Wednesday, December 2, 2020

கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்

  நன்றி இந்து தமிழ் திசை டிசம்பர் 1, 2020

கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில் நுட்பம் 

By செய்திப்பிரிவு

கீழடியின் தொன்மை மட்டுமல்ல, அன்றைய காலத்தின் பொருள் பயன்பாட்டுப் பண்பாடும், அதன் தொழில்நுட்பங்களும்கூட மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று, நானோ தொழில்நுட்பத்தின் கூறுகள் பானை சுடுவதில் பயன்படுத்தப்பட்டிருப்பது. கீழடி அகழாய்வில் கிடைத்த பானை ஓட்டை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஆய்விதழான ‘நேச்சர்- சயின்டிபிக் ரிப்போர்ட்’ இதழில் இதை மெய்ப்பிக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் உட்புறத்தை வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திப் பார்த்தபோது அதன் கருப்பு வண்ணப்பூச்சில் கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன என்பதே அந்தக் கட்டுரை தரும் வியப்பூட்டும் செய்தி. கட்டுரையாசிரியர்களான விஐடி பேராசிரியர் சந்திரசேகர், ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் மோகன், இவரது குழுவினர் கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் உட்புறச் சுவரில் பூசப்பட்டிருக்கும் கருப்பு வண்ணம் பளபளப்புத்தன்மை குறையாமலும் சிதையாமலும் இருந்ததற்குக் காரணம் கார்பன் நானோ குழாய்களே என்கின்றனர்.

நானோ தொழில்நுட்பம்

மிக மிகச் சிறிய அளவில் (நானோ மீட்டர் அளவில்) பொருட்களை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம். ஒரு மீட்டரை நூறு கோடி பாகமாக பிரித்தால், அதில் ஒரு பாகமே ஒரு நானோ மீட்டர். இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் கருவிகள் கணினி, வானியல், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. நானோ தொழில்நுட்பம் இயற்கையிலேயே இருக்கிறது. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததற்குக் காரணம் நானோ அளவில் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பு. மருத்துவத் துறையிலும், கணினித் துறையிலும் நானோ தொழில்நுட்பப் பயன்பாட்டின் சாத்தியங்கள் கணக்கில் அடங்காதவை. கிராபீன் மூலக்கூறு என்பது அறுங்கோண வடிவில் வலுவான சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களால் ஆன ஒற்றை அடுக்கு அமைப்பாகும். இந்த கிராபீன் படலத்தைப் பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டினால் கிடைப்பதுதான் கார்பன் நானோ குழாய்கள். ஒற்றைச் சுவர் கொண்டதாகவும், பல்சுவர் கொண்டதாகவும் இரண்டு விதமான கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன.

பல்சுவர் கார்பன் நானோ குழாய்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நானோ குழாய்கள் ஒன்றின் மேல் ஒன்று சுருட்டியதுபோல இருக்கும். கார்பன் நானோ குழாய்களின் இழுவிசையைத் தாங்கும் வலிமை அதே அளவுள்ள எஃகை விட நூறு மடங்கு அதிகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் பானை ஓடுகளில் இருக்கும் கருப்பு வண்ணப்பூச்சு சிதையாமல் இருப்பதற்கு இந்த உறுதித்தன்மைதான் காரணம்.

கீழடியில் நானோ

கீழடியில் எடுக்கப்பட்ட பானை ஓடுகளில் ஒற்றைச் சுவர் நானோ குழாய்கள், பல்சுவர் நானோ குழாய்கள் என இரண்டுமே கண்டறியப்பட்டிருக்கின்றன. ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழாய்களின் விட்டம் 0.6 நானோ மீட்டர். இதில் சிறப்பு என்னவென்றால், 0.4 நானோ மீட்டர்தான் இயற்பியல் விதிகளின்படி சாத்தியம். அதற்கும் மிகச் சிறியது சாத்தியமில்லை. கீழடியில் கண்டறியப்பட்டது கிட்டத்தட்ட அந்த எல்லைக்கு அருகில் இருக்கிறது. அதேபோல், பல்சுவர் நானோ குழாய்களின் உள் விட்டம் 3 நானோ மீட்டர்.

தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களில் கார்பன் நானோ குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது இது முதன்முறையல்ல. மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களிலும், டமாஸ்கஸ் எஃகிலும் நானோ துகள்கள், கார்பன் நானோ குழாய்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த நானோ குழாய்கள் கி.பி. 8 அல்லது 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. தற்போது கீழடியில் கண்டறியப்பட்ட கார்பன் நானோ குழாய்களோ 2,400 வருடங்களுக்கும் முந்தியவை. இதுவே அனைவரின் வியப்புக்கும் காரணம்.

தமிழர்களின் பட்டறிவு

தற்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாக்க மூன்று அல்லது நான்கு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கார்பன் சார்ந்த ஏதேனும் ஒரு சேர்மத்தை எடுத்து குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றி மிக உயர் வெப்ப நிலையில், அதாவது 1,200 செல்சியஸ் அளவுக்கு வெப்பப்படுத்தினால் கார்பன் நானோ குழாய்கள் உருவாகும். மற்ற முறைகள் அனைத்துக்கும் நவீன வேதியியல் தொழில்நுட்ப முறைகள் தேவை. எனவே, மிக உயர் வெப்ப நிலையில் சூடாக்குவதன் மூலம்தான் அந்தக் காலத்து மக்கள் இதைச் சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.

சங்க காலத் தமிழர்கள் இரும்பு உருக்குவதிலும் பானை சுடுவதிலும் மிகச் சிறந்தவர்கள் என்பது அறிந்த ஒன்றே. பானை சுடும்போது அதில் வெவ்வேறு வண்ணங்கள் பூசுவது வழக்கம். அப்படிப் பூசும் வண்ணங்கள் சிதையாமலும் மங்காமலும் இருக்க வேண்டுமென்றால் எவ்வளவு வெப்பநிலை வரை பானைகளைச் சுட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தாவரம், மரம், செடி கொடிகளிருந்து வண்ணம் தயாரித்திருப்பார்கள். தாவரப் பொருட்களில் கார்பன் சார்ந்த சேர்மங்கள் நிறைய இருக்கின்றன. இப்படி வண்ணம் பூசப்பட்ட பானைகள் உயர் வெப்ப நிலையில் சுடப்படும்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாகியிருக்க வேண்டும். குறிப்பிட்ட உயர் வெப்ப நிலையில் பானை சுடப்பட்டால் அதில் பூசப்படும் வண்ணப்பூச்சு சிதையாமல் இருக்கும் என்ற பட்டறிவு 2,400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது உண்மையில் வியப்புக்குரிய விஷயம்தான்!

- ஜோசப் பிரபாகர், இயற்பியல் உதவிப் 




பேராசிரியர், லயோலா கல்லூரி.

Thursday, November 19, 2020

மார்க்சிய அரசியல் பொருளாதாரமே தேச வளர்ச்சிக்கான அடித்தளமாக உள்ளது – சீன குடியரசுத் தலைவர் ஷி-ஜின்-பிங் (தமிழில் : சிபி)

சீன நாடு, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை, தேசத்தின் எதிர்கால கட்டமைப்பிற்கான அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றும், மாறிக்கொண்டே வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப அதனை (மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை) தகவமைத்துக்கொள்ளும் என்றும் சீன அதிபர் ஷி-ஜின்-பிங் கூறியுள்ளார்.

சீனாவின் அரசியல் பொருளாதாரமானது, மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படையைக் கொண்டதாக மட்டுமே இருக்க முடியும் என்று அரசியல் கோட்பாடு இதழில் வந்த கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.

தமது நாட்டின் பொருளாதார மாதிரி, சீன பண்புகளை உள்ளடக்கிய சோஷலிச அமைப்பிற்கு ஒரு தூணாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், கட்சியின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவதாகவும் உள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஜி ஜிங்பிங் கூறியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சந்தை திறப்பு நடந்து 30 ஆண்டுக் காலம் ஆகிவிட்ட நிலையில் தற்போது மாறிவரும் உலக சூழல்களில் சீன நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வது கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார்.

சீன மார்க்சிய அரசியல் பொருளாதாரம் காலாவதி ஆகிவிட்டது என்ற கருத்துக்களை  ஷி-ஜின்-பிங் திட்டவட்டமாக மறுக்கிறார். சீன மார்க்சிய அரசியல் பொருளாதாரம் நாட்டின் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் சந்தைக்கு ஒரு முக்கிய பங்கை அனுமதிக்கிறது; மேலும் அரசாங்கத்தின் பங்கை மேம்படுத்துவதாகவும் உள்ளது என அவர் கூறினார்.

China contributes 30% to global economic growth in 2017 – The Mast Online
சீனா தன் நாட்டில் ஏனைய சொத்து உரிமைகளை ஆதரிக்கும் அதே வேளையில், பொது உரிமையில் உள்ள பொருளாதாரத்தை ஆதரிக்கவும், வளர்க்கவும் செய்யும் என்று கூறினார்.

சீன நாட்டினுள் பொது உரிமையின் மேலாதிக்க நிலையையும், பொருளாதார அரசுடைமையையும் அசைக்க முடியாது என்று கூறினார்.

வர்த்தகம், தொழில்நுட்பம், சித்தாந்தம் மனித உரிமைகள் மற்றும் கோவிட்-19 ஆகியன குறித்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சனைகள் உள்ள நிலையில் ஷி-ஜின்-பிங் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பனிப்போர் காலத்தின் சோவியத் ரஷ்யாவை விடச் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா கடினமாகக் கருதுவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சென்றவாரம் கூறியிருந்தார்.

Xi's thought a development of Marxism - Opinion - Chinadaily.com.cn
மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது அதன் முதலாளித்துவ முறையையோ சீனா பின்பற்ற முயலக்கூடாது என்று ஷி-ஜின்-பிங் கூறியுள்ளார்.

பல முதலாளித்துவ நாடுகள் தற்போது பொருளாதார சரிவு, வேலையின்மை, வளர்ந்துவரும் பிரிவினைவாதம், மோசமாகி வரும் சமூக முரண்பாடுகள் போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன என்று ஷி-ஜின்-பிங் கூறினார்.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான வர்த்தக போர், 2018 ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பதற்காக நடப்பதாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, இரு தரப்பிலிருந்தும் காரணங்கள் ஏதுவுமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் இந்த தருணத்தில், அரசியல் காரணங்களால் இந்த பேச்சுவார்த்தை தடைப்பட்டு இருக்கலாம் என்று ரபோ பேங்க்கின் மூத்த அதிகாரி மைக்கேல் எவிரி கூறினார்.

எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் வேளாண் பொருட்களை வாங்க இப்போது சீனா அதிகமான ஆர்டர்கள் கொடுத்திருப்பது பற்றி டிரம்ப் கூறியதை (இது கடந்த ஜனவரியில் உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்) மைக்கேல் எவிரி சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்வார்கள் என்று தெரியாத நிலையில் சீனா தற்போதைக்கு அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஆனால் அந்த நிலை டிரம்பிற்கு சாதகமாக அமையும் போது அந்த உடன்படிக்கை ஒரு கட்டத்தில் சரியும் என்று கருதுகிறோம் என அவர் கூறினார்.

செய்தித்தாள்: சவுத் சீனா மார்னிங் போஸ்ட்

ஆசிரியர் – கரென் யெங்கு

வெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2020

https://bookday.co.in/marxist-political-economy-is-the-foundation-of-national-development-chinese-president-xi-jinping/

தமிழில் சிபி பரத்


Friday, November 13, 2020

சோசலிசம் நோக்கிய பயணம் நவீன தாராளமயச் சூழலில் மிக மிகக் கடினமாக மாறியுள்ளதே!

நாளொரு கேள்வி: 07.11.2020


நவம்பர் புரட்சி தின சிறப்பு பகிர்வு


இன்று நம்மோடு இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார நிபுணர் *பிரபாத் பட்நாயக்* (ஜூலை 2017 Monthly Review இதழில் எழுதிய விரிவான கட்டுரையின் சாரம்- க.சுவாமிநாதன்)

####################


*கேள்வி*


சோசலிசம் நோக்கிய பயணம் நவீன தாராளமயச் சூழலில் மிக மிகக் கடினமாக மாறியுள்ளதே! 


*பிரபாத் பட்நாயக்* 


முதலாளித்துவம் மனித குலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும் வல்லமை பெற்றதாக இல்லை என்பது *வரலாற்று ரீதியாக நிரூபணம்* ஆகிவிட்டது. போர்கள் உள்ளிட்ட கொடூரமான வழி முறைகளைக் கூட கையாண்டு *உழைப்பாளி மக்களை பீரங்கி இரைகளாக்கி அப் பிணக்குவியல் மீது மூலதனக் குவிப்பை நடத்திய, நடத்துகிற ரத்தம் தோய்ந்த வரலாறு* உலகம் முழுவதும் இருக்கிறது. 


ஆனாலும் சோசலிசத்திற்கான பயணம் பல திருப்பங்களை, மேடு பள்ளங்களைக் கொண்டதாகவே இருக்கும். காலம் *புதிய புதிய இணைவுச் சூழல்களை* (Conjuncture) உருவாக்கும். அது அக் காலத்திய வர்க்க பலாபலன்களைப் பொறுத்து அமையும். 


*முதலாளித்துவம் தனது துவக்க காலங்களில் நிலப்பிரபுத்துவத்தை வேரறுப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தது.* அதனால் அது விவசாயப் பெருங்குடி மக்களை தன் பால் ஈர்க்கவும் முடிந்தது. இதனை துவக்க கால முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளில் காண முடிந்தது. ஆனால் பிந்தைய காலங்களில் முதலாளித்துவம் அக் கடமையை கைகழுவி விட்டது. காரணம் அதற்கு அச்சம். விவசாயப் புரட்சியை தானே நிறைவு செய்தால் சோசலிசத்தை நோக்கி நடை போடுவதற்கான உந்துதல் புரட்சிகர சக்திகளுக்கு கிடைத்து விடும் என்பதுதான். ஆகவே *விவசாயப் புரட்சியை நிறைவு செய்ய வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் விழுந்தது.* இதன் விளைபொருளாகவே தொழிலாளி- விவசாயி கூட்டணிக்கான தேவை எழுந்தது. 


*சோசலிசத்திற்கான பயணம்* இவ்வாறு எழும் இணைவுச் சூழல்களுக்கு ஏற்ப தகவமைக்கப்பட வேண்டும். 


முதலாளிகளோடு சேர்ந்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக ஜனநாயகப் புரட்சியை நடத்திய காலங்களில் முதலாளித்துவத்தின் இத்தகைய ஊசலாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது போல சோசலிசப் புரட்சியை முதலாளித்துவத்தை வீழ்த்த நடத்தும் போது விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் ஊசலாட்டத்தை எதிர்கொண்டு அவர்களையும் திரட்டி முன்னேற வேண்டியிருக்கும். 


பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன் இரண்டும் இது குறித்து தருகிற படிப்பினைகள் முக்கியம். அதை இங்கு நாம் விவரிக்கவில்லை. *பிரெஞ்சு புரட்சிக்கு* விவசாய வர்க்கங்களைப் பயன்படுத்திக் கொண்ட முதலாளிகள் *பாரிஸ் கம்யூனின் வீழ்ச்சிக்கும்* அவர்களை ஈர்த்துப் பயன்படுத்த முடிந்தது என்பதை மட்டும் இங்கு பதிவு செய்வது கூடுதலாக இது குறித்த தேடலுக்கு உதவும். 


ஆகவேதான் சோசலிசம் நோக்கிய பயணத்தில், முதலாளித்துவம் ஈடேற்றாத ஜனநாயகக் கடமைகளை முழுமை செய்வதில், *தொழிலாளி - விவசாயிக் கூட்டணியின் தலைமையாக தொழிலாளி வர்க்கம்தான் இருக்க முடியும்.*


மீண்டும் "இணைவுச் சூழல்களுக்கு" வருவோம். எப்படி முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டதோ அது போன்று இணைவுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை மிகச் சரியாக உள்வாங்கி, மதிப்பிட்டு, அதற்கேற்ற திட்டத்தோடு புரட்சியின் கட்டங்களை தீர்மானித்து சோசலிசம் நோக்கிய பயணத்தை அமைத்திட வேண்டும். 


*ஏகாதிபத்தியம்* என்கிற கருத்தாக்கத்தை லெனின் உருவாக்கியது, *அரசுத் தலையீடு நோக்கி உலக முதலாளித்துவம் நகர்ந்து தனக்கு ஓர் மென்மையான முகத்தை தந்து கொண்டது,* பின்னர் சர்வதேச நிதி மூலதனத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலை மையமாகக் கொண்ட *உலகமயப் பாதை* உருவாகியிருப்பது என "இணைவுச் சூழல்களில்" நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கு ஏற்ற தகவமைப்பு சோசலிசம் நோக்கிப் பயணித்தவர்களுக்கு தேவைப்பட்டது. மார்க்சீய கருத்தியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கும் இதுவெல்லாம் காரணிகளாக அமைந்துள்ளன. 


தற்போதைய *நவ தாராளமய "இணைவுச் சூழலை" எவ்வாறு எதிர் கொள்வது* என்ற விவாதத்திற்கு வருவோம். 


இன்றைய இணைவுச் சூழலில் உழைப்பாளி மக்களின் துயர் களைய *அரசு தலையீடு* தேவைப்படுகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் தளையிலிருந்து விடுபட்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்குகிற சுதந்திரம் அரசுக்கு இருக்க வேண்டும். இச் சுதந்திரத்தை இரண்டு வழிகளில்தான் எட்ட இயலும். ஒன்று எல்லா பெரிய தேசிய அரசாங்கங்களும் கை கோர்த்து (மாற்று உலக அரசாங்கம் போன்று) சர்வதேச நிதி மூலதனத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்க வேண்டும். இரண்டாவது, தனித் தனி நாடுகளோ, குழுவாகவோ சர்வதேச நிதி மூலதனப் பிடியில் இருந்து விடுபட்டு மூலதனக் கட்டுப்பாடுகளை விதித்து மாற்று நிகழ்ச்சி நிரலை மேற்கொள்ளலாம். 


இதை விவரிப்பதெனில், கிராக்கியின் அளவை உயர்த்தி வேலையின்மை குறைக்க வேண்டும். ட்ரம்ப் போல *"அக்கம் பக்கத்தாரிடம் இருந்து பிடுங்குவது"* (Beggar thy neighbour) என்ற வழிமுறையை கடைப் பிடித்தால் மற்ற நாடுகளும் தங்கள் சந்தையைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அது நெருக்கடியை ஆழப்படுத்தி வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும். 


அரசின் *பணக் கொள்கைகள்* (Monetary policies) இன்று கிராக்கியை உயர்த்துகிற சக்தியற்றவையாக உள்ளன. ஆகவே *நிதிக் கொள்கைகள்* வாயிலாகவே அது நடந்தேற வேண்டும். 


அதற்கு *இரண்டு வாய்ப்புகள்* உள்ளன. ஒன்று, சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறாக பெரிய தேசிய அரசுகள் சில, நிதி ஊக்கத் திட்டங்களை (Fiscal stimulus)  அறிவிக்கலாம். 1930 இது போன்ற கோரிக்கையை ஜெர்மனி தொழிற்சங்க இயக்கம் முன் வைத்தது. கீன்சும் முன் வைத்தார். அது போன்று இந்த நாடுகளின் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் வாயிலாகவே இதைச் செய்வதற்கான நிர்ப்பந்தங்களைத் தர முடியும். 


இரண்டாவது வழி, தனி நாடுகள் மூலதனக் கட்டுப்பாடுகள், நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பின் மூலம் அரசு முதலீடுகள், பணக்காரர்கள் மீது வரிகள் என்ற வழிகளில் நிதி விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். *தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி பலமாக உள்ள நாடுகள்தான் மற்ற நாடுகளை விட இத்தகைய பாதையில் நீண்ட காலம் நீடித்து நிற்க முடியும்.* சர்வதேச நிதி மூலதன வலைப் பின்னலில் இருந்து விடுபடாமல் இவ் வழிமுறை சாத்தியம் இல்லை. எவ்வளவு விடுபட வேண்டும் என்பதை சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு செய்யலாம். 


ஒரு குறிப்பிட்ட இணைவுச் சூழலை கடப்பது என்பது சமூக அமைப்பையே மாற்றுவது என்ற இலக்கோடு இணைந்ததாக இருக்க வேண்டும். தொழிலாளி - விவசாயி கூட்டணியில் இணைகிற புரட்சிகர சக்திகளுக்கு தங்களின் இறுதி இலக்கு குறித்த புரிதல் இல்லாமல் இருந்தால் சர்வதேச நிதி மூலதனத்தை எதிர்த்த களத்திலேயே அவர்கள் காதுகளில், மார்க்ஸின் வார்த்தைகளில் *"மத்தள தத்துவ விசாரணைகளாக"* ( Drum dialectics) மாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட இணைவுச் சூழலைக் கடப்பதற்கே சமூக அமைப்பைக் கடக்கிற முனைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்த வேண்டும். 


*நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான விவசாய வர்க்கங்களின் விருப்பம் (மூன்றாம் உலகின் மற்ற சிறு உற்பத்தியாளர்களுடையதும்) இன்று உலகமயம் விதித்துள்ள நவீன தாராளமயத்தின் ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெறுவதாக விரிந்துள்ளது.* சர்வதேச நிதி மூலதனத்தை மையமாகக் கொண்ட  உலகமயத்தின் பிடியில் இருந்து விடுபடுவதையும் கடந்த இலக்கைக் கொண்ட ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் தேசிய அரசால் சுதந்திரமாக செயல்பட இயலும். 


உலகமயம் தொழிலாளர்- விவசாயி கூட்டணிக்கான தேவையையும், வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. *இரண்டு தெரிவுகள்தான் உள்ளன.* ஒன்று இக் கூட்டணியைப் பலப்படுத்துவது. இரண்டாவது, நெருக்கடிக்குள் மேலும் மேலும் மூழ்கி பாசிச சிந்தனைகள் வளர்ந்து அதன் துணையோடு சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடர அனுமதிப்பது. 


ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. முதலாளித்துவம் ஒழுங்கற்றதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதாக உள்ள நிலையில் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தில் இருந்து *அவ்வளவு எளிதாக விடுதலை பெற முடியுமா?* கடும் ஒடுக்குமுறை கொண்ட தற்போதைய இணைவுச் சூழல்  "வெளியேறும் வழிகளற்றதாக" உள்ளதா என்பதே அது. 


இதற்கான விடை களத்திலேயே கிடைக்கும். *வலுவான தொழிலாளர் - விவசாயிக் கூட்டணி தற்போதைய இணைவுச் சூழலை கடக்க மிக முக்கியம்.* சோசலிசத்திற்கான நகர்வு காலம் எடுப்பதாக இருக்கக் கூடும். ஆனால் அதுதான் இலக்கு என்ற புரிதல் இல்லாமல் நவீன தாராளமய "இணைவுச் சூழலை" கடப்பதே எளிதாக இருக்கிறது. முதல் முன்னுரிமையாக நவீன தாராளமய எதிர்ப்பு அமையலாம். ஆனால் இறுதித் தீர்வை நோக்கிய தெளிவு, உறுதி, முனைப்பு அவசியம். 


*****************

*செவ்வானம்*

*****************


கட்டுரையை முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் இந்த லிங்க்'கிற்குள் செல்லவும்.


https://monthlyreview.org/2017/07/01/the-october-revolution-and-the-survival-of-capitalism/

கம்யூனிஸ்ட் அறிக்கை (சுருக்கம்) C S Panchpakesan அவர்களின் குறிப்பு

 Comrade C S Panchpakesan அவர்களின் குறிப்பு

Communist Manifestoஅவர்களின் குறிப்

கம்யூனிஸ்ட் அறிக்கை (சுருக்கம்)

 

தோழர்கள் கார்ல் மார்க்சும்ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் லீகின் கட்டளைப்படி 1848ம் வருடம் இதை எழுதி முடித்தனர்.

 

 

1)      முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும்

(Bourgeoise and Prolitarions)

 

சமுதாயத்தில் சரித்திரம் ஆரம்ப கால முதல் இன்று வரை வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமாகவே இருந்திருக்கிறது.

 

வர்க்கங்களின் வளர்ச்சி இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில்  முதலாளி வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கத்தையும் தோற்றுவித்து இருக்கிறது.

 

முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிமூலதனம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பெரும் தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி மக்களை சுரண்டுவதற்கான வசதி கிடைப்பதால் ஏற்படுகின்றது. முதலாளித்துவம் தான் வளரும்போதே தன் வர்க்க விரோதியாகிய பாட்டாளி வர்க்கத்தை தானே தோற்றுவிக்கிறதுஇது எப்படி ஏற்படுகிறதுமுதலாளித்துவம் கட்டுகிற தொழிற்சாலைகளிலே முன்பின் தெரியாத, மூலைக்கு மூலை நாட்டுப்புறங்களில் வசித்த மக்கள் ஓரிடத்தில் குவிக்கப்படுகின்றனர். முதலாளித்துவ வளர்ச்சிக்கு இன்றியமையாத சரித்திர கட்டத்தில் விவசாயிகளும் சிறு கைத்தொழிலாளிகளும் தாங்கள் வாழ்வதற்கு தங்கள் உழைப்பைத் தவிர வேறு ஏதும் இல்லாத நிலைமையிலே வந்து சேரும் தொழிலாளர்கள்தான் இவர்கள்.

 

முதலாளித்துவம் தன் வளர்ச்சியோடு அதற்கு முன்பிருந்த நிலப் பிரபுத்துவ சமுதாயம் கட்டி அமைத்த சமுதாய உறவுகள் மனப்பான்மைகள்நாகரிகம் முதலிய அனைத்தையும் அடியோடழித்து அவற்றிற்கு பதிலாக புதிய உறவுகள் நாகரிக மனப்பான்மை முதலியவற்றை உண்டாக்குகிறது.

 

முதலாளித்துவம் தன் வளர்ச்சியிலே பெரிய ஆலைகளின் மூலம் குறைந்த உற்பத்தி செலவில் வாழ்க்கைக்கு வசதியளிக்கும் பொருளை உற்பத்தி செய்து மலிவான விலையில் கொடுப்பதானது அதை உலகம் எங்கனும் ஊடுருவிப் பரவி செல்ல உதவுகிறதுதான் உற்பத்தி செய்யும் சாதனங்களை எங்காவது கொண்டு போய் விற்றாக வேண்டும் என்ற நிலைமை முதலாளித்துவத்தை உலக்ம் எங்கிலும் சந்தையைத் தேடி ஓடச் செய்கிறது,

 

முதலாளித்துவம் நவீன போக்குவரத்துச் சாதனங்களை கட்டி அமைப்பதானது உலகத்தின் மூலைக்கு மூலை உள்ள மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களை நாகரிகமடையச் செய்கிறதுஅதன் வளர்ச்சிமற்ற மக்கள் சமுதாயங்களும் முதலாளித்துவ சமுதாயங்களாக மாறினால் அன்றி வாழ இயலாது என்ற நிலைமையை ஏற்படுத்துகிறது.

 

முதலாளித்துவம் அடிக்கடி நவீனமான உற்பத்திக் கருவிகளை கண்டு பிடித்து நாளுக்கு நாள் புதிய புதிய உற்பத்தி முறைகளைக் கொண்டு வருகிறது. நகரங்களை வெகு வேகமாக வளர்ச்சியடையச் செய்து கிராமங்களை நாசப்படுத்துகிறது.

 

முதலாளித்துவம் பொருள் உற்பத்திச் சாதனங்களையும்உற்பத்தி உறவுகளையும் பெரிய அளவு வளர்த்து விடுகிறது. கடைசியில் அவை அதனுடைய கட்டுக்கு மீறி வளர்ந்து விடுகிறபோது என்ன செய்வது என்று திண்டாடுகிறது.

 

உற்பத்திச் சாதனங்கள் ஏராளமாக உற்பத்திச் செய்து விடுகின்றன. உற்பத்திப் பண்டங்களை எங்கு கொண்டு போய் திணிப்பது என்று தெரியாமல் முதலாளித்துவம் தவிக்கிறது. அமித உற்பத்தியால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ சமுதாயத்தை திக்கு முக்காடச் செய்கின்றன. ஏனென்றால் அமித உற்பத்தி பண்டங்களை மலிவடையச் செய்கின்றதுமுதலாளித்துவத்திற்கு லாபம் கிடைக்க ஒட்டாமல் செய்கின்றது.

 

இந்த சமயத்தில் வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை நெருக்குகின்றது. முதலில் போட்டியின் காரணமாக தனித்தனி நலன்கள் உடையதாய் ஒற்றுமையற்றதாய் முளைத்த இந்த வர்க்கம் இப்பொழுது முதலாளியை எதிர்த்துத் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சங்கங்களில் திரண்டு வர்க்க உணர்வும்போர்க்குணமும் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது.

 

தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசாங்கத்திற்கும் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் முதலாளித்துவ வர்க்கத்தால் அதிகமாக சுரண்டப்பட்டு அதிகமாக அடிமைப்படுத்தப் பட்டு வருகிறது. லாபத்தை லட்சியமாகக் கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தின் கேவலமான சுரண்டலை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போர்க் கொடியை உயர்த்துகிறது.

 

வர்க்கப் போராட்டம் அரசியல் பண்பை அடைகிறபோது அது தேசியத் தன்மை அடைகிறது.

முதலாளித்துவ வர்க்கம் நாளுக்கு நாள் பலகீனம் அடைந்து வருகிறது. அதற்குள் ஏற்படும் உட்போட்டியால் தக்குப் பிடிக்க முடியாத ஒரு பகுதி அதனிடமிருந்து பிரிகிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியால் நாளுக்கு நாள் அடித்து நொறுக்கித் தள்ளப்படும் மத்திய வர்க்கம் அதை எதிர்க்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. ஆனால் இவற்றில் எதுவுமே புரட்சிகரமான வர்க்கம் அல்ல. இவர்கள் தங்கள் வர்க்க அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவே முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்க்க வேண்டியவர்களாகிறார்கள். இந்நிலையில் வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருக்கும்  தொழிலாளி வர்க்கம் தங்களுடைய உழைப்பை சுரண்டி சொந்தமாக மாற்றி மேலும் மேலும் வளர்ந்துகொண்டு இருக்கும் வர்க்கத்தை வீழ்த்துவதால் அல்லாமல் தங்களுக்கு என்று பாதுக்காக்க எந்த வித சொத்தும் இல்லாத அந்த வர்க்கம் சொத்துரிமைக்கு இருக்கும் சகல பாதுகாப்புகளையும் அழித்து தகர்த்தெறிந்துவிட்டு அதனை நாட்டின் உடைமையாக ஆக்காமல் தான் மீள‌ முடியாது என்ற நிலைமைக்கு வருகிறது.

 

முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திற்கு  குறைந்த பட்ச வாழும் உரிமையை கூட அளிக்கவில்லை. அதனால் தான் வாழ்வதற்காகவே அவ்வர்க்கத்தையழித்து புதிய சரியான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பாட்டாளி வர்க்கத்திற்கு உண்டாகிறது.

 

இதற்கு முன் சரித்திரத்தில் நடந்த இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையினருக்காக நிலபிரபுக்களுக்காக முதலாளிகளுக்காக நடந்த இயக்கங்களாக இருந்தன. பாட்டாளி வர்க்கத்தின் இந்த இயக்கமோ சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையோருக்காக நடத்தும் இயக்கமாக இருக்கின்றது.

 

முதலாளித்துவ வர்க்கம் மேற்கொண்டு நீடித்து இருக்க முடியாத நிலைமையை அடைகின்றது. அது உயிர் வாழ வேண்டுமென்றால் மூலதனம் உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கும் கூலி உழைப்பு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். ஆனால் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியாலேயே தடுக்க முடியாதபடி ஒன்று சேர்க்கப்பட்டு புரட்சிகரமான வளர்ச்சி அடைகிறது. அதனால் அவர்களுக்கிடையே போட்டி மறைந்து விடுகிறது. அதனால் மேற்கொண்டு முதலாளித்துவம் வளரமுடியாத நிலைமைக்கு வந்து விடுகிறது.

 

முதலாளித்துவம் தன் வளர்ச்சியால் தனக்கு குழி பறிப்பவர்களையே வளரச்செய்கிறது. எனவே அதன் வீழ்ச்சி தடுக்க முடியாதது. தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி தடுக்கப்படவே முடியாத‌து.

 

 

 

2) பாட்டாளி வர்க்கமும் கம்யூனிஸ்டுகளும்.

பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முக்கியத்துவத்தையும் சமுதாயத்தில் அதன் நிலைமையையும் அதன் வளர்ச்சி கட்டங்களையும் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து அதன் போராட்டங்களில் மிகவும் முன்னேறிய பகுதியினராக அதனுடன் இரண்டற கலந்து நிற்பவர்களும்தாம் கம்யூனிஸ்டுகள். தொழிலாளி வர்க்க நலன்களைத் தவிர கம்யூனிஸ்டுகளுக்கு வேறு வித வர்க்க நலன்கள் எதுவும் கிடையா. ஆயினும் தொழிலாளி வர்க்கத்தின் கட்சிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இரு முக்கியமான வேறுபாடு உண்டு.

 

1. கம்யூனிஸ்டுகள் பற்பல் நாடுகளில் தொழிலாளர்கள் தேசிய போராட்டங்களை நடத்துகிற போதிலும் உலகத் தொழிலாளி வர்க்கம் முழுமைக்கும் (ஒரு வர்க்கம் என்ற ரீதியில்) பொதுவாக உள்ள நலன்களை சுட்டிக்காட்டி அவற்றை முன்னணிக்கு கொண்டு வருகின்றனர்.

 

2. முதலாளித்துவத்தை எதிர்த்து நடத்துகிற போராட்டங்களின்  ஒவ்வொரு கட்டங்களிலும் வர்க்க இயக்கம் முழுமைக்கும் பொருந்துகிற நலன்களை பிரதிபலிக்கின்றனர்.

 

சிதறிக் கிடக்கும் தொழிலாளிகளை ஒன்று சேர்ப்பதும் வர்க்க ரீதியில் ஒரு பேரணியில் திரளச் செய்வதும் முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி எறிய அதைத் தயார் படுத்துவதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி முன்னேற வழிகோலுவதும் கம்யூனிஸ்டுகள் கடமையாகும். இவை கம்யூனிஸ்டுகளின் கற்பனா தத்துவங்கள் அல்ல. சர்த்திரத்தின் வளர்ச்சியேயாகும். இதனை உணர்ந்து கொண்டால் அவ்வளர்ச்சிக்கு உதவுபவர்களே கம்யூனிஸ்டுகள்.

 

சொத்துக்களை அழிப்பவர்களா கம்யூனிஸ்டுகள்?

 

அல்ல! முதலாளித்துவ தனி உடைமையை உடைத்து தகர்க்க வேண்டும் என்பவர்களே கம்யூனிஸ்டுகள்.

ஏன்?

 

முதலாளிதுவ தனி உடைமை சமுதாயம் முழுவதையுமே சுரண்டி மக்கள் அனைவரையும் பறிமுதல் செய்தே வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. அதை பறிமுதல் செய்தும்மக்கள் அனைவருக்கும் அதை பொது உடைமையாக்கி வாழ வழி செய்து கொடுப்பதும் நியாயம் மாத்திரம் அல்ல. கடமையும் கூட. 'தனி உடைமை ஒழிப்புஎன்பதுதான் கம்யூனிஸ்டுகள் தத்துவம்.

 

தனி உடைமை என்பதால் எதை குறிக்கிறோம்சிறு கைத் தொழில்களையும்விவசாயிகளின் சொத்துக்களையும் அல்ல. அவற்றை முதலாளித்துவம்தான் அழித்துக் கொண்டு வருகிறது. அவற்றை கம்யூனிஸ்டுகள் அழிக்க விரும்பவில்லை. நவீன முதலாளித்துவத்தின் தனி உடைமையைச் சொந்த முயற்சியால் சம்பாதித்தது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் கூலி உழைப்பால் தொழிலாளிகள் எவ்விதமான சொத்தும் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. அது மூலதனத்தைத்தான் திரட்டி முதலாளியின் கையிலே கொடுத்தது. அந்த மூலதனம் தானே இயங்கிப் பொருள் உற்பத்திச் செய்யக் கூடியதல்ல. சமூகம் முழுவதுமே சேர்ந்துதான் அதை இயக்கிப் பொருள் உற்பத்தி செய்யமுடியும். அப்படி இருக்கையில் மூலதனத்தை ஒரு தனி மனிதனின் சக்தியால் உண்டாக்கியது என்று சொல்வது எப்படி பொருந்தும்அது ஒரு சமூகத்தின் சொத்து. ஏனென்றால் அது சமூக சக்தியால் உருவாக்கப் பட்டது. அதை சமூகத்துக்கு சொந்தமாக்குவது என்றால் அழித்துவிடுவது என்று அர்த்தமல்ல. அது குறிப்பிட்ட சிலர் கைகளில் அகப்பட்டு வர்க்கத் தன்மை பெறுவதை மட்டுமே ஒழிப்பது ஆகும்.

 

கூலி உழைப்புக்கு பிரதி பலனாக தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைப்பது என்ன?

 

உயிரோடு வாழ எந்த அளவு தேவைப் பொருட்கள் வேண்டுமோ அந்த அளவு தேவைப் பொருட்களின் விலைதான். தன் உழைப்பின் மூலம் உண்டாக்குகிற செல்வத்தில் உடலோடு உயிரை வைத்துக் கொண்டிருக்கப் போதுமான அளவு பங்கையே அவன் பெருகிறான். மற்றபடி மூலதனத்தைப் பெருக்குவதற்காகத்தான்  அவன் உயிரோடு இருக்கிறான். அதுவும் மூலதனத்திற்கு தேவைப்படுகிறவரைதான் அவன் வாழவிடப்படுகிறான். இந்த கேவலத் தன்மையை ஒழித்து உயிருள்ள உழைப்பு மூலதனத்தைப் பெருக்குவதற்காக உபயோகப்படுத்தப் படாமல் மூலதனம் உயிருள்ள உழைப்பின் வாழ்வை வளமாக்கவும் செழுமைப்படுத்தவும் உபயோகப்படுத்தப் படவேண்டும்.

 

முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனம் எல்லா சுதந்திரங்களும் உடையதாக இருக்கையில் பல்லாயிரக் கணக்கான தனி மனிதர்கள் எந்த விதமான உரிமையும் இல்லாத அடிமைகளாய் இருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தனி உடைமையை தனி சுதந்திரத்தை ஒழிப்பதுதான் "தனி நபர் சுதந்திரத்தை" ஒழித்து விடுவதாக முதலாளித்துவம் கூச்சல் போடுகிறது. ஆம். அதை ஒழித்தே ஆக வேண்டும்.

 

சமூகத்தில் உழைப்பினால் கிடைக்கிற பலன்களை எடுத்துக் கொள்வதை எந்த தனி மனிதனிடமிருந்தும் பறித்துவிட கம்யூனிஸ்டுகள் விரும்பவில்லை. மற்றவர்களின் உழைப்பைப் பறித்துக் கொள்ளச் சிலரிடம் இருக்கும் சக்தியை பறித்துவிடுவதே கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.

 

இந்த முதலாளித்துவ சமுதாய அமைப்பை அடிப்படையாகக் கொண்டு உண்டாயிருக்கிற சுதந்திரம்கலைசட்டம் முதலிய எல்லாவற்றிற்கும் மாற்றாக மக்கள் எல்லோர் வாழ்வையும் தழுவிகிற புதிய சுதந்திரம்கலைசட்டம் முதலியவற்றை உண்டாக்குவதே கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.

 

கம்யூனிஸ்டுகள் குடும்ப அமைப்பை ஒழித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே முதலாளித்துவம் சமுதாயத்தின் பெரும்பகுதிக்கு குடும்பம் என்பதே இல்லாமல் போகும்படி செய்துவிட்டது. முதலாளித்துவ குடும்ப உறவமைப்பு கம்யூனிஸத்தின் கீழ் அழிந்து போகலாம். ஆனால் அதை விட வளமையான இன்பம் நிறைந்த குடும்ப அமைப்புக்கு அடிப்படையாக சிறந்த பொருளாதார அமைப்பை கம்யூனிஸம் அளிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளை சுரண்டுவதைத் தடுக்கிறது. குழந்தைகளுக்கு முதலாளித்துவத்தின் சொருகு கண்ணிகளாகும் அடிமை கல்விக்குப் பதிலாக சமூகக் கல்வி முறையைத் தருகிறது.

 

கம்யூனிஸ்டுகள் பெண்களைப் பொது உடைமையாக்கி விடுவார்கள் என்று கூச்சல் போடுகிறது முதலாளித்துவம். முதலாளித்துவம் பெண்களை ஆடு மாடு போல் ஆண்களின் சொத்தாக இருக்கும் நிலையில் வைத்துவிடுகிறது. பெரிய அளவு விபசாரத்தை வளர விட்டு சமுதாயம் முழுவதுமே அழுகி நாசமாகப் போகச் செய்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் இன்றைய பொருள் உற்பத்தி முறையே காரணம். இது ஒழியும்போது பெண்கள் சொத்தாகக் கருதப்படும் நிலையும் விபசாரமும் ஒழிந்து போகும். அவர்கள் சரிசமமான வாழ்வு பெறுவார்கள். பெண்களை சொத்தாக கருதுவது என்ற பேச்சுக்கே இடமில்லாதபோது அவர்களை உடமையாகக் கருதும் மனப்பான்மையும் ஒழிந்தே போகும்.

 

கம்யூனிஸ்டுகள் தேசங்களையும் தேசிய இனங்களையும் அழித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுடைய தேசிய மனப்பான்மைகளை ஆரம்பத்திலேயே முதலாளித்துவம் அழித்து  விட்டது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் பொருள் உற்பத்தி முறைகள் ஒரே மாதிரி அதாவது மக்களின் வாழ்க்கை நிலைமைகளை ஒரே மாதிரி ஆக்குவதால் தேசிய மாறுபாடுகளை மறைந்து போகச் செய்து விட்டது.

 

தொழிலாளி மக்கள் அரசியல் ஆதிக்கம் பெரும்போது கொஞ்சம் நஞ்சமிருக்கும் வித்தியாசமும் அடியோடு மறைந்து போகும்! மனிதனை மனிதன் சுரண்டுகிற பழக்கமும் மறையும்போது நாட்டை நாடு சுரண்டும் பழக்கமும் மறைந்துபோகும்.  குறைந்த பட்சம் நாகரிக நாடுகளின் பாட்டாளிகள் ஒன்று சேர்வதானது அவர்களது விடுதலையைத் துரிதப்படுத்தும். மதத்தை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸத்தை எதிர்ப்பவர் உளர். ஆனால் உற்பத்தி முறையில் ஏற்படும் மாறுதல் மனித சிந்தனையை எவ்வளவு வேகத்தில் மாற்றி விடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். மதம் ஒவ்வொரு காலத்திலும் திருத்தி அமைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அதிலும் கடந்த காலங்களில் சமுதாயம் வெவ்வேறு வளர்ச்சியை அடைந்து வந்திருப்பினும் சுரண்டுபவனும் உள்ள சமுதாயமாகவே இருந்திருக்கிறது என்பதும் அதனால் மத உணர்வு ஒழுக்க நெறிகள் முதலியவை சுரண்டல் அமைப்புக்கு ஆதரவானமையாகவே இருந்து வந்திருக்கின்றன என்பதும் மறக்க முடியாதவை/

 

வர்க்க முரண்பாடுகளை மறைந்து போகச் செய்யும் புரட்சியானது எண்ணங்களிலும் புரட்சிகரமான மாறுதல்களை உண்டாக்கியே தீரும்.

 

அடுத்தபடியாக ஆட்சி புரிகிற வர்க்கமாக மாறியதும் பாட்டாளி வர்க்கம் என்ன செயர‌யும் என்று கவனிப்போம்.

 

வெற்றி பெறும் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுமாயினும் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் கீழ் கண்டபடியாக இருக்கும்.

 

1. நிலத்தை பொதுவுடைமையாக்கி நில வருமானத்தை பொது காரியங்களுக்கு பயன்படுத்துதல்.

 

2. வருமானம் அதிகரிக்க வரியும் அதிகரிக்கும் முறையில் வரி விதித்தல்.

 

3. வாரிசு பாத்யதைகளை ஒழித்தல்.

 

4. புதிய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு ஓடுபவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

 

5. தேசிய பாங்கு ஏற்படுத்தி பண வரவு செலவுகளை அரசாங்கத்தின் கைக்கு கொண்டு வருதல்.

 

6. போக்கு வரத்து செய்தி சாதனங்களை அரசாங்க உடைமை ஆக்கல்.

 

7. அரசாங்க தொழிற்சாலைகள் வளர்த்தல். திட்டமிட்டபடி பொது நலத்தை வளமாக்கல்.

 

8. உழைப்பை மக்கள் எல்லோருக்கும் கடைமையாக்குதல். விவசாயத்திற்கு இயந்திர வசதியளித்தல்.

 

9; விவசாயத்தையும் இய‌ந்திர தொழிலையும் இணைத்து கிராமத்திற்கும் நகரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அகற்ற‌ மக்கள் பரவலாக வாழும்படி செய்தல்.

 

10. பொதுப் பள்ளிக் கூடங்களில் எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாக கல்வி கற்பிப்பதும்குழந்தை வேலையை தடை செய்வதும்இயந்திர பொருள் உற்பத்தியுடன் கல்வியை இணைப்பதும் ஆகும்.

 

இந்த அடிப்படையில் வர்க்க முரண்பாடுகள் பரிபூரணமாக மறைந்து ஒரு பொதுவான மக்கள் சங்கமாக நாடு வளர்ச்சியடைய செய்வதுதான் கம்யூனிசத்தின் லட்சியமாகும்.

 

 (3) சோசலிஸ கம்யூனிஸ்ட் இலக்கியம்

 

1. பிற்போக்கு சோசலிஸம்

 

(1) நிலப் பிரபுத்துவ சோசலிஸம்

 

முதலாளித்துவத்தால் வீழ்த்தப்பட்ட நிலபிரபுக்கள் வேறு எவ்வகையிலும் தங்கள் வயிற்று எரிச்சலை காட்டமுடியாமல் சில சமயங்களில் சோசலிஸம் பேசக் கிளமபுகிறார்கள். அடிப்படையில் இவர்கள் கருத்து என்னவென்று பார்த்தால் முதலாளித்துவம் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தை கண்டிப்பதும்அது தொழிலாளி வர்க்கத்தை மேலும் மேலும் அடக்கி வைக்க உதவுவதும்தான். மத சோசலிஸமும் நிலப்பிரபுத்துவத்தைப் போன்றதே.

 

(2) முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் ஒரு ஊசலாடும் வர்க்கம் தோன்றுகிறது. இது நாளுக்கு நாள் தொழிலாளி வர்க்கத்தை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டேயிருப்பதால் தன் நிலையைக் காத்துக் கொள்ள போராடிக் கொண்டேயிருக்கிறது. இந்த வர்க்கத்திலிருந்து சோசலிஸ்டுகள் சில அடிப்படை உண்மைகளை உள்ளவாறு உணர்ந்த போதிலும் இவர்களுடைய இறுதி லட்சியம் பழைய பொருளுற்பத்தி சாதனங்களை நிலை நாட்டுவதும் தந்தை வழி விவசாயம் செய்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வது போன்ற முறைகளை கையாள்வதுமாக இருப்பதால் வளர்ச்சிக்கு ஒவ்வாததாகவும் பிற்போக்குத் தனமானதாகவும் இருக்கிறது.

 

(3) ஜெர்மனிய (original) சோசலிஸம்.

 

பிரெஞ்சு சோசலிஸ இலக்கியத்தை பிரெஞ்சு சரித்திர வளர்ச்சியை அடிக்ப்படையாகக் கொண்டு பார்க்காமல் அதை அப்படியே தங்களுக்கேற்ப தரித்துக் கொண்டார்கள். ஜெர்மனிய (மத்திய) வர்க்கத்தினர் இவர்களுடைய சோசலிஸம் நடைமுறையில் பூர்ஷ்வா வர்க்கத்தை பயன் படுத்தவும்புரோலிட்டேரியட் வர்க்கம் வளர்ச்சி அடையாமல் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. சரியாக வர்க்க பேதத்தை கவனியாமலும் மத்தியதர வர்க்க மனிதனையே அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட இந்த சோசலிஸம் அடிப்படை கம்யூனிஸ தத்துவங்களை பழிக்கிற அளவு சென்றுவிட்டதில் வியப்பில்லை.

 

2. முதலாளித்துவ சோசலிஸம்.

 

முதலாளித்துவ வர்க்கத்தில் மனிதாபிமானிகளும் பரோபகாரிகளும் இன்னும் இவர்களைப் போன்றவர்களும் ஒரு வகை சோசலிஸம் பேசுகின்றனர். அதாவது வர்க்க சிந்தனையுள்ள பாட்டாளி வர்க்கமே இல்லாமல் முதலாளி வர்க்கம் வேண்டுமென்பதும்பாட்டாளிகள் பரலோக சிந்தனை மட்டுமே கொண்டு இகலோகத்தில் முதலாளி வர்க்கத்தி/ற்கு அடங்கி ஒடுங்கியிருக்க வேண்டும் என்பதும் இவர்கள் சித்தாந்தம். இன்னொரு வகையில் பொருளுற்பத்தி சாதனங்கள் முதலாளி வர்க்கத்தின் கையிலேயே இருக்க அரசாங்க செலவுகளை சுருக்கி சீர்திருத்தங்கள் செய்து பாட்டாளி வர்க்கத்தை சமாதானப்படுத்த வேண்டுமென்பதுபாட்டாளி வர்க்கத்தின் நன்மைக்காக என்று சொல்லிக் கொண்டு முதலாளித்துவ வர்க்கத்தை கட்டிக் காப்பதுதான் இவர்கள் நோக்கம். நடைமுறையில் இவர்கள் முதலாளித்துவ திட்டங்கள் ஒவ்வொன்றையும்  ஆதரிப்பது கண் கூடு.

 

3. விமர்சன கற்பனா சோசலிஸமும்  பொதுவுடைமையும்.

 

தொழிலாளி வர்க்கம் குழந்தைப் பருவத்தில் இருந்த காலத்தில் சரித்திர வளர்ச்சியில் இது எவ்வாறு தோன்றியதுஎவ்வாறு வளர்ச்சியடையும் என்பவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வர்க்கப் போராட்டம் முதலிய சரித்திர பூர்வமான அம்சங்களை பாராமல் சில கற்பனாவாதிகளின் திட்டப்படி சமுதாயம் வளர்ச்சி அடைந்து வருமென்று கருதியவர்களே கற்பனா சோசலிஸ்டுகள். நடைமுறையில் இவர்கள் வர்க்கப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் ஆகவும்பண மூட்டைகளின் ஆதரவால் பூலோகத்தை சொர்க்கமாக்கிவிட முடியும் என்று நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

4. இன்றுள்ள பல எதிர்கட்சிகளிடம் கம்யூனிஸ்டுகள் நடந்து கொள்ளும் முறை.

 

கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு நாட்டிலும் இன்றைக்கு இருக்கும் சமூக பொருளாதார ஏற்பாடுகளுக்கு எதிராக நடக்கும் புரட்சிகரமான இயக்கங்கள் எல்லாவற்றையும் ஆதரிப்பவர்கள்.

 

இந்த இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் சொத்துடைமை பிரச்சனையை அந்த சமயத்தில் அதன் வளர்ச்சி எந்த நிலையில் இருந்தபோதிலும் முதலாவது பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வருவார்கள்.

 

கடைசியாக அவர்கள் எல்லா நாடுகளிலும் உள்ள ஜனநாயகக் கட்சிகளுக்கிடையே ஒரு வகை ஒற்றுமை உண்டாக்கப் பாடு படுகிறார்கள்.

 

கம்யூனிஸ்டுகள் தங்கள் நோக்கங்களையும்இலட்சியங்களையும் மறைத்து வைக்க விரும்பவில்லை. அவர்கள் இன்றைய சமுதாய நிலைமைகளை பலாத்தகாரமாக தூக்கியெறியாமல் தங்கள் இலட்சியங்களை சாதிக்க முடியாதென்று பகிரங்கமாக கூறுகிறார்கள். பொதுவுடைமைப் புரட்சியைப் பற்றி நினைத்து ஆளும் வர்க்கங்கள் அலறிக் கொண்டிருக்கட்டும். உழைப்பாளிகள் இதற்கு தங்களை பிணைத்திருக்கும் தளைகளை தவிர வேறு ஒன்றுமில்லை. அடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது.

 

"உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"