத்தகைய பண்பாடு. ஆகவேதான் கூறுகிறேன் இது ஒரு நிலப்பிரபுத்துவப் பண்பாட்டின் நீட்சி என்று. இனப் பெருமை, சாதியப் பெருமை மற்றும் இதர விஷயங்களெல்லாம் இதை மூடி மறைக்கும் சமாச்சாரங்கள். இப்படி ஒரு நிலப்பிரத்துவப் பண்பாடாக பரிணமித்த இந்த ஜல்லிக்கட்டானது முதலாளித்துவம் வந்தவுடன் காலாவதியாகிவிட்டது. இது காலத்தின் கட்டாயம். அரசு கட்டமைப்பில் நிலப்பிரபுத்துவத்தை தனது இளைய பங்காளியாக இணைத்துக் கொண்ட இநதிய முதலாளித்துவம் சாதுர்யமாக நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக இத்தகைய நிலப்பிரபுத்துவப் பண்பாட்டை அழித்து வருகிறது. தினவெடுத்த தோள்களையுடைய இளைஞர்கள் இப்படித் தேவையில்லாமல் ஒரு மிருகத்துடத்துடன் சண்டை போட்டு தன்னுடைய வீரத்தை காட்டுவதற்கு பதில் அந்த மிருகத்தை அறுத்து இறைச்சியாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து தன்னுடைய மூலதன வளர்ச்சிக்கு உதவுவதுதான் “நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த வழி“ என்று முதலாளித்துவம் நினைக்கிறது. முதலாளித்துவத்தின் இந்த சிந்தனைப் போக்கில் தவறெதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை. வளர்ச்சியடைந்துவரும் எந்த ஒரு சமூகமும் இப்படித்தான் சிந்திக்கும். ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசுவதற்கு கூட ஆட்கள் கிடையாது. இன்றைக்கு புளூகிராஸ் அமைப்பு. மிருக உரிமைக் கழகங்கள், சுற்றுச் சூழலியல்வாதிகள் போன்று வெவ்வேறு வடிவங்களில் இயங்கும் மனிதர்கள் வெளிப்படையாக ஜல்லிக்கட்டு எதிர்ப்பை தொலைக்காட்சி விவாத மேடைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தக் கூத்துக்களை பார்த்துக் கொண்டிருக்கும் மார்க்ஸ் என்ற அந்த மாமனிதனின் மீசை மூடிய தாடிக்குள் தெரியும் புன்முறுவதல்தான் எனது மனதில் பட்டுத் தெறிக்கிறது.

 

இந்த அரசியல் கட்சிகளை நடத்துபவர்கள் என்றைக்குமே ஒரு படி பின்தங்கியவர்கள்தான். முதலாளித்துவம் நினைப்பது வேறு. முதலாளித்துவத்தின் இந்த ஏவலாட்கள் நினைப்பது வேறு. இறுதியில் இந்த ஏவலாட்கள் முதலாளித்துவத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டுப் போய்விடுகின்றனர். பண்பாடு மெல்ல மெல்ல படிப்படியாக மாறிவிடுகிறது. எல்லாவற்றையும் கடந்து சிந்திப்பவர்கள் என்று கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்களும் தங்களின் சுய மதிப்பீட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலாளித்துவ போட்டி அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அவர்களும் இந்த கோஷ்டி கானத்தில் இணைந்து கொள்வதுதான் இன்றைய அவலம்.

S. Vijayan

கெஜ்ரிவால் முதல் சகாயம் வரை... தனிமனித வழிபாடு சரியா?

கெஜ்ரிவால் முதல் சகாயம் வரை... தனிமனித வழிபாடு சரியா? - மருதன்

முன்குறிப்பு: தலைப்பைப் படித்ததுமே ‘சகாயத்தை விமர்சித்து இன்னொரு கட்டுரையா?’ எனக் கொந்தளிக்க வேண்டாம். கட்டுரையை முழுக்கப் படித்த பிறகு ஒரு முடிவுக்கு வரவும்!

சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் குரல் ஓரளவு வலிமை பெற்று வருவதைக் காணமுடிகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற பெரும்வெற்றியைத் தமிழகத்துக்கு இழுத்து வர சகாயம் உதவுவார் என்று சிலர் திடமாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர் இவர், அந்தக் கட்சி இந்தக் கட்சி, அந்த அணி இந்த அணி என்று திரும்பத்திரும்பப் பார்த்து வெறுத்துப்போன பெரும்திரளான மக்கள், சகாயத்தை ஒரு மாற்றாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். சகாயம் செய்யவேண்டிய சகாயம் குறித்து கட்டுரைகளும் திறந்த கடிதங்களும் எழுதப்பட்டு வருகின்றன. திறமையான, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று பெயர் பெற்றிருக்கும் சகாயம் அரசியலுக்கு வந்தால்,  உண்மையிலேயே ஆரோக்கியமான ஒரு மாற்றம் ஏற்படுமா? கடந்த கால சம்பவங்களைக் கொண்டு பார்க்கலாம்...

தலைவர்களும் தனிப்பட்ட பண்புகளும்!

நரேந்திர மோடி ஒரு வலிமையான தலைவராக முன்னிறுத்தப்பட்டவர். அவருடைய நிர்வாகத் திறன்கள் போல, மார்பளவுகூட பெருமிதத்துடன் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் பலவீனத்தை இடித்துக் காட்டி, 'உங்களுக்குச் செயல்படும் தலைவர் வேண்டுமென்றால் மோடியைத் தேர்ந்தெடுங்கள்; வலிமையான மோடி இருந்தால் வலிமையான பாரதம் உருவாகும்' என்று  ஆரவாரத்துடன் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. மே 2014 தொடங்கி மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி,  இதுவரை எடுத்த உறுதியான, வலிமையான முடிவு என்ன? டெல்லியிலும் பிகாரிலும் மோடியின் வலிமையும் திறமையும் உறுதியும் ஏன் எடுபடவில்லை? அதிலும், பிகார் தேர்தலில் தரையளவு இறங்கி வந்து வகுப்புவாதத்தைக் கிளறி,  மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் நேரடியாக இறங்கிய பிறகும் ஏன் நிதிஷ் குமார் கூட்டணியை வெல்லமுடியவில்லை?

ஒரு வலிமையான தலைவரால் ஏன் செயல்படமுடியாமல் போகிறது என்பதற்கு நரேந்திர மோடியைவிடவும் மேலான இன்னொரு உதாரணம் இல்லை. மோடி ஒருவர் போதும் என்று அவரை மட்டுமே உயர்த்தி முதன்மைப்படுத்துவதன் போதாமையை, பாஜக டெல்லியிலும் பிகாரிலும் அடுத்தடுத்து உணர்ந்துகொண்டது.

தனிநபர் வழிபாடு, தொடக்கத்தில் சில பலன்களை அளிப்பதுபோல் தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் நீடித்த பலனை அளிக்காது என்பதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது.  தனிப்பட்ட முறையில் பல உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்த பிரதமர்களை நாம் பார்த்துவிட்டோம். இந்தியாவின் முதல் பிரதமரின் வியத்தகு ஆளுமையும் நிர்வாகத்திறனும், 1962 சீனப் போரைத் தடுத்துவிடவில்லை. எமர்ஜென்சி பிரகனடம் செய்ய முடிந்த ஒரே வலிமையான பெண் பிரதமரான இந்திரா காந்தியால், 'கரீபி ஹட்டாவ்...' (வறுமையை ஒழிப்போம்) என்றுதான் முழங்கமுடிந்தது; ஏழைகளைத்தான் அகற்றமுடிந்தது, ஏழைமையை அல்ல. அவருடைய மகனான ராஜீவ் காந்தியின் வசீகரத்தை ஃபோபர்ஸ் கபளீகரம் செய்தது. இந்தி பேசாத மாநிலத்திலிருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தந்தை என்று புகழப்பட்ட நரசிம்ம ராவின் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

புகழ்பெற்ற இந்தி கவிஞரும், மென்போக்கு கொண்ட இந்துத்துவர் என்று அழைக்கப்பட்டவருமான வாஜ்பாயால் நாடாளுமன்றத் தாக்குதலையோ, கார்கில் போரையோ தவிர்க்க முடியவில்லை. தன் ஆட்சிக்காலத்தில்,  தன் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் ஆளும் மாநிலத்தில் அரங்கேறிய குஜராத் 2002 கலவரங்களை,  குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட அவருக்கு வார்த்தைகள் கிட்டவில்லை. பின்னர் முஸ்லிம்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தவராகக் கருதப்பட்ட நரேந்திர மோடியின் மதியூகத்தையும், புஜபலத்தையும் மீறி இன்று பதான்கோட் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், அடுக்கடுக்காக ஊழல்கள் நிகழ்ந்தாலும் தன்னளவில் நேர்மையானவர் என்று அவருடைய அரசியல் எதிரிகளாலும் கருதப்படுபவரால் நாட்டை அல்ல, தன் கட்சியையேகூட கடுகளவும் மாற்றமுடியவில்லை என்பதே நிஜம்!

இந்த வரிசையில் இன்னொரு பரபர உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே ஆரம்பித்துவைத்த மாபெரும் போராட்டத்தையும், அதற்கு ஆதரவு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்திய ஒரு பெரும் நடுத்தர வர்க்க கூட்டத்தையும் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொண்டு, டெல்லியில் பெரும் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். அதை ஆம் ஆத்மியின் வெற்றியாக ஊடகம் கொண்டாடித் தீர்த்தது. மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் இளைஞர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள், என்ஜிஓக்கள் போன்றவர்களுக்கு கெஜ்ரிவால் ஒரு வெற்றிகரமான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைய தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் உறுதியான சாதனை என்று எதுவொன்றையும் டெல்லியில் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. தனது வெற்றிக்குப் பிறகு கெஜ்ரிவால் பலமுறை செய்தி வெளிச்சத்தில் தென்பட்டார். ஆனால் ஒருமுறைகூட நல்ல காரணத்துக்காக அல்ல. மோடி, கெஜ்ரிவால் இருவரும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன்கள் என்பதை மீடியாவும், மக்களும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

உச்சத்தில் கதாநாயக வழிபாடு!

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, என்.டி. ராமாராவ், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, நவீன் பட்நாயக், ஷீலா தீட்சித், அரவிந்த் கெஜ்ரிவால் என்று தொடங்கி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆளுமைத் திறன் கொண்ட, செல்வாக்குமிக்க தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலரும் தங்களுடைய தனிப்பட்ட ஆளுமையை ஒரு கருவியாகப் (பல சமயம் ஒரே கருவியாக) பயன்படுத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள். (ஜோதிபாசு, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்ற இடதுசாரி கட்சித் தலைவர்களை மட்டுமே இந்தப் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கமுடியும். ஏனெனில், இடது கட்சிகள் உறுத்தலான தனிநபர் வழிபாட்டுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்).

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தலைவர்கள் மேற்கொண்ட பணிகள் பலவும் கதாநாயக வழிபாட்டை மேலும் அதிகரிக்கவே பயன்பட்டன. இதை உணர்ந்த தலைவர்கள் நாயக வழிபாட்டை வளர்ப்பதற்காகவே கவர்ச்சிகரமான நலத்திட்டங்களை மேற்கொள்ளவும் தொடங்கினார்கள். இலவசங்களை அள்ளிக் கொடுப்பதன் மூலமும், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதன் மூலமும் ஒரே நேரத்தில் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொண்டதோடு, தேர்தலில் வெற்றியையும் உறுதி செய்துகொண்டார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மத்திய, மாநிலத் தலைவர்கள் வகித்த பாத்திரத்தை ஆராயும் ஒருவருக்கு இந்த உண்மைகள் நன்கு புலப்படும்.

திருப்பதிக்குச் சென்ற கையோடு சென்னை வந்து என்.டி.ஆரை வணங்கிவிட்டுச் சென்ற பெரும் ஆந்திரக் கூட்டத்தினரை நாம் கண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆரை கிட்டதட்ட சிறு தெய்வமாகவே மாற்றிவிட்டார்கள். ரஜினி தொடங்கி அஜித் வரை பல நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்யப்படுவதையும் காண்கிறோம். தங்கள் தலைவருக்காக உயிரைக் கொடுக்க இன்றும் ஒரு பெரும்கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. அபிமானத்தை வெளிப்படுத்த அவ்வப்போது அவர்கள் உயிரைக்கொடுக்கவும் தயங்குவதில்லை. உலகம் தழுவிய அளவிலும் இந்தக் கதாநாயக வழிபாட்டைக் காணமுடியும் என்றாலும், இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த வழக்கம் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் கடவுளுக்கு இணையானவராகவும் அசாத்திய, அதிசய ஆற்றல்களைக் கொண்டிருப்பவராகவும் கட்டமைக்கப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றபோதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் அடுத்தடுத்து உருவாக்கிய பெரும் எழுச்சிகள் தனிமனித வழிபாட்டை அதன் உச்சத்துக்கே எடுத்துச் சென்றது. அலகு குத்திக் கொள்ளுதல், தீ மிதித்தல், சிலுவையில் அறைந்துகொள்ளுதல், மொட்டை போட்டுக்கொள்ளுதல், உடலில் கொக்கிகளை மாட்டி தேர் இழுத்தல் உள்ளிட்ட கடவுள், சிறுகடவுள் வழிபாட்டு முறைகள் அனைத்தையும் தங்களுடைய அரசியல் தலைவிக்காக அவர்கள் நிகழ்த்திக்காட்டினார்கள்.

இந்தத் தனிநபர் வழிபாட்டைக் குறிப்பிடத்தக்க ஆர்வத்துடன் வளர்த்துவிட்டதில் அச்சு, காட்சி ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. அரசியல் என்பதை அரசியல் தலைவர்கள் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக்கொண்டு செய்திகளையும், கட்டுரைகளையும், விவாத நிகழ்ச்சிகளையும் ஊடகத்தினர் கட்டமைத்தார்கள். அரசியல் விமரிசகர்களும் ஆய்வாளர்களும்கூட இதைத் தாண்டி விரிவாகச் சிந்திக்கவில்லை. அரசியல் தலைவர்களின் பேட்டிகள், அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், அவர்களுடைய வெற்றி, தோல்விகள், குறைகள், போதாமைகள் ஆகியவற்றை மையப்படுத்தியே அலசல்களும் விவாதங்களும் நிகழ்ந்தன. தேர்தல் வந்துவிட்டால் கூட்டணிக் கணக்கு, வாக்கு வங்கி, கட்சித் தாவல்கள், தொகுதிப் பங்கீடுகள், கருத்துக் கணிப்புகள் போன்றவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. விமரிசனங்களும்கூடத் தனி நபர்களோடு தொடங்கி தனி நபர்களோடு முடித்துக்கொள்ளப்பட்டன.  

நித்தம் நித்தம் இந்தச் செய்திகளை உள்வாங்கிக்கொண்ட மக்களும், அரசியலைத் தலைவர்களை மையப்படுத்தியே புரிந்துகொள்ளவும், விவாதிக்கவும் தொடங்கினார்கள். தி.மு.கவா... அ.தி.மு.கவா? விஜயகாந்த் யாரை ஆதரிப்பார்? நாஞ்சில் சம்பத்துக்குக் கொடுக்கப்பட்ட இனோவா என்னாகும்? டிராஃபிக் ராமசாமிக்கு மட்டும் வயதாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல தலைவராக உருவாகியிருப்பார். என்ன செய்தாலும் வைகோவுக்கு பாவம் அதிர்ஷ்டமே இல்லை! கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள்தான், ஆனால் அவர்களெல்லாம் ஜெயிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? ரஜினி மட்டும் பாஜகவுக்கு வந்தால் ஒரே தூக்காகத் தூக்கிவிடமாட்டாரா கட்சியை? மாற்றுக் கோணத்தில் சிந்திப்பதாக நினைத்துக்கொண்டவர்கள்கூட இந்த எல்லைளுக்கு உட்பட்டேதான் சிந்தித்தார்கள். உதாரணத்துக்குச் சில. நோட்டோவுக்கு அதிகம் குத்தினால்தான் இந்த அரசியல்வாதிகளுக்குப் புத்தி வரும். அரசியல்வாதிகளே வேண்டாம், சகாயம் போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்கள் பதவிக்கு வருவதுதான் நல்லது. அன்னா ஹசாரே போன்ற காந்தியவாதிகளைத்தான் நம்பவேண்டும். கவர்னர் ஆட்சிதான் நல்லது. காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆக, தேவை தலைவர் அல்ல, செயல்திட்டம்!

மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தமிழகத்தின் முதல்வர், இந்தியாவின் பிரதமர் இருவரும் தனிநபர் வழிபாட்டையும், அதை வளர்த்தெடுக்கும் அனைத்துப் பிற்போக்குப் பண்புகளையும் ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்கும்வரை இந்தியா ஒரு நிலப்பிரபுத்துவச் சமூகமாகவே நீடித்திருக்கும்.


அரசியல் தலைவர்கள் உயர்த்தப்படும்போது கொள்கைகள் மரித்துப்போகின்றன. கொள்கைளின் கழுத்தில் ஏறி நின்றுதான் தலைவர்கள் புகழ் வெளிச்சத்தை ஈர்க்கிறார்கள். இன்றைய தேதியில் திட்டவட்டமான சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கை எதையுமே வகுக்காமல் அல்லது பிரசாரம் செய்யாமல், ஒரு தலைவரால் தன் புகழை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் நின்று, ஊடகத்தின் வரவேற்பையும் மக்களின் வரவேற்பையும் ஒருசேர பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். கதாநாயக வழிபாடு தினம் தினம் வளர்த்தெடுக்கப்படுவதால் நிகழும் விபத்து இது. மதுவைக் காட்டிலும் அதிகமான போதையையும்,  நீண்டகால சேதத்தையும் அளிக்கும் இந்த வீர வணக்க உணர்வை மக்களிடமிருந்து ஒழிப்பதுதான் நம் முதன்மையான தேவை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. ஆனால் இதில் பெருமிதப்பட ஒன்றுமில்லை என்கிறார் அரசியல் கோட்பாட்டாளர் பிக்கு பாரேக். அதற்கு நான்கு காரணங்களை அவர் முன்வைக்கிறார்.

1) சமூக ஏற்றத்தாழ்வு மிகக் கடுமையாக நிலவுகிறது.

2) வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இல்லை.

3) அரசு என்பது மக்கள் நலன் சார்ந்த, மக்கள் முன்னேற்றத்தின்மீது மட்டுமே அக்கறைகொண்ட ஒரு நிறுவனமாக இல்லை.

4) ஏழைமை இன்னமும் ஒழியவில்லை.

ஜனநாயகத்தை அமைப்பது எளிது, குடியரசை நிறுவுவதுதான் கடினமானது என்கிறார் பாரேக். இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம்; ஆனால் ஒரு குடியரசாக இல்லை. நாட்டின் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதால் மட்டுமே இதனைக் குடியரசு என்று சொல்லிவிடமுடியாது. சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டுவந்தால்தான் அது குடிமக்களின் அரசாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமையை அளிப்பது மட்டுமே ஜனநாயகத்தின் வேலை. அதை மட்டும்தான் ஜனநாயகத்தால் செய்யமுடியும். ஒரு குடியரசை  நிறுவ வேண்டுமானால் அங்குலம் அங்குலமாகப் போராடியே அதனை அடையமுடியும் என்கிறார் பாரேக். இந்த வழியில் இந்தியாவை மாற்றி அமைக்க வேண்டுமானால் நமக்குத் தேவை இந்தத் தலைவருக்குப் பதில் இன்னொரு தலைவர் என்னும் அதே பழைய வழிமுறை அல்ல. புதிய அணுகுமுறை!

தலைவர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்னும் கருத்து பழைமையானது மட்டுமல்ல பிழையானதும்கூட. ஆனால் இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து எல்லா ஆய்வாளர்களும் செய்து வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசரையும், அலெக்சாண்டரையும், நெப்போலியனையும் தெரிந்துகொண்டால் ரோம், கிரேக்கம், ஃபிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் தெரிந்துகொண்டது மாதிரி என்றுதான் அவர்கள் நம்பினார்கள். ஆனால் ரோமும், கிரேக்கமும், பிரான்ஸும் இந்த மூன்று தலைவர்களைக் காட்டிலும் மிகப் பெரியது; இந்தத் தலைவர்களின் செயல்பாடுகளால் இந்த நாடுகள் மாற்றமடைந்தது நிஜம் என்றாலும், அவர்களே இந்நாடுகளின் வெற்றி, தோல்விகளை முழுக்க நிர்ணயித்தார்கள் என்னும் முடிவுக்கு வருவது ஆபத்தானது.

வரலாறு மேலிழுந்து கீழாக உருவாவதில்லை. அடித்தளத்தில் உள்ள மக்களே வரலாற்றின் உந்து சக்தியாவார்கள். இதுவரை சமூகத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள்  அனைத்தும் மக்களால், அவர்களுடைய போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகியுள்ளன. அரசியல் தலைவர்களால் எல்லைக்குட்பட்ட குறைந்தபட்ச மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

இப்போது நமக்குத் தேவை, அப்படிப்பட்ட ஒரு மாற்றம் அல்ல. ஒரு புரட்சிகர அரசியல், சமூகப் பொருளாதார மாற்றம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை யோசிக்கத் தொடங்குவதுதான் இப்போதுள்ள தேவை. அதற்கு நாம் முதலில் செய்யவேண்டியது தலைவர் மயக்கத்தில் இருந்து விடுபட்டு கண்விழிப்பதுதான்!

posted by Vellaisamy S 9962507291 in WhatsApp Comrades Group

subjective report on officers working conditions

What they don’t tell you about officers’ jobs in Public Sector Banks
(Just go through this article written by Unknown to have practical working conditions in PSBs)

There is something inherently wrong with an organization and its HR policies in which the clerks of the organization do not aspire to get promoted and become officers! This singular aspect explains everything that is wrong with the policies of public sector banks in India.

A vast majority of the senior clerks who have put in fifteen or more years of  service in the bank routinely opt out of the promotion process. When one scratches the surface, this apparently illogical behavioral pattern is not so devoid of logic. Sample some of these facts

The pay that senior clerks get is quite attractive, for the work that they do. Their take-home pay is actually comparable to what the officers get, may be a few thousands less.

The clerks have regulated working hours. Nobody, not even the chairman, can hold them back more than 30 minutes beyond the fixed office timings without compensating them monetarily for the additional hours put in.

They do no get transferred every 2-3 years, meaning it gives them a better social life and their children, better grades in school.

Clerks or Assistants as they are called, are required to do only well defined jobs, often times they get away saying that they do not know how something is done, if that ‘something’ is not what they do on a daily basis.

All these and a lot of other facts compare very favorably with the rather difficult, joyless and frustrating lives of officers, especially the younger officers.

There was a time, not so long ago, when a bank Probationary Officer’s  was amongst the most sought after jobs in the country. It came only second in importance to the coveted career in the Indian Administrative Service/ Indian Foreign Service.

Public sector banks are headed for a double whammy in the months ahead on account of the fact that almost 35% percentage of their old warhorses are superannuating and almost 40% of the new recruits hired to replace them, are not staying beyond an average of two to three years.
What has led to this state of affairs ? Why is the job of a bank PO being given up by most ambitious youngsters within months of the probation period getting over.

1)     An officer in a PSB, is not expected to have a balanced life; period.

As per the Officers’ Service Rules, officers are required to be available to the bank 24 hours a day. I reckon at a theoretical level, this is unavoidable, in the sense that an officer should  not be doing a parallel business or  be engaged in any other activity that is detrimental to the interest of the bank. But in reality, the bank actually expects its officers to be in office for almost all his waking hours. A typical officer is expected to sit late and work on Sundays and holidays. All this without any incentive, like overtime pay for the extra hours put in. A typical officer, therefore reaches office around 9 am and leaves office not sooner than 8 pm. Depending on where he is posted, and if one takes into account commute time, one can imagine, if the officer  really has a life outside his workplace.

2)     Immense work pressure

A typical branch in a Public Sector Bank is almost certainly understaffed. If an average able bodied person can perform X amount of work comfortably on a given day, every bank employee is made to work at least 1.75X; officers are loaded with anywhere between 2X to 4X. This explains  why the officers have no option but to sit late routinely and even sacrifice their Sundays and holidays; to do justice to the huge amount of work  thrust on them.
When someone exceptionally organized and efficient, after completing his 4X share, tries to leave at 6.30 pm or so, more work is loaded on to him to ensure that he does not leave before 8pm.
A question routinely asked to officers under probation, who have relatively lesser work-load when he tries to leave office by around 6 pm is why as a bachelor he wants to leave early when he is staying away from parents  ?!
What  this does is that, very early in one’s career, officers get conditioned to the fact that, a ‘smart officer’ is one who takes the longest to complete the tasks assigned to him and that the one who spends the most hours at work is seen as the most committed and loyal and hence the most suited to be rewarded and promoted.
Efficiency has absolutely no value and meaning in a PSB.

3)     High accountability

Understandably, because one is dealing with finances, there is very little margin for error in banking. But then bankers are humans, they work under a lot of pressure and mistakes are inevitable. Any small mistake is  severely punished. On the other hand, there is no incentive of any sort for performing well or increasing the business.
This  aspect is even more relevant for those working in the credit department. The only reward, as has been alluded to earlier, for good work is more work.
Inadvertent lapses, can lead to issue of memos, inquiries, personal accountability and even CBI cases, especially in the credit department.
There is not even benefit of an extra rupee for doing well in credit.The unwritten rule is, the less risk taken, the better it is.Make no mistakes of any sort, be conservative, sit late in office, work on Sundays and holidays, do not do any real value addition and one becomes the model employee in the organization.Do less work and take home your fixed pittance of a salary, performance can go take a hike.

4)     Poor ( Laughable) compensation
It is not easy to become a Probationary Officer in State Bank of India.It is an intensely competitive exam and only the really hardworking actually make it.
Objectively speaking, a large no of bright, ambitious and capable youngsters join the banking industry allured by the totally wrong impression or ignorance about the working conditions and the monotony of the job, not to speak of the totally pathetic HR policies.
The salary scales of all the public sector banks in the country are the same and these are the lowest when compared to any of the state govt/ central govt  or govt public sector undertakings in the country.
It is not like the banks are not running on losses or making only a nominal profit. An organization like State Bank of India  is one of the most profitable ones in the country, that on an average makes a y.o.y profit of 30 %. SBI declared profits of  over 11,700 crores in the most recent financial results.

5)     Frequent transfers
Every two or three years, the officer is to uproot and relocate to a new place. This practice, deprives the officer of any semblance of a  happy married life,  if he or she has a working spouse.
With the thrust for greater financial inclusion and ever more branches being opened in semi urban and rural areas all over the country, officers are getting posted in ever more remote places.

The biggest problem faced by the public sector banks is the rising resentment and frustration level of their employees.If these organizations do not wake up to this reality, some of them may just cease to exist in the next decade.

posted by senthildivya 9840470130 in WhatsApp Bannk Association Group

வஞ்சிக்கப்படும் வங்கி முகவர்கள்

வஞ்சிக்கப்படும் வங்கி முகவர்கள்
   
சொற்ப சம்பளம், தாங்க முடியாத வேலைப் பளுவுடன் பணி செய்கிறார்கள் தொழிலாளர்கள்
வங்கிகளில் கணினி முன்பு அமர்ந்து பணி செய்யும் வங்கி எழுத்தர்களைத்தான் பொதுவாக எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால், எழுத்தர்கள் மற்றும் காசாளர்கள் செய்யும் அத்தனை வேலையையும், வங்கிக் கிளையிலேயே அமராமல், வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் சுற்றியலைந்து பணி செய்யும் வங்கி ஊழியர்களைப் பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாது. ஏன், கணிசமான வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுக்குக்கூட அப்படி ஒரு பகுதி ஊழியர்களைப் பற்றியோ, அவர்களின் பரிதாப பணிநிலை பற்றியோ தெரியாது. வியாபார முகவர்கள் என்ற பெயரில் சொற்ப சம்பளத்தில் கிராமப்புறங்களிலும், சிறு நகர்ப்புறங்களிலும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கப்படுகிறார்கள் இவர்கள்.
கடும் பணிச் சுமை
இவர்களது அன்றாட பணியைப் பற்றித் தெரிந்து கொண்டால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். காலை கிளை திறப்பதற்கு முன்னால் வர வேண்டும். மாலை கிளை மூடும் வரை இருக்க வேண்டும். மாதச் சம்பளம் சராசரியாக ரூ. 2,500. கொண்டுசெல்லும் ஸ்மார்ட் மெஷினின் நெட் கார்டு ரீசார்ஜுக்கு ரூ. 200, பெட்ரோலுக்கு ரூ. 300 என்று மொத்தம் ரூ. 3,000 கிடைக்கும். ஒரு பண வரவு அல்லது பட்டுவாடாவுக்கு கமிஷனாக ஒரு ரூபாய். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 60 பட்டுவாடாவுக்கு மேல் செய்ய முடியாது. பெரும்பாலான பணியாளர்களின் நிலை இதுதான்.
இவை போதாதென்று வேறு பிரச்சினைகளும் உண்டு. கிராமங்களில் சிக்னல் கிடைக்காததால் ஸ்மார்ட் மெஷின் வேலை செய்யாது. இதனால், பட்டுவாடா தாமதமாகும். முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், நூறு நாள் வேலைத் திட்டச் சம்பளம் என்று பல பணிகளை இவர்கள் செய்கிறார்கள். இவற்றைத் தவிர, பிரதம மந்திரி ஜன் தன் கணக்குத் திறப்பது, இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ப்பது என்று புதுப் புது வேலைகள் கொடுக்கப்படுவதால் பணிச்சுமையைத் தாங்க முடியாமல் அல்லாடுகிறார்கள். இரண்டு சக்கர வாகனம்கூட இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவற்றை வாங்கக் கடனும் கொடுக்கப்படுவதில்லை. சொந்த வண்டியில் லட்சக்கணக்கான தொகையுடன் சென்றுவருவதில் இருக்கும் பிரச்சினைகள் இவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன.
இப்படிச் சுரண்டப்படும் வங்கி முகவர்களின் எண்ணிக்கை அகில இந்திய அளவில் சுமார் இரண்டு லட்சம் இருக்கும். இவர்கள் பொதுத் துறை, தனியார் துறை, கிராம வங்கிகளால் நேரடியாகவோ அல்லது பெரிய முகவர்கள் மூலமாகவோ பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருக்காது. பல வங்கிகள் இவர்களின் பெயர்களை அவற்றின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளன. ஆனால், எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் கணிசமானவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வேலையில் இருப்பவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் உள்ள, வேறு எந்த வேலைவாய்ப்பும் இல்லாத ஏழை வாலிப, நடுத்தர வயதான ஆண்களும் பெண்களும்தான். எல்லா வங்கிப் பணிகளையும் செய்யும் இத்தகைய வியாபார முகவர்கள் வங்கி ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
மூல காரணம் ரிசர்வ் வங்கி
வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு விடுவதற்கு முக்கியக் காரணம், 2006-ல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட கொள்கை அறிவிப்பில், “பொதுத் துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் கேந்திரமான நிர்வாகப் பணிகள் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் வெளியாட்களுக்கு விட்டுவிடலாம்” என்று பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ளதுதான்.
கூடவே, இவ்வாறு ‘அவுட்சோர்ஸ்’ செய்வதால் நிறுவனத்தின் பெயர் கெடுதல் உள்ளிட்ட பத்து வகையான ஆபத்துகள் உள்ளன. எனவே, பார்த்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறது ரிசர்வ் வங்கி.
முறையான பணியாளர் மூலமாக நடைபெறும் தொடர்ச்சியான பணியை வெளியாட்களிடம் விடுவதை, ஒப்பந்தத் தொழில் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டம் 1970 தடை செய்கிறது. வங்கி நிர்வாகங்களுக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே 2005-ல் போடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தில், வங்கிப் பணியாளர்கள் மூலம் செய்ய முடியாத, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த விசேஷ நடவடிக்கைகள் தவிர, எதையும் வெளியாட்களுக்கு விடக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டப்படி, ஒப்பந்தப்படி தடுக்கப்பட்ட தொடர் பணிகள் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பின் காரணமாகத்தான் வெளியாட்களுக்கு விடப்படுகின்றன.
ஒருபுறம் 10 வகையான ஆபத்துகளைச் சுட்டிக்காட்டிய ரிசர்வ் வங்கி, மறுபுறம் தனது முன் அனுமதி இல்லாமல் எந்த வங்கி வேண்டுமானாலும் வங்கிப் பணியை உள்நாட்டு, வெளிநாட்டு முகவர்களிடம் விட்டுவிடலாம் என்று அறிவித்து, தனது பொறுப்பை முழுமையாகத் தட்டிக்கழித்துவிட்டது.
செலவே பிரதான காரணம்
“உலகம் முழுவதும் நிரந்தர வங்கிப் பணிகள் மேலும் மேலும் வெளியாட்களுக்கு விடப்படுவதற்கு, செலவுக் குறைப்பும் விசேஷ நிபுணத்துவம் பெறுவதுமே பிரதான காரணங்கள்” என்று ரிசர்வ் வங்கி, இக்கொள்கை அறிவிப்பின் அறிமுகப் பகுதியில் கூறுகிறது. வியாபார முகவர்கள் மூலமாக விசேஷ நிபுணத்துவம் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே, செலவுக் குறைப்பு மட்டும்தான் முக்கியக் காரணம்.
இந்நிலையில், சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றதுபோலவே இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 14 முதல் 16 வரை மீண்டும் ‘க்யான் சங்கம்’ என்று பெயரிடப்பட்ட பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுத் துறை வங்கிகளைச் சுற்றி வளைத்து தனியார்மயமாக்குவது, அதற்கு முன்பாக அவற்றை ஒன்றோடொன்று இணைத்து, பல்லாயிரக்கணக்கான கிளைகளை மூடுவது, ஏழை விவசாயிகளுக்குச் சலுகை வட்டியில் வழங்கப்பட்டு வரும் முன்னுரிமைக் கடனுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, நிரந்தர வங்கிப் பணிகளை மேலும் மேலும் வெளிப் பணியார்களுக்குக் கொடுப்பது உள்ளிட்ட மோசமான பல முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன.
நியாயம் கிடைக்க வேண்டும்!
நம் நாட்டில் 6,32,000 கிராமங்கள் உள்ளன. வணிக வங்கிகள், கிராம வங்கிகள் ஆகியவற்றின் மொத்த கிராமப்புறக் கிளைகள் 49,000ஐத் தாண்டாது. மொத்தமுள்ள கிராமங்களில் 8%க்கும் குறைவான கிராமங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் உள்ளன. “வளர்ந்த நாடுகளிலும், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் ஒரு லட்சம் வயது வந்தவர்களுக்கு 40 கிளைகள் உள்ளன. இந்தியாவில் 7 கிளைகள் மட்டுமே உள்ளன” என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. அதன்படி பார்த்தால் தற்போதுள்ள கிளைகளின் எண்ணிக்கை 1.27 லட்சத்திலிருந்து 3.8 லட்சமாக, மூன்று மடங்கு உயர வேண்டும்.
எனவேதான், ‘வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். நிரந்தரப் பணிகளை வெளியாட்களுக்கு விடக் கூடாது. தேவையான எண்ணிக்கையில் நிரந்தரமாக ஆட்களை நியமிக்க வேண்டும். தற்போதுள்ள வெளிப் பணியாட்களை நிரந்தரப்படுத்த வேண்டும் - அதுவரை அவர்களுக்கு, நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்’என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வங்கி ஊழியர் அமைப்புகள் போராடிவருகின்றன. அவர்களது நியாயமான போராட்டத்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.
- சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com