Wednesday, February 26, 2025

பனிப்போருக்கான வெள்ளை மாளிகையின் அவதாரம் USAID

   - அ.பாக்கியம்

தேசப் பாதுகாப்பு பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப், எலன் மாஸ்க் இருவரும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID – United States Agency for International Development) மூலம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பற்றி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டவுடன் பாஜக திக்குமுக்காடியது.


முதலில் இந்த பணத்தை நாங்கள் வாங்கவில்லை. 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் என்று காங்கிரஸின் மீது பழி சுமத்தியது.  பாஜக அரசின் நிதித்துறையோ உள்துறையோ வெளியுறவுத்துறையோ வாயை மூடிக்கொண்டு காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கைகள் பாஜகவின் பங்கை அம்பலப்படுத்திய பொழுது இப்பொழுது வெளியுறவுதுறையும் நிதி துறையும் வாய்திறந்து பேசி இருக்கிறார்கள். 2023-24 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்காக 750 மில்லியன் டாலர் அமெரிக்காவிடம் உதவி பெறப்பட்டது என்பதை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இந்தியாவின் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்பை கொண்டு வருவதற்காக உதவி செய்யப்பட்டது என்பதை அழுத்தம் திருத்தமாக பேசி வருகிறார்.


இந்தியாவின் முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் குரோஷி அவர்கள் இதை மறுத்துவிட்டார். இப்பொழுது காங்கிரசின் தலைவர் ஜெயராம்ரமேஷ் அவர்கள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை அல்ல அந்த 21 மில்லியன் டாலர் பங்களாதேஷினுடைய தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடியோ இந்தியாவின் வெளியுறவுதுறை அமைச்சரோ இது பற்றி ஆரம்பத்திலேயே மறுப்பை தெரிவிக்காமல் காங்கிரஸின் மீது பழி சுமத்தி இந்தியாவின் மரியாதையை குறைத்தார்கள்.


அமெரிக்கா சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனம் (USAID – United States Agency for International Development) என்ற பெயரில் ஆரம்பித்தது ஏதோ உலக மக்களை முன்னேற்றுவதற்காக என்று எண்ணிவிடக்கூடாது. அமெரிக்க உதவி என்றாலே நமக்கெல்லாம் முன்னேற்றத்திற்கான வழி என்று நினைக்கக்கூடிய அமெரிக்க அடிமை விசுவாசிகள் இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


1961 ஆம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனின் செல்வாக்குகள் உலகம் முழுவதும் பரவுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் நிதி உதவியின் மூலமாக சோவியத் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை விதைத்து வளர்ப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது


ஜான் எஃப் கென்னடி மற்றும் ஜான்சன் போன்றவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது பல மேலை நாடுகளிலும், ஆசிய, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பொருளாதார சீர்திருத்தங்களில் தலையிடுவதற்கும் பொது நிர்வாகத்தில் தலையிடுவதற்கும் சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்தினார்கள். பனிப்போர் காலத்தில் வளரும் நாடுகளில் மூலதன பற்றாக்குறை ஏற்பட்ட பொழுது அந்த நெருக்கடியை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனம் உள்ளே புகுந்து ஒப்புதலை வாங்கி இந்த திட்டங்கள் முலமாக தங்கள் கருத்துக்களை விதைத்தார்கள்.


நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது வியட்நாம் நாட்டில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு துணையாக இந்த நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தினார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்த நாட்டில் உருவாகக்கூடிய ஜனநாயக முற்போக்கு அரசுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதற்கும், பொது மக்களை அரசுக்கு எதிராக கொண்டு வருவதற்கும் இந்த நிறுவனம் நிதி உதவி செய்து கலவரத்தை உருவாக்கியது.

அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டு நிதிகளில் ஐந்தில் மூன்று பாகம் இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் என்ற அமைப்பின் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றால் இது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கா தன்னை வெளிநாட்டு ஏழை மக்களுக்காக அதிக நன்கொடை வழங்கும் நாடு என்று கூறிக் கொள்கிறது.


உண்மையில் எவ்வளவு செலவு செய்கிறார்கள்? அமெரிக்காவின் உதவித்தொகை அறிக்கையில் இருந்து சில விவரங்கள் வெளிவந்து உள்ளது. அவர்கள் 71 பில்லியன் டாலர்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது என்று கூறியிருப்பது தெளிவற்றதாக உள்ளது. குறிப்பாக வளர்ச்சிக்கான பொருளாதார அடிப்படைகளை உருவாக்குவது என்ற திட்டத்தின் கீழ் 15.9 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டதில் 14.4 பில்லியன் டாலர்கள் உக்ரைன் அரசாங்கத்திற்கு நேரடி பண உதவியாக கொடுத்ததாகும். அதாவது இவை அனைத்தும் ஆயுதங்களுக்காக பயன்படுத்தி பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்த அமெரிக்க நிறுவனத்தின் உதவிகள் வெற்றுவாக்குறுதிகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துள்ளது என்பதை பல திட்டங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை பெறும் நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


பனிப்போருக்கான அமெரிக்க வெள்ளை மாளிகையின் அவதாரம் USAID - (United States Agency for International Development) | ட்ரம்ப், எலன் மாஸ்க்


முதலாவதாக 2013 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற பொழுது பவர் ஆப்பிரிக்கா என்ற மிகப் பெரும் மின்சக்தி திட்டத்தை இந்த நிறுவனத்தின் (USAID – United States Agency for International Development) மூலம் நடத்தப் போவதாக அறிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்குள் 20000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு அமெரிக்க நிதி நிறுவனம் முதலீடு செய்து தலைமை ஏற்று நடத்தும் என்று பேசினார். ஆனால் 2020 ஆம் ஆண்டு இறுதியில் இது பற்றி ஆய்வு செய்த பொழுது அவர் ஆப்பிரிக்காவின் உண்மையான மின் உற்பத்தி திறன் 4194 மெகாவாட் மட்டுமே ஆகும். இதை அமெரிக்க நிறுவனமே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் கால்பங்கைவிட குறைவான அளவிற்கு தான் மின் உற்பத்தி நடந்துள்ளது.


இரண்டாவதாக, மத்திய கிழக்கு நாடுகளிலும் குறிப்பாக ஆப்கானிஸ் தானத்திற்கு செய்த உதவிகள் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படவில்லை.வேறு எதற்கு பயன்பட்டது என்று பலருக்கும் தெரியும். உதாரணமாக 2008 ஜூலை மாதம் முதல் 2015 ஜூன் மாதம் வரை சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிதி நிறுவனத்தின் (USAID – United States Agency for International Development) மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சுகாதாரத்திற்கான திட்டம் தோல்வியடைந்தது. எந்தவித தரத்திலும் அது இல்லை என்பதை மறுசீரமைப்புக்கான அறிக்கையே தெரிவித்து இருக்கிறது. அனைத்து திட்டத்தின் கீழ் கட்டப்படும் சுகாதார வசதிகளும் மின்சாரம் மற்றும் குழாய் நீர் திட்டங்களும் மக்கள் பெறக்கூடிய அளவுக்கு இல்லை என்பதை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


முன்றாவதாக 2010 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அருகில் இருக்கக்கூடிய ஹைட்டி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது. இதன் பிறகு அங்கு ஒரு மின் உற்பத்தி நிலையத்தையும் ஒரு புதிய துறைமுகத்தையும் ஒரு பெரிய தொழிற் பூங்காவையும் கட்டுவதற்காக மேற்கண்ட அமெரிக்க நிறுவனம் உறுதி அளித்தது. எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தி கார்டியன் என்ற பத்திரிகை ஹைட்டி அமெரிக்க உதவியின் தோல்வியுற்ற வாக்குறுதி என்ற மிகப்பெரிய ஆய்வுக் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.


மேற்கண்ட நிறுவனம் மூலமாக அமெரிக்கா அந்நிய நாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான அமெரிக்க மக்களிடம் கடுமையான அதிருப்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்து வந்துள்ளது. ஆனால் பணிப் போருக்காகவும் மக்கள் சோசலிச சிந்தனைகளுக்கும் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக திரும்பி விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து மக்கள் எதிர்ப்பையும்மீறி இந்த USAID திட்டத்தை அமுல்படுத்தினார்கள்.


நிக்சன் காலத்தில் வியட்நாம் மீது படையெடுத்து வெற்றி பெறுவதற்காக இந்த நிதியை பயன்படுத்திய பொழுது அமெரிக்க மக்கள் மிகப் பெரும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனால் அமெரிக்க காங்கிரஸில் புதிய திசைகள் என்ற முறையில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியது இதன் மூலம் இந்த அமைப்பின் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் இதை நிரந்தரமாக ஒழித்து விடலாம் என்ற முறையிலும் அந்த சட்டத்தில் பேசினார்கள். காரணம் அமெரிக்க மக்களின் கடுமையான எதிர்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்த நிறுவனத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை.


ரீகன் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டுக்கான உதவி பட்ஜெட்டில் வியத்தகு முறையில் அதிகரித்திருக்கிறது இதனால் உள்நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்ற கருத்து பரவலாக மேலோங்கியது ஆனால் இதன் நோக்கம் சோவியத் யூனிட் எதிராக மற்ற நாடுகள் சென்று விடக்கூடாது என்பதால் அமெரிக்க மக்களை ஏமாற்றுவதற்காக வேறு வழியில் இதை அமல்படுத்தினார்கள். சுகாதாரத்தில் மிகப்பெரும் முதலீடுகளை செய்து உலக அளவில் குழந்தைகளின் மரணத்தை குறைத்து குழந்தைகளை வாழ வைப்பது என்ற திட்டங்கள் மூலமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்கள்


1993 ஆம் ஆண்டு பனிப்போர் முடிந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பில் கிளிண்டன் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு உதவியை பட்ஜெட்டில் கணிசமாக குறைக்க முயற்சி செய்தார்கள், உள்நாட்டில் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் முழுமையாக அமலாகவில்லை.

1997இல் இந்நிறுவனத்தை தீவிரமாக மறுசீரமைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸில் மிகக் கடுமையான விமர்சனம் வெளிப்பட்டது பில்கிளிண்டள் நிர்வாகம் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு சில மாற்றங்களை மட்டும் செய்தார்கள். இந்த நிறுவனம் ஆயுதப் பரிமாற்றங்கள் உட்பட அனைத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அமெரிக்க எம்பிக்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள்.


பில் கிளிண்டன் ஆயுதக் கட்டுப்பாடு, ஆயுத குறைப்பு நிறுவனம், அமெரிக்க தகவல் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை வெளியுறவுத்துறைக்குள் கொண்டு வருவது என்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID -United States Agency for International Development) தனி அமைப்பாக தனி சட்டத்தின் கீழ் செயல்படும் என்றும் முடிவெடுத்தது. இருந்த போதிலும் இந்த நிறுவனம் தனி சட்டத்தை கொண்டு இருந்தாலும் வெளியுறவுச் செயலாளரின் நேரடி அதிகாரம் மற்றும் வெளியுறவு கொள்கை வழிகாட்டுதலின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். பனிப்போர் முடிந்த பிறகும் உலகில் தங்களது செல்வாக்கு நீடிக்க அமெரிக்கா இந்த நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்தியது.


பனிப்போருக்கான அமெரிக்க வெள்ளை மாளிகையின் அவதாரம் USAID - (United States Agency for International Development) | ட்ரம்ப், எலன் மாஸ்க்


இந்த நிறுவனம் தனது திட்டங்களை செயல்படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. அமெரிக்க அரசின் அறிக்கையில், செர்பியாவில் செயல்படக்கூடிய LGBTQ குழுவிற்கு 1.5 மில்லியன் டாலர்களும், வியட்நாமில் மின்சார வாகனங்கள் பெருக்குவதற்கு 2.5 மில்லியன் டாலர்களும், எகிப்தில் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆறு மில்லியன் டாலர்களும் மானியமாக வழங்கியதில் அனைத்தும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட உதவிகளாகவே இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்கள். வரி செலுத்துவோருக்கு கணக்கு கொடுக்காமல் இந்த நிறுவனம் செயல்பட்டு உள்ளது. செல்லப்பிராணி வளர்ப்பதற்கான மிகப்பெரும் தொகையை செலவு செய்திருக்கிறார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கையே வெளிப்படுத்துகிறது.


2023 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தில் பத்தாயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை உள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரத்தியேகமான அலுவலகங்களை அமைத்து செயல்படுகிறது.


இந்த நிறுவனம் எவ்வாறு அமெரிக்க உதவியின்றி வளர்ந்திருக்க முடியும். மனிதாபிமானம் மற்றும் வளர்ச்சி உதவி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறும் இந்த நிறுவனத்தின் உண்மையான நோக்கமும் நடைமுறையும் பணிப்போர் காலத்தில் சோவியத்துக்கு எதிராகவும், அதன் பிறகு தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டது அதாவது சித்தாந் ஊடுருவல் செய்வதற்கு ஜனநாயக சீர்திருத்தம் என்ற பெயரால் இது அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்தது.


இன்று ட்ரம்ப், எலன் மாஸ்க்கும் ஏன் இந்த உதவியை நிறுத்துகிறார்கள் என்று கேள்வி எழத்தான் செய்யும். இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நீண்ட காலம் செயல்பட்ட ஜேம்ஸ் குந்தர் தனது அறிக்கையில் கீழ்கண்ட விஷயத்தை சுட்டி காட்டி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் பெறப்பட்ட கடினமான பாடம் என்னவென்றால் வளர்ச்சி திட்டங்கள் ஒரு பயனுள்ள ராஜதந்திர மற்றும் ராணுவ உத்திக்கு நல்ல மாற்றாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.


அதாவது தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த ராணுவ நடவடிக்கைகளுக்கு துணையாக இந்த அமைப்பின் செயல்பாடு உதவி செய்ய வில்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே இந்த வழிமுறைகள் மூலம் தொடர்ந்து இதை நடத்த முடியாது என்ற முடிவுக்கு டொனால்ட் ட்ரம்ப் வந்தது மட்டுமல்ல அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஆட்சியாளர்களின் மூச்சை திணறடிக்கிறது எனவே இந்த தடாலடி அறிவிப்புகள் வந்தது. இவை திடீரென்று வந்ததல்ல படிப்படியாக சில நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள்.


1995 மற்றும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் பணியாளர்களில் 29 சதவீதம் பெயர்களை குறைத்தார்கள். நேரடி பணியமறுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதற்கு மாறாக ஊழியர்களை அவுட்கோசிங் என்ற முறையில் அதிகம் பேரை பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்பொழுது டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற உடன் இந்த நிறுவனத்தின் ஏராளமான ஊழியர்களை ஊதிய விடுப்பு எடுக்குமாறு உத்தரவிட்டார். பிப்ரவரி 7ஆம் தேதி அன்று அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி ஊதிய விடுப்பு திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும் பிப்ரவரி 13 அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிப்புக் கொடுக்கப்பட்டது.


எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் நோக்கம் முழுமையாக இன்று பயனளிக்கிறதா இல்லையா என்பதை கேள்விக்குள்ளாக்கி அது பயனளிக்கவில்லை என்ற முடிவிலிருந்து அவர் விரும்பாத நாடுகளை அல்லது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிற நாடுகளுக்கான உதவிகளை தடாலடியாக நிறுத்துகிறார்.


இந்த நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றப்படும் சுகாதாரத் திட்டங்கள் ,குழந்தைகள் வளர்ச்சி, மனிதாபிமான செயல்பாடுகள், குடிநீர் போன்ற திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்கள் செயல்படுகிறது. அவர்களின் சார்பில் இத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால் இதனால் பயனடைந்த மக்கள் மிகப்பெரிய ஆபத்திற்கு உள்ளாவார்கள் என்று எச்சரிக்கிறார்கள்.


ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அல்லது மூலதனத்திற்கோ மனிதாபிமானம் முக்கியமல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் மேலாதிக்க சுரண்டல், உலக முதலாளித்துவத்தின் இருத்தல், ஆகியவை தான் முக்கியம். அதற்கு எதையும் செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகள்தான் இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் செயல்பாடுகளும் அதன் இன்றைய நெருக்கடிகளும் ஆகும்.


எழுதியவர் : 

அ.பாக்கியம்

bookday.in இணையத்தில் வெளியானது


இது தொடர்பான முந்தைய கட்டுரை வாசிக்க...


டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு: பாஜகவின் குட்டு அம்பலம்

https://aimporibakkiam.blogspot.com/2025/02/blog-post_22.html


#USAID #AMERICA#BJP

Saturday, November 18, 2023

மேரி கியூரி

 நீர் வற்றிக் கொண்டிருக்கும் காலங்களில் முதலைகள் வேட்டையாட நீருக்குள் காத்திருக்கும்.

வெளியில் இருக்கும் நிலம் வாழ் விலங்குகளுக்கோ உள்ளே முதலை இருப்பது தெரியும். 

தெரிந்தாலும் எத்தனை காலம்தான் தாகத்துக்கு நீர் குடிக்காமல் இருப்பது. 

ஆனது ஆகட்டும் என்று நீர் குடிக்க வரும் போது காத்திருந்த முதலைகள் அவைகளை வேட்டையாடிவிடும்.

ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணின் தனிமனித அடிப்படை உணர்வுகளை ஆசைகளை நுணுக்கமாக கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்க உலகம்

அப்பெண்ணின் ஆசைகளை கடக்க உதவி செய்யும் புறக்காரணிகள் இல்லாமல் போகும் போது “எப்போது இந்த பெண் சமூக ஒழுக்கத்தை மீறுகிறாள். எப்போது பிடித்து அவமானப்படுத்தலாம்” என்று முதலைகள் போல் காத்திருக்கிறது. 

அவளுக்கான தனிமனித தேவைகளை தனிப்பட்ட அளவில் தேடி போகும் போது அதை சுட்டிக் காட்டி சமூக பிரச்சனையாக சமூகத்தில் சித்தரித்து அவமானப்படுத்துவது மட்டுமில்லாது 

“ஐயோ நாம் தவறிவிட்டோமோ” என்ற குற்ற உணர்வையும் அப்பெண்ணிடமே ஏற்படுத்தி விடுகிறது இந்த ஆணாதிக்க சமூகம்.

இதிலிருந்து எல்லாம் மீண்டு ஒருவர் அறிவியலில் சாதித்து மனித குலத்துக்கு நல்லது செய்திருக்கிறார் என்றாலது எப்பேற்பட்ட விஷயம். 

மேரி கியூரி என்றால் பிரபல பெண் விஞ்ஞானி. 

அவர் அறிவாளி என்று நிறைய விஷயம் கேள்விப்பட்டிருப்போம். 

ஆனால் அவர் வாழ்க்கையில் நிறைய சோகங்கள் உள்ளன. 

அதில்லாமல் சமூகம் அவரை அவமானப்படுத்த பலமுறை துடித்திருக்கிறது. 

தனக்காக தன் ஆராய்ச்சியையே கைவிட்டு உதவி செய்ய வந்த காதல் கணவர் பியரி கியூரியை மேரி அதிகம் நேசித்தார். 

நோபல் பரிசு பெற்ற அதே ஆண்டில் மேரி தன் கணவரோடு சாலையை கடக்க முயற்சி செய்யும் போது பியரி ஒரு குதிரை வண்டியில் அடிபட்டு இல்லாமல் ஆகிறார்.

கணவரின் இந்த இழப்பு மேரி கியூரியை அழ வைக்கிறது. கதறிவிடுகிறார். 

அவர்கள் இருவரும் வேலை செய்த ஆராய்ச்சி கூடத்துக்கு சென்று மேரியால் வேலை செய்ய முடியவில்லை. 

Anhedonia என்ற மனநோயால் மேரி கியூரி பாதிக்கப்படுகிறார். 

Anhedonia என்றால் எந்த வேலை அதிகம் பிடிக்குமோ அதே வேலை மேலேயே வெறுப்பு வரும் மனநிலையாகும். அல்லது இன்பத்தை நுகரமுடியாத மன அழுத்தம் என்றும் அதை சொல்கிறார்கள். 

அதாவது hedonia  வின் எதிர்பதம்.

ஆனாலும் மேரி பல்லை கடித்துக் கொண்டு வேலை செய்வதை நிறுத்தவே இல்லை. 

கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கிறார். 

இதற்கிடையில் மேரி நோபல் பரிசு பெற்றவராக இருந்தமையால் அவர் வீடு மற்றும் அலுவலகத்துக்கு வெளியே எப்போதும் போட்டோகிராபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரு கணவனை இழந்த பிரபலம் நிச்சயமாக வேறு யாருடனாவது தொடர்பு வைப்பார் அதை பத்திரிக்கை செய்தி ஆக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். 

ஆனால் மேரியோ அவர்களிடத்தில் மிக கவனமாக இருந்தார். 

ஒரு பெண்ணோ ஆணோ தன் உடல் மற்றும் மனத்தேவைக்காக இன்னொருவரிடம் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் என்ற கணக்கில் மேரி தன் கணவரின் மாணவர் ஒருவரிடத்தில் காதல் வயப்படுகிறார். 

அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். 

கடிதங்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். 

அந்த கடிதத்தை கைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் பேப்பரில் “நோபல் பரிசு பெற்ற சீமாட்டியின் காம தாகம்” ரீதியில் செய்திகளை போட்டு மேரியை அவமானப்படுத்துகிறார்கள். 

மொத்த மக்களும் மேரியை அவமானப்படுத்துகிறார்கள். 

கேலியாக சிரிக்கிறார்கள். 

மேரியோ மனதளவில் உடைந்து விடுகிறார். அவருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது.

இருப்பினும் சாகக்கூடாது என்று தன் மன அழுத்தம் முழுவதையும் ஆராய்ச்சி கூடத்திலேயே இருந்து புதிதாய் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார். 

மேரி அந்த காலப் பெண் ஆனதால் தன் மறை காதல் பற்றி நிறைய குற்ற உணர்வு கொள்கிறார். 

தன் கணவருக்கு துரோகம் இழைத்து விட்டதாகவே நினைக்கிறார். தன் மகள் கணவர் பெயரை போட்டு தன் பெயரை கடித்தத்தில் குறிப்பிடும் போது “மகளே அம்மாவுக்கு ஒரு நன்மை செய்வதாய் இருந்தால் அப்பா பெயருடன் என் பெயரை போடாதே. அதற்கு தகுதியானவள் நானில்லை. அவருக்கு துரோகம் செய்தவள் நான் “என்று உருகுகிறார். அவரைப் பொறுத்தவரை அதை தவறாக நினைக்கிறார்.

பின் தன் மறைக்காதலை விட்டு மேரி விலகுகிறார். 

மீண்டும் மீண்டும் அறிவியலிலேயே தன் மனதை திருப்புகிறார். 

ஆனால் சமூகம் அவரை கிண்டல் செய்து கொண்டேதான் இருக்கிறது. 

இந்நிலையில் மேரி கியூரி 1911 ஆம் தன் இரண்டாம் நோபல் பரிசை பெறுகிறார். இது எந்த பெண்ணும் சாதிக்காத உலக சாதனையாகும். 

மேரியின் சாதனையைப் பார்த்த சமூகம் அமைதியாகிறது. 

அதோடு மேரி விடவில்லை. 

முதல் உலகப்போரில் ப்ரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. ஒவ்வொருவரையும் எக்ஸ்ரே எடுக்க பாரீஸுக்கு எடுத்து வர வேண்டியதாய் இருக்கிறது. 

ஒருவேளை எக்ஸ்ரே மிஷின் போர்களத்திலேயே இருந்தால் வசதியாய் இருக்கும் என்று அவர்கள் கருதினர். 

ஆனால் எக்ஸ்ரே மிஷினை எப்படி போர்க்களத்துக்கு எடுத்து செல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மேரி கியூரி அந்த எக்ஸ்ரே மிஷினை கொஞ்சம் மாற்றி வடிவமைத்தார். 

பெரிய ட்ரக் வண்டி இருபது வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தார். எக்ஸ்ரே மிஷினை தூக்கி ட்ரக்கில் வைத்தார். அப்படி இருபது வண்டிகள் தயார் செய்தார். 

அதை ஓட்ட இருபது பெண்களை தயார் செய்தார். வண்டி நின்றுவிட்டால் அதை மறுபடியும் ஓட்ட வைக்க மோட்டார் மெக்கானிசம் கற்றுக் கொண்டார். 

”எட்றா வண்டியை” என்று நகரும் எக்ஸ்ரே மிஷினோடு ப்ரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு சேவை செய்ய போய்விட்டார். 

இதனாலேயே சின்ன சின்ன அறுவை சிகிச்சையை டாக்டர்களால் களத்திலேயே செய்ய முடிந்தது. அதனால் பல வீரர்கள் குணமடைந்தனர். 

முதலாம் உலகப்போரில் ப்ரான்ஸ் வெற்றி பெற மேரி கியூரி அப்படி உதவினார். 

சமூக மேரி கியூரிக்கு கொடுத்தது என்னவோ அவமானமும் கேலியும்தான்.

ஆனால் மேரி சமூகத்துக்கு கொடுத்தது அன்பையும் தியாகத்தையும்தான். 

மேரி கியூரியின் முதல் நோபல் பரிசுக்கும்  இரண்டாம் நோபல் பரிசுக்கும் இடைப்பட்ட அந்த 5 வருடங்களும் அவருக்கு வந்த பிரச்சனை வேறு யாருக்காவது வந்திருந்தால் அவர்கள் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். 

ஆனால் மேரி கியூரி தாக்குபிடித்து திரும்ப அடித்தார். 

அந்த அடியை எதிர்மறையாக அடிக்காமல் சமூகத்துக்கு நன்மை செய்யும் நேர்மறை அடியாக அடித்தார். 

க்ரேட் இல்ல... 

மேரி கியூரியிடம் இருந்து சோர்வடைந்த உள்ளங்கள் கற்றுக் கொண்டு புத்துணர்வடைய ஏராளம் இருக்கிறதுதான்.

இன்று நவம்பர் 7 மேரி கியூரியின் பிறந்தநாள் ஆகும்.

Vijay Bhaskarvijay பதிவு

Sunday, April 18, 2021

மார்க்சீய இடது சாரிகளின் சிந்தனைக்கு

 

தேர்தல் முடிந்துவிட்டது. மக்கள் ஜனநாயகத்தை இலக்காக கருதும் மார்க்சீய இடது சாரி மனப் போக்குள்ளவர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்கு. விடைதேடுவது அவசியம்

 நாடாளுமன்ற அரசியல் சாக்கடையாக ஆகிவிட்டதை சுத்தப்படுத்துகிற யுக்திகளை தேடப் போகிறோமா அல்லது குறுக்குவழியில் அதில் விழுந்து பதவிசுகம் பெறும் வழியிலேயே போகப் போகிறோமா என்ற கேள்விகளுக்கு பதில் அவசிமாகிறது  

  70வருட மாக நாடாளுமன்ற ஜனநாயகம் படிப்படியாக தரமிழந்து தனிநபர் கையில் அதிகாரத்தை குவியவைத்துவிட்டது. இன்று மோடி அரசால் பிரிட்டீஷ் ஆட்சிகாலத்து அதிகார குவியல் நடைமுறைகள் புதுப்பிக்கப்பட்டு நமது அரசியல் சாசனத்தை முடக்கிவிட்டது.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் .சட்டமன்றங்கள் ,நாடாளுமன்றம் அனைத்தும் குதிரை வியாபார சந்தையாகிவிட்டன.. அதிகாரிகளின் கையிலேயே அதிகாரங்கள் குவிக்கப் பட்டுள்ளன இடது ஜனநாயக இயக்கங்களின் நிர்ப்பந்தம் காரணமாக உருவான பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் அதிகார வர்க்கத்தின் பிடியில் இருப்பதால் ஜனநாயக விரிவாக்கத்திற்கு பயன்படவில்லை.

 சட்டமன்றம் முதலமைச்சரின் தர்பாராகிவிட்டது. மாநகராட்சி சட்டமும் தனிநபரின்கையில் அதிகாரத்தை கொடுத்துவிட்டது .

 இந்த சூழலில்தான் 2021 தேர்தல் நடந்துள்ளது. சட்டமன்றத்திறகான தேர்தல் என்பதைவிட பணக்காரர்களின் பணச் செலவில் நடந்த திருவிழா எனலாம். வேலையில்லாமல் தவிக்கும் கோடான கோடி இளைஞர்களுக்கும் கலை இலக்கிய நவீன தகவல் தொழில்நுட்ப  துரையினருக்கும்  கூலியாக  வருவாய் வந்தது. கொரான கொடுத்த கடன் சுமையை இறக்கிவைக்க சிலருக்காவது உதவியிருக்கலாம்.

 இதனால் நமது அரசியல் சாசனத்தை மதித்து மக்களுக்கு சேவை செய்யும் சட்டமன்றம் உருவாகுமா என்றால் இல்லை என்றே உறுதியாக கூறலாம். இந்த தேர்தலில் நின்ற பெரும்பாலான வேட்பாளர்களுக்கு அப்படி ஒரு அரசியல் சட்டம் இருப்பதுவே தெறியாது.

 இரட்டைஇலையோ, உதய சூரியனோ தாமரையோ பெரும்பாலான சட்டமன்ற வேட்பாளர்கள் தொகுதிமக்களின் மனதிலே இடம் பிடித்தால் போதும் என்ற பார்வை கொண்டவர்களாக இருந்தனர் என்பதை தேர்தல் பிரச்சாரங்களே காட்டின. இவர்கள் சட்டமன்றத்திற்குள்ளே போனால் தலைவரின் மனதிலே இடம்பிடிக்கவே முயல்வரே தவிற அரசாங்க செயலை அதிகாரிகளின் நடத்தையை கண்காணிக்கும் கடமையை உணரமாட்டார்கள்.இதைத்தான் அணுபவம் கூறுகிறது. 


   சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 1971 தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று  சென்னை நகர ஆறுகளை தூய்மைபடுத்துவதாகும். 51வருடங்கள் கடந்த பிறகும்  நிறைவேறவில்லை. 21 வருடங்களுக்கு முன்னால் சென்னை நகரை சிங்கப்பூராக்குவேன் என்ற வாக்குறுதி கொடுத்தே ஸ்டாலின் மேயரானார். அதுவும்  நிறைவேறவில்லை.


 வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டமன்றம் அரசியல் நிர்ணயசட்டப்படி இயங்கி அதிகாரவர்க்கத்தை கண்காணிக்க தவறியதால் வாக்குறுதிகள் காற்றிலே பறந்தன. அல்லது ஊழலில் மாட்டிக் கொண்டன.

 புதிதாக அமைய இருக்கும் ஆட்சியின் தலைவிதி மோடி அரசின் சூழ்ச்சியை சந்திக்கும் முறையை பொறுத்தது.


 இன்று மோடி அரசின் அரசியல் பொருளாதார கொள்கைகளே  விலைவாசி உயர்விலிருந்து. விவசாயம்- தொழில் நெருக்கடி வரை  மக்களை வதைக்கின்றன. அதற்கெதிராக மக்களை திரட்டும் பாதையை விட்டு மதசார்பின்மை என்ற போர்வையில் தொகுதி உடன்பாடு என்ற பழைய பாதை இடது சாரிகளை அழித்துவிடும்.     

   Com V Meenakshi Sundaram in face book

Saturday, January 23, 2021

What is a protein? A biologist explains

 

What is a protein? A biologist explains

Editor’s note: Nathan Ahlgren is an assistant professor of biology at Clark University. In this interview, he explains exactly what proteins are, how they are made, and the wide variety of functions they perform in the human body.

Nathan Ahlgren explains what proteins do in our body.

What is a protein?

A protein is a basic structure that is found in all of life. It’s a molecule. And the key thing about a protein is it’s made up of smaller components, called amino acids. I like to think of them as a string of different colored beads. Each bead would represent an amino acid, which are smaller molecules containing carbon, oxygen, hydrogen and sometimes sulfur atoms. So a protein essentially is a string that’s made up of these little individual amino acids. There are 22 different amino acids that you can combine in any kind of different way.

A protein doesn’t usually exist as a string, but actually folds up into a particular shape, depending on the order and how those different amino acids interact together. That shape influences what the protein does in our body.

Where do the amino acids come from?

The amino acids in our body come from the food we eat. We also make them in our body. For example, other animals make proteins and we eat those. Our bodies take that chain and break it down into the individual amino acids. Then it can remake them into any protein that we need.

Get your news from people who know what they’re talking about.

Once the proteins are broken down into amino acids in the digestive system, they are taken to our cells and kind of float around inside the cell, as those little individual beads in our analogy. And then inside the cell, your body basically connects them together to make the proteins that your body needs to make.

We can make about half of the amino acids we need on our own, but we have to get the others from our food.

What do proteins do in our body?

Scientists are not exactly sure, but most agree that there are around 20,000 different proteins in our body. Some studies suggest that there might be even more. They carry out a variety of functions from doing some metabolic conversions to holding your cells together to causing your muscles to work.

Their functions fall into a few broad categories. One is structural. Your body is made up of many different kinds of structures – think of stringlike structures, globules, anchors, etc. They form the stuff that holds your body together. Collagen is a protein that gives structure to your skin, bones and even teeth. Integrin is a protein that makes flexible linkages between your cells. Your hair and nails are made of a protein called keratin.

Another big role that they take on is biochemistry – how your body carries out particular reactions in your cell, like breaking down fat or amino acids. Remember when I said our body breaks down the protein from the food that we eat? Even that function is carried out by proteins like pepsin. Another example is hemoglobin – the protein that carries oxygen around in your blood. So they’re carrying out these special chemical reactions inside yourself.

Proteins can also process signals and information, like circadian clock proteins which keep time in our cells, but those are a few main categories of functions that proteins carry out in the cell.

Why is protein often associated with muscles and meat?

Different types of foods have different kinds of protein content. There are a lot of carbohydrates in plants like wheat and rice, but they are less rich in protein content. But meat in general has more protein content. A lot of protein is required to make the muscles in your body. That’s why protein is often associated with eating meat and building muscle, but proteins are really involved in much, much more than that.

Thanks to conversation.com

Wednesday, December 2, 2020

கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்

  நன்றி இந்து தமிழ் திசை டிசம்பர் 1, 2020

கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில் நுட்பம் 

By செய்திப்பிரிவு

கீழடியின் தொன்மை மட்டுமல்ல, அன்றைய காலத்தின் பொருள் பயன்பாட்டுப் பண்பாடும், அதன் தொழில்நுட்பங்களும்கூட மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று, நானோ தொழில்நுட்பத்தின் கூறுகள் பானை சுடுவதில் பயன்படுத்தப்பட்டிருப்பது. கீழடி அகழாய்வில் கிடைத்த பானை ஓட்டை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஆய்விதழான ‘நேச்சர்- சயின்டிபிக் ரிப்போர்ட்’ இதழில் இதை மெய்ப்பிக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் உட்புறத்தை வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திப் பார்த்தபோது அதன் கருப்பு வண்ணப்பூச்சில் கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன என்பதே அந்தக் கட்டுரை தரும் வியப்பூட்டும் செய்தி. கட்டுரையாசிரியர்களான விஐடி பேராசிரியர் சந்திரசேகர், ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் மோகன், இவரது குழுவினர் கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் உட்புறச் சுவரில் பூசப்பட்டிருக்கும் கருப்பு வண்ணம் பளபளப்புத்தன்மை குறையாமலும் சிதையாமலும் இருந்ததற்குக் காரணம் கார்பன் நானோ குழாய்களே என்கின்றனர்.

நானோ தொழில்நுட்பம்

மிக மிகச் சிறிய அளவில் (நானோ மீட்டர் அளவில்) பொருட்களை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம். ஒரு மீட்டரை நூறு கோடி பாகமாக பிரித்தால், அதில் ஒரு பாகமே ஒரு நானோ மீட்டர். இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் கருவிகள் கணினி, வானியல், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. நானோ தொழில்நுட்பம் இயற்கையிலேயே இருக்கிறது. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததற்குக் காரணம் நானோ அளவில் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பு. மருத்துவத் துறையிலும், கணினித் துறையிலும் நானோ தொழில்நுட்பப் பயன்பாட்டின் சாத்தியங்கள் கணக்கில் அடங்காதவை. கிராபீன் மூலக்கூறு என்பது அறுங்கோண வடிவில் வலுவான சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களால் ஆன ஒற்றை அடுக்கு அமைப்பாகும். இந்த கிராபீன் படலத்தைப் பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டினால் கிடைப்பதுதான் கார்பன் நானோ குழாய்கள். ஒற்றைச் சுவர் கொண்டதாகவும், பல்சுவர் கொண்டதாகவும் இரண்டு விதமான கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன.

பல்சுவர் கார்பன் நானோ குழாய்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நானோ குழாய்கள் ஒன்றின் மேல் ஒன்று சுருட்டியதுபோல இருக்கும். கார்பன் நானோ குழாய்களின் இழுவிசையைத் தாங்கும் வலிமை அதே அளவுள்ள எஃகை விட நூறு மடங்கு அதிகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் பானை ஓடுகளில் இருக்கும் கருப்பு வண்ணப்பூச்சு சிதையாமல் இருப்பதற்கு இந்த உறுதித்தன்மைதான் காரணம்.

கீழடியில் நானோ

கீழடியில் எடுக்கப்பட்ட பானை ஓடுகளில் ஒற்றைச் சுவர் நானோ குழாய்கள், பல்சுவர் நானோ குழாய்கள் என இரண்டுமே கண்டறியப்பட்டிருக்கின்றன. ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழாய்களின் விட்டம் 0.6 நானோ மீட்டர். இதில் சிறப்பு என்னவென்றால், 0.4 நானோ மீட்டர்தான் இயற்பியல் விதிகளின்படி சாத்தியம். அதற்கும் மிகச் சிறியது சாத்தியமில்லை. கீழடியில் கண்டறியப்பட்டது கிட்டத்தட்ட அந்த எல்லைக்கு அருகில் இருக்கிறது. அதேபோல், பல்சுவர் நானோ குழாய்களின் உள் விட்டம் 3 நானோ மீட்டர்.

தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களில் கார்பன் நானோ குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது இது முதன்முறையல்ல. மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களிலும், டமாஸ்கஸ் எஃகிலும் நானோ துகள்கள், கார்பன் நானோ குழாய்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த நானோ குழாய்கள் கி.பி. 8 அல்லது 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. தற்போது கீழடியில் கண்டறியப்பட்ட கார்பன் நானோ குழாய்களோ 2,400 வருடங்களுக்கும் முந்தியவை. இதுவே அனைவரின் வியப்புக்கும் காரணம்.

தமிழர்களின் பட்டறிவு

தற்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாக்க மூன்று அல்லது நான்கு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கார்பன் சார்ந்த ஏதேனும் ஒரு சேர்மத்தை எடுத்து குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றி மிக உயர் வெப்ப நிலையில், அதாவது 1,200 செல்சியஸ் அளவுக்கு வெப்பப்படுத்தினால் கார்பன் நானோ குழாய்கள் உருவாகும். மற்ற முறைகள் அனைத்துக்கும் நவீன வேதியியல் தொழில்நுட்ப முறைகள் தேவை. எனவே, மிக உயர் வெப்ப நிலையில் சூடாக்குவதன் மூலம்தான் அந்தக் காலத்து மக்கள் இதைச் சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.

சங்க காலத் தமிழர்கள் இரும்பு உருக்குவதிலும் பானை சுடுவதிலும் மிகச் சிறந்தவர்கள் என்பது அறிந்த ஒன்றே. பானை சுடும்போது அதில் வெவ்வேறு வண்ணங்கள் பூசுவது வழக்கம். அப்படிப் பூசும் வண்ணங்கள் சிதையாமலும் மங்காமலும் இருக்க வேண்டுமென்றால் எவ்வளவு வெப்பநிலை வரை பானைகளைச் சுட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தாவரம், மரம், செடி கொடிகளிருந்து வண்ணம் தயாரித்திருப்பார்கள். தாவரப் பொருட்களில் கார்பன் சார்ந்த சேர்மங்கள் நிறைய இருக்கின்றன. இப்படி வண்ணம் பூசப்பட்ட பானைகள் உயர் வெப்ப நிலையில் சுடப்படும்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாகியிருக்க வேண்டும். குறிப்பிட்ட உயர் வெப்ப நிலையில் பானை சுடப்பட்டால் அதில் பூசப்படும் வண்ணப்பூச்சு சிதையாமல் இருக்கும் என்ற பட்டறிவு 2,400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது உண்மையில் வியப்புக்குரிய விஷயம்தான்!

- ஜோசப் பிரபாகர், இயற்பியல் உதவிப் 




பேராசிரியர், லயோலா கல்லூரி.

Thursday, November 19, 2020

மார்க்சிய அரசியல் பொருளாதாரமே தேச வளர்ச்சிக்கான அடித்தளமாக உள்ளது – சீன குடியரசுத் தலைவர் ஷி-ஜின்-பிங் (தமிழில் : சிபி)

சீன நாடு, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை, தேசத்தின் எதிர்கால கட்டமைப்பிற்கான அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றும், மாறிக்கொண்டே வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப அதனை (மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை) தகவமைத்துக்கொள்ளும் என்றும் சீன அதிபர் ஷி-ஜின்-பிங் கூறியுள்ளார்.

சீனாவின் அரசியல் பொருளாதாரமானது, மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படையைக் கொண்டதாக மட்டுமே இருக்க முடியும் என்று அரசியல் கோட்பாடு இதழில் வந்த கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.

தமது நாட்டின் பொருளாதார மாதிரி, சீன பண்புகளை உள்ளடக்கிய சோஷலிச அமைப்பிற்கு ஒரு தூணாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், கட்சியின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவதாகவும் உள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஜி ஜிங்பிங் கூறியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சந்தை திறப்பு நடந்து 30 ஆண்டுக் காலம் ஆகிவிட்ட நிலையில் தற்போது மாறிவரும் உலக சூழல்களில் சீன நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வது கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார்.

சீன மார்க்சிய அரசியல் பொருளாதாரம் காலாவதி ஆகிவிட்டது என்ற கருத்துக்களை  ஷி-ஜின்-பிங் திட்டவட்டமாக மறுக்கிறார். சீன மார்க்சிய அரசியல் பொருளாதாரம் நாட்டின் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் சந்தைக்கு ஒரு முக்கிய பங்கை அனுமதிக்கிறது; மேலும் அரசாங்கத்தின் பங்கை மேம்படுத்துவதாகவும் உள்ளது என அவர் கூறினார்.

China contributes 30% to global economic growth in 2017 – The Mast Online
சீனா தன் நாட்டில் ஏனைய சொத்து உரிமைகளை ஆதரிக்கும் அதே வேளையில், பொது உரிமையில் உள்ள பொருளாதாரத்தை ஆதரிக்கவும், வளர்க்கவும் செய்யும் என்று கூறினார்.

சீன நாட்டினுள் பொது உரிமையின் மேலாதிக்க நிலையையும், பொருளாதார அரசுடைமையையும் அசைக்க முடியாது என்று கூறினார்.

வர்த்தகம், தொழில்நுட்பம், சித்தாந்தம் மனித உரிமைகள் மற்றும் கோவிட்-19 ஆகியன குறித்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சனைகள் உள்ள நிலையில் ஷி-ஜின்-பிங் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பனிப்போர் காலத்தின் சோவியத் ரஷ்யாவை விடச் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா கடினமாகக் கருதுவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சென்றவாரம் கூறியிருந்தார்.

Xi's thought a development of Marxism - Opinion - Chinadaily.com.cn
மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது அதன் முதலாளித்துவ முறையையோ சீனா பின்பற்ற முயலக்கூடாது என்று ஷி-ஜின்-பிங் கூறியுள்ளார்.

பல முதலாளித்துவ நாடுகள் தற்போது பொருளாதார சரிவு, வேலையின்மை, வளர்ந்துவரும் பிரிவினைவாதம், மோசமாகி வரும் சமூக முரண்பாடுகள் போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன என்று ஷி-ஜின்-பிங் கூறினார்.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான வர்த்தக போர், 2018 ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பதற்காக நடப்பதாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, இரு தரப்பிலிருந்தும் காரணங்கள் ஏதுவுமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் இந்த தருணத்தில், அரசியல் காரணங்களால் இந்த பேச்சுவார்த்தை தடைப்பட்டு இருக்கலாம் என்று ரபோ பேங்க்கின் மூத்த அதிகாரி மைக்கேல் எவிரி கூறினார்.

எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் வேளாண் பொருட்களை வாங்க இப்போது சீனா அதிகமான ஆர்டர்கள் கொடுத்திருப்பது பற்றி டிரம்ப் கூறியதை (இது கடந்த ஜனவரியில் உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்) மைக்கேல் எவிரி சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்வார்கள் என்று தெரியாத நிலையில் சீனா தற்போதைக்கு அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஆனால் அந்த நிலை டிரம்பிற்கு சாதகமாக அமையும் போது அந்த உடன்படிக்கை ஒரு கட்டத்தில் சரியும் என்று கருதுகிறோம் என அவர் கூறினார்.

செய்தித்தாள்: சவுத் சீனா மார்னிங் போஸ்ட்

ஆசிரியர் – கரென் யெங்கு

வெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2020

https://bookday.co.in/marxist-political-economy-is-the-foundation-of-national-development-chinese-president-xi-jinping/

தமிழில் சிபி பரத்


Friday, November 13, 2020

சோசலிசம் நோக்கிய பயணம் நவீன தாராளமயச் சூழலில் மிக மிகக் கடினமாக மாறியுள்ளதே!

நாளொரு கேள்வி: 07.11.2020


நவம்பர் புரட்சி தின சிறப்பு பகிர்வு


இன்று நம்மோடு இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார நிபுணர் *பிரபாத் பட்நாயக்* (ஜூலை 2017 Monthly Review இதழில் எழுதிய விரிவான கட்டுரையின் சாரம்- க.சுவாமிநாதன்)

####################


*கேள்வி*


சோசலிசம் நோக்கிய பயணம் நவீன தாராளமயச் சூழலில் மிக மிகக் கடினமாக மாறியுள்ளதே! 


*பிரபாத் பட்நாயக்* 


முதலாளித்துவம் மனித குலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும் வல்லமை பெற்றதாக இல்லை என்பது *வரலாற்று ரீதியாக நிரூபணம்* ஆகிவிட்டது. போர்கள் உள்ளிட்ட கொடூரமான வழி முறைகளைக் கூட கையாண்டு *உழைப்பாளி மக்களை பீரங்கி இரைகளாக்கி அப் பிணக்குவியல் மீது மூலதனக் குவிப்பை நடத்திய, நடத்துகிற ரத்தம் தோய்ந்த வரலாறு* உலகம் முழுவதும் இருக்கிறது. 


ஆனாலும் சோசலிசத்திற்கான பயணம் பல திருப்பங்களை, மேடு பள்ளங்களைக் கொண்டதாகவே இருக்கும். காலம் *புதிய புதிய இணைவுச் சூழல்களை* (Conjuncture) உருவாக்கும். அது அக் காலத்திய வர்க்க பலாபலன்களைப் பொறுத்து அமையும். 


*முதலாளித்துவம் தனது துவக்க காலங்களில் நிலப்பிரபுத்துவத்தை வேரறுப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தது.* அதனால் அது விவசாயப் பெருங்குடி மக்களை தன் பால் ஈர்க்கவும் முடிந்தது. இதனை துவக்க கால முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளில் காண முடிந்தது. ஆனால் பிந்தைய காலங்களில் முதலாளித்துவம் அக் கடமையை கைகழுவி விட்டது. காரணம் அதற்கு அச்சம். விவசாயப் புரட்சியை தானே நிறைவு செய்தால் சோசலிசத்தை நோக்கி நடை போடுவதற்கான உந்துதல் புரட்சிகர சக்திகளுக்கு கிடைத்து விடும் என்பதுதான். ஆகவே *விவசாயப் புரட்சியை நிறைவு செய்ய வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் விழுந்தது.* இதன் விளைபொருளாகவே தொழிலாளி- விவசாயி கூட்டணிக்கான தேவை எழுந்தது. 


*சோசலிசத்திற்கான பயணம்* இவ்வாறு எழும் இணைவுச் சூழல்களுக்கு ஏற்ப தகவமைக்கப்பட வேண்டும். 


முதலாளிகளோடு சேர்ந்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக ஜனநாயகப் புரட்சியை நடத்திய காலங்களில் முதலாளித்துவத்தின் இத்தகைய ஊசலாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது போல சோசலிசப் புரட்சியை முதலாளித்துவத்தை வீழ்த்த நடத்தும் போது விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் ஊசலாட்டத்தை எதிர்கொண்டு அவர்களையும் திரட்டி முன்னேற வேண்டியிருக்கும். 


பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன் இரண்டும் இது குறித்து தருகிற படிப்பினைகள் முக்கியம். அதை இங்கு நாம் விவரிக்கவில்லை. *பிரெஞ்சு புரட்சிக்கு* விவசாய வர்க்கங்களைப் பயன்படுத்திக் கொண்ட முதலாளிகள் *பாரிஸ் கம்யூனின் வீழ்ச்சிக்கும்* அவர்களை ஈர்த்துப் பயன்படுத்த முடிந்தது என்பதை மட்டும் இங்கு பதிவு செய்வது கூடுதலாக இது குறித்த தேடலுக்கு உதவும். 


ஆகவேதான் சோசலிசம் நோக்கிய பயணத்தில், முதலாளித்துவம் ஈடேற்றாத ஜனநாயகக் கடமைகளை முழுமை செய்வதில், *தொழிலாளி - விவசாயிக் கூட்டணியின் தலைமையாக தொழிலாளி வர்க்கம்தான் இருக்க முடியும்.*


மீண்டும் "இணைவுச் சூழல்களுக்கு" வருவோம். எப்படி முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டதோ அது போன்று இணைவுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை மிகச் சரியாக உள்வாங்கி, மதிப்பிட்டு, அதற்கேற்ற திட்டத்தோடு புரட்சியின் கட்டங்களை தீர்மானித்து சோசலிசம் நோக்கிய பயணத்தை அமைத்திட வேண்டும். 


*ஏகாதிபத்தியம்* என்கிற கருத்தாக்கத்தை லெனின் உருவாக்கியது, *அரசுத் தலையீடு நோக்கி உலக முதலாளித்துவம் நகர்ந்து தனக்கு ஓர் மென்மையான முகத்தை தந்து கொண்டது,* பின்னர் சர்வதேச நிதி மூலதனத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலை மையமாகக் கொண்ட *உலகமயப் பாதை* உருவாகியிருப்பது என "இணைவுச் சூழல்களில்" நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கு ஏற்ற தகவமைப்பு சோசலிசம் நோக்கிப் பயணித்தவர்களுக்கு தேவைப்பட்டது. மார்க்சீய கருத்தியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கும் இதுவெல்லாம் காரணிகளாக அமைந்துள்ளன. 


தற்போதைய *நவ தாராளமய "இணைவுச் சூழலை" எவ்வாறு எதிர் கொள்வது* என்ற விவாதத்திற்கு வருவோம். 


இன்றைய இணைவுச் சூழலில் உழைப்பாளி மக்களின் துயர் களைய *அரசு தலையீடு* தேவைப்படுகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் தளையிலிருந்து விடுபட்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்குகிற சுதந்திரம் அரசுக்கு இருக்க வேண்டும். இச் சுதந்திரத்தை இரண்டு வழிகளில்தான் எட்ட இயலும். ஒன்று எல்லா பெரிய தேசிய அரசாங்கங்களும் கை கோர்த்து (மாற்று உலக அரசாங்கம் போன்று) சர்வதேச நிதி மூலதனத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்க வேண்டும். இரண்டாவது, தனித் தனி நாடுகளோ, குழுவாகவோ சர்வதேச நிதி மூலதனப் பிடியில் இருந்து விடுபட்டு மூலதனக் கட்டுப்பாடுகளை விதித்து மாற்று நிகழ்ச்சி நிரலை மேற்கொள்ளலாம். 


இதை விவரிப்பதெனில், கிராக்கியின் அளவை உயர்த்தி வேலையின்மை குறைக்க வேண்டும். ட்ரம்ப் போல *"அக்கம் பக்கத்தாரிடம் இருந்து பிடுங்குவது"* (Beggar thy neighbour) என்ற வழிமுறையை கடைப் பிடித்தால் மற்ற நாடுகளும் தங்கள் சந்தையைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அது நெருக்கடியை ஆழப்படுத்தி வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும். 


அரசின் *பணக் கொள்கைகள்* (Monetary policies) இன்று கிராக்கியை உயர்த்துகிற சக்தியற்றவையாக உள்ளன. ஆகவே *நிதிக் கொள்கைகள்* வாயிலாகவே அது நடந்தேற வேண்டும். 


அதற்கு *இரண்டு வாய்ப்புகள்* உள்ளன. ஒன்று, சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறாக பெரிய தேசிய அரசுகள் சில, நிதி ஊக்கத் திட்டங்களை (Fiscal stimulus)  அறிவிக்கலாம். 1930 இது போன்ற கோரிக்கையை ஜெர்மனி தொழிற்சங்க இயக்கம் முன் வைத்தது. கீன்சும் முன் வைத்தார். அது போன்று இந்த நாடுகளின் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் வாயிலாகவே இதைச் செய்வதற்கான நிர்ப்பந்தங்களைத் தர முடியும். 


இரண்டாவது வழி, தனி நாடுகள் மூலதனக் கட்டுப்பாடுகள், நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பின் மூலம் அரசு முதலீடுகள், பணக்காரர்கள் மீது வரிகள் என்ற வழிகளில் நிதி விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். *தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி பலமாக உள்ள நாடுகள்தான் மற்ற நாடுகளை விட இத்தகைய பாதையில் நீண்ட காலம் நீடித்து நிற்க முடியும்.* சர்வதேச நிதி மூலதன வலைப் பின்னலில் இருந்து விடுபடாமல் இவ் வழிமுறை சாத்தியம் இல்லை. எவ்வளவு விடுபட வேண்டும் என்பதை சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு செய்யலாம். 


ஒரு குறிப்பிட்ட இணைவுச் சூழலை கடப்பது என்பது சமூக அமைப்பையே மாற்றுவது என்ற இலக்கோடு இணைந்ததாக இருக்க வேண்டும். தொழிலாளி - விவசாயி கூட்டணியில் இணைகிற புரட்சிகர சக்திகளுக்கு தங்களின் இறுதி இலக்கு குறித்த புரிதல் இல்லாமல் இருந்தால் சர்வதேச நிதி மூலதனத்தை எதிர்த்த களத்திலேயே அவர்கள் காதுகளில், மார்க்ஸின் வார்த்தைகளில் *"மத்தள தத்துவ விசாரணைகளாக"* ( Drum dialectics) மாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட இணைவுச் சூழலைக் கடப்பதற்கே சமூக அமைப்பைக் கடக்கிற முனைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்த வேண்டும். 


*நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான விவசாய வர்க்கங்களின் விருப்பம் (மூன்றாம் உலகின் மற்ற சிறு உற்பத்தியாளர்களுடையதும்) இன்று உலகமயம் விதித்துள்ள நவீன தாராளமயத்தின் ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெறுவதாக விரிந்துள்ளது.* சர்வதேச நிதி மூலதனத்தை மையமாகக் கொண்ட  உலகமயத்தின் பிடியில் இருந்து விடுபடுவதையும் கடந்த இலக்கைக் கொண்ட ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் தேசிய அரசால் சுதந்திரமாக செயல்பட இயலும். 


உலகமயம் தொழிலாளர்- விவசாயி கூட்டணிக்கான தேவையையும், வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. *இரண்டு தெரிவுகள்தான் உள்ளன.* ஒன்று இக் கூட்டணியைப் பலப்படுத்துவது. இரண்டாவது, நெருக்கடிக்குள் மேலும் மேலும் மூழ்கி பாசிச சிந்தனைகள் வளர்ந்து அதன் துணையோடு சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடர அனுமதிப்பது. 


ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. முதலாளித்துவம் ஒழுங்கற்றதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதாக உள்ள நிலையில் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தில் இருந்து *அவ்வளவு எளிதாக விடுதலை பெற முடியுமா?* கடும் ஒடுக்குமுறை கொண்ட தற்போதைய இணைவுச் சூழல்  "வெளியேறும் வழிகளற்றதாக" உள்ளதா என்பதே அது. 


இதற்கான விடை களத்திலேயே கிடைக்கும். *வலுவான தொழிலாளர் - விவசாயிக் கூட்டணி தற்போதைய இணைவுச் சூழலை கடக்க மிக முக்கியம்.* சோசலிசத்திற்கான நகர்வு காலம் எடுப்பதாக இருக்கக் கூடும். ஆனால் அதுதான் இலக்கு என்ற புரிதல் இல்லாமல் நவீன தாராளமய "இணைவுச் சூழலை" கடப்பதே எளிதாக இருக்கிறது. முதல் முன்னுரிமையாக நவீன தாராளமய எதிர்ப்பு அமையலாம். ஆனால் இறுதித் தீர்வை நோக்கிய தெளிவு, உறுதி, முனைப்பு அவசியம். 


*****************

*செவ்வானம்*

*****************


கட்டுரையை முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் இந்த லிங்க்'கிற்குள் செல்லவும்.


https://monthlyreview.org/2017/07/01/the-october-revolution-and-the-survival-of-capitalism/