Tuesday, October 13, 2015

Letter to dear son

Beautiful letter written by a father to his son 👌
Must send to your children

Following is a letter to his son from a renowned Hong Kong TV broadcaster and Child Psychologist.
The words are actually applicable to all of us, young or old, children or parents.!
This applies to daughters too. All parents can use this in their teachings to their children.


Dear son ,

I am writing this to you because of 3 reasons

1. Life, fortune and mishaps are unpredictable, nobody knows how long he lives. Some words are better said early.

2. I am your father, and if I don't tell you these, no one else will.

 3. What is written is my own personal bitter experiences that perhaps could save you a lot of unnecessary heartaches. Remember the following as you go through life



 1. Do not bear grudge towards those who are not good to you. No one has the responsibility of treating you well, except your mother and I.
To those who are good to you, you have to treasure it and be thankful, and ALSO you have to be cautious, because, everyone has a motive for every move. When a person is good to you, it does not mean he really likes you. You have to be careful, don't hastily regard him as a real friend.

2. No one is indispensable, nothing is in the world that you must possess.
Once you understand this idea, it would be easier for you to go through life when people around you don't want you anymore, or when you lose what/who you love the most.

 3. Life is short.
When you waste your life today, tomorrow you would find that life is leaving you. The earlier you treasure your life, the better you enjoy life.

4. Love is but a transient feeling, and this feeling would fade with time and with one's mood. If your so called loved one leaves you, be patient, time will wash away your aches and sadness.
Don't over exaggerate the beauty and sweetness of love, and don't over exaggerate the sadness of falling out of love.

 5.A lot of successful people did not receive a good education, that does not mean that you can be successful by not studying hard! Whatever knowledge you gain is your weapon in life.
One can go from rags to riches, but one has to start from some rags!

 6.I do not expect you to financially support me when I am old, neither would I financially support your whole life. My responsibility as a supporter ends when you are grown up. After that, you decide whether you want to travel in a public transport or in your limousine, whether rich or poor.

7. You honour your words, but don't expect others to be so. You can be good to people, but don't expect people to be good to you. If you don't understand this, you would end up with unnecessary troubles.

 8. I have bought lotteries for umpteen years, but I could never strike any prize. That shows if you want to be rich, you have to work hard! There is no free lunch!

9. No matter how much time I have with you, let's treasure the time we have together. We do not know if we would meet again in our next life.

                 Your Dad

Read it twice
Ask your son and daughter to read it thrice.
Worth a read

Saturday, September 26, 2015

இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு ஒரு சூடான பதில்

மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்ற முக்கியமான கட்டுரை இது.


அரசை ஆட்டிவைக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளி ஒருவருக்கு மக்களுக்காக கவலைப்படும் ஒரு விஞ்ஞானி  ஒருவர் அளித்துள்ள பதில் இது. 


http://puthagampesuthu.com/wp-content/uploads/2015/02/tv-vengatesh.jpg

என்னதான் செய்தது இந்திய அறிவியல்...?

த.வி. வெங்கடேஸ்வரன்

கடந்த 2015ஜூலை 15 அன்று பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISC - Indian Institute of Sciences) பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி "உலக மக்களை வியப்புறச் செய்கிற உலகைக் குலுக்கிய எந்த அறிவியல் ஆய்வையவது செய்துள்ளீர்களா" என அங்கே குழுமியிருந்த பேராசியர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களிடையே காட்டமாகக் கேள்வி எழுப்பினார். மேலும் IISC, IIT முதலிய உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் சாதித்தது என்ன? உலகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டையும் தொடும் கடந்த அறுபது ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த ஏதாவது ஒரு ஆய்வைச் சுட்ட முடியுமா என சவால் விடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். மேலும் தொழில் மற்றும் வளர்ச்சிக்கு உதவாத உயர் கல்வி அரசு சார் நிறுவனங்களில், அரசு நிதியுதவியோடுதான் இருக்கவேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். 

விடுதலை அடைந்து அறுபத்தி ஏழு ஆண்டுகள் ஆன பின்பும் உலகின் மூன்றில் ஒரு கடைக்கோடி வறிய ஏழைகளின் இருப்பிடம் இந்தியா. உலகின் மொத்த 370 லட்சம் பார்வைக் குறை உள்ளவர்களில்  150 லட்ச மக்கள் இந்தியாவில்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் பார்வைக் குறை உள்ளவர்களில் 75% தீர்க்கக்கூடிய குறைகளோடு இருப்பவர்கள்தாம். கண் தானம் செய்ய முன்வருபவர்கள் குறைவு. மேலும் கண் மருத்துவர்கள் குறைவு என்பதுதான் கண் பார்வை சீர் செய்யாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். தேவையான  40,000 கண் அறுவை சிகிச்சை மருத்துவர்களில் வெறும் 8,000 தான் இந்தியாவில் உள்ளனர். ஆண்டுக்கு  2.5 லட்சம் கண்தானம் தேவை. ஆனால் கிடைப்பதோ வெறும்  25,000. போதிய விழிப்புணர்வு இன்மையால் அதிலும் 30% பயனற்று வீணாகிறது. உலக மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டு அடுக்கில் அதலபாதாளத்தில் 13வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 0.23 சதவிகித மக்கள் குப்பை பொறுக்கியும் 0.37 சதவிகித மக்கள் பிச்சை எடுத்தும்தான் உயிர்வாழ்கிறார்கள். 54% மக்களின் இருப்பிடம் வெறும் ஒரே ஒரு அறை கொண்ட வீடு. வெறும் 8.29 சதவிகித கிராமப்புற மக்கள்தான் மாதத்திற்கு  10,000 ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டுகின்றனர். வளர்ச்சியின்மையின் காரணமாக ஐந்து அகவை கடக்கும் முன்னரே 134 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் மடிந்து விடுகின்றன. இதில்  7,48,000 குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன. அதாவது, வளர்ச்சியின்மை, போதிய சுகாதார மருத்துவ வசதியின்மை காரணமாக, நாள்தோறும்  2,000 கைக் குழந்தைகள் சாவு           

இந்தியாவில்  உள்ளபடியே இந்திய மக்களின் பல்வேறு வாழ்வு பிரச்சனைகள், சுகாதார தேவைகள், வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி என பல அம்சங்களில் இந்திய அறிவியல் செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம்தான். ஆயினும் இந்த அவலங்களுக்கு அறிவியல் தொழில்நுட்பமும் அவை அரசுசார் நிறுவனங்களில் இருப்பதும் தான் காரணமா? நாராயணமூர்த்தி கூறுவதுபோல இந்திய அறிவியல் நிறுவனங்கள் கடந்த அறுபது ஆண்டுகளில் சாதித்தது ஒன்றுமேயில்லையா? 

கிராவிட்டி என்ற திரைப்படம் எடுக்க ஹாலிவுட் செலவழித்த தொகையை விட குறைந்த செலவில், நாசாவின் செலவில் பத்தில் ஒரு பகுதியில் செவ்வாய் அடைந்த இஸ்ரோ தொழில்நுட்பம் சளைத்ததா என்ன? அதன் தொடர்ச்சியாகத்தானே நாஸா உட்பட, பல நாடுகள்,  இஸ்ரோவின் ராக்கெட்டில் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த முன்வந்துள்ளன? இஸ்ரோவின் வளர்ச்சி, தொழில்நுட்ப சாதனை என்பது எங்கும் இங்கும் தயார் செய்த தொழில்நுட்பத்தை இரவல் வாங்கிப் பொருத்தி இணைத்துச் செய்யும் தொழில்நுட்பம் அல்ல. சுயசார்புடன் தானே தயாரித்த தொழில்நுட்பங்கள்.   விடுதலை அடைந்தபோது இந்தியா "ship to lip" (கப்பலிலிருந்து ஒருவாய் கவளம்) என்ற நிலையில் இருந்தது. பெருமளவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. PL 480 என்ற அமெரிக்க உதவித் திட்டத்தின் அடிப்படையில் பல லட்சம் தானியங்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்பட்டன. ஸ்டாண்ட்போர்ட் பேராசிரியர் பால் எஹ்ல்ரிச் என்பார் அந்த நிலையில் "இந்தியா முழுகும் கப்பல்; யாராலும் எதுவும் செய்யமுடியாது. அது தானே மடிந்துவிடுவதை அப்படியே விட்டுவிடுவதுதான் நலம்" என ஆருடம் கூறியதையும் அரிசி பற்றாக்குறை போன்ற சிக்கல்களையும் மறக்க முடியுமா? இன்போசிஸ் உருவான 1981இல் இந்தியா 68.3 கோடி மக்கள்தொகையும், 12.9 கோடி டன் தானிய உற்பத்தியும் கொண்டிருந்தது, தானிய இறக்குமதி கொண்டுதான் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.  2014இல் இந்தியா 26.3 கோடி டன் உற்பத்தி செய்து  1210 கோடி மக்கள் தொகைக்கு உணவு அளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

அன்றிலிருந்து இன்று பலமடங்கு பெருகியுள்ள இந்திய மக்கள் தொகையான  121 கோடி மக்கள் தொகைக்கும் உணவு அளிக்குமளவுக்கான இந்த உற்பத்திப் பெருக்கத்திற்கு தனியார் துறையின் பங்களிப்புதான் என்ன?  சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விமர்சனங்கள் இருப்பினும் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுத்த விவசாய ஆராய்ச்சி செய்தது யார்? இந்திய விவசாய ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாமல் வெறும் 35 வருடத்தில் இரண்டு மடங்கு உணவு பெருக்கம் ஏற்பட்டிருக்க முடியுமா? 

சர்வதேச சுகாதார நிறுவனத்தால் உலகம் முழுவதும் தடுப்பூசி பெரும் மூன்றில் ஒரு குழந்தையின் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. தொழில்நுட்ப இறக்குமதி ஒன்றே கொள்கை என செயல்படும் இந்திய தனியார் தொழில் அமைப்பில் வித்தியாசமான நிலையில் உள்ளது இந்திய மருந்து உற்பத்தித் துறை. எல்லைகள் இல்லா மருத்துவர்கள் (Medicines sans Frontiers -MSF) எனும் சர்வதேச அமைப்பு இந்தியாவை உலகின் மருந்துக் கிடங்கு என வர்ணிக்கிறது. ஹைதரபாதில் உள்ள இந்திய மருந்தக ஆய்வு அறிவியல் நிறுவனம் கொடுத்த கொடைதான் இந்த நிலைக்கு காரணம். ஆண்டுக்கு 10,000 டாலர் செலவு பிடித்த எய்ட்ஸ் சிகிச்சையை இந்திய மருந்துகள் கொண்டு மூன்றில் ஒரு பங்கில் செய்ய முடிந்துள்ளது. ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து உட்பட மூன்றாம் உலக நாடுகளின் "குறைந்த விலையில் தரமான மருந்து" தயாரிப்பில் இந்தியாதான் முன்னணி வகிக்கிறது. 

ஆயினும் இந்திய அறிவியலின் நிலை திருப்திகரம் என கூறிவிட முடியாதுதான். இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எண்ணிக்கை வெறும்  200,000; அதாவது 10,000 மக்கள் தொகைக்கு வெறும் நான்கு ஆய்வாளர்கள் என்ற விகிதத்தில்தான் உள்ளனர். அமெரிக்காவில் இது  79; அறுபது ஆண்டுகள் முன்பு நம்மைவிட பின்தங்கிய நிலையில் இருந்த சீனாவில் 18.  அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு இந்தியா செலவிடும் தொகை  ஜிடிபியில் வெறும்  0.9சதவிகிதம். சீனா நம்மைவிட அதிக  ஜிடிபி கொண்டிருந்தும் இரண்டு சதவிகிதம் செலவு செய்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பல உயர்கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் இயக்குனர்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அறிவியல் ஆய்வு நிறுவங்களில் சுதந்திரமின்மை, அதிகாரத்துவப் போக்கு முதலியவையும் பல்கலைக்கழகங்கள் பாராமுகமாக நடத்தப்படுவதும்உயர்கல்வி நிறுவனங்களில் தரமற்ற ஆசிரியர்கள் ஆய்வாளர்கள் நியமிக்கபடுவதும் இந்த நிறுவனங்கள் சந்திக்கும் சில சவால்கள். 

ஏன் இன்னமும் அமரிக்கா உலக அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் மேலாண்மை நிலையில் உள்ளது என்பது குறித்து Select USA 2015 எனும் கருத்தரங்கில் கூகிள் செயல் தலைவர் எரிக் ஷெமிட்  கருத்துக் கூறியபோது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அறிவியல் தொழில் கொள்கையை உருவாகிய வன்னேவர் புஷ் என்பவரை சிறப்பாக நினைவு கூர்ந்தார்.  1945இல் "அறிவியல் முடிவில்லா எல்லை" என்று முழங்கிய புஷ் அடிப்படை அறிவியல் என்பதும் பயன்பட்டு அறிவியல் என்பதும் வெவ்வேறு எனத் தெளிவுபடுத்தியதோடு நிற்காமல் தனியார் துறை அடிப்படை ஆய்வுக்கு துணைபோகாது என உணர்ந்து அரசுதான் ஆதரவு தரவேண்டும் என முடிவுக்கு எட்டி தேசிய அறிவியல் அறக்கட்டளை National Science Foundation) என்ற அமைப்பை உருவாக்கி அமெரிக்க ஆய்வு வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டார். புதிய தொழில்களும் உற்பத்திப் பொருள்களும் மாய மந்திரத்தால் ஏற்படாது. அதற்கு நீண்ட அறிவியல் பயணம் தேவை என உணர்ந்து அறிவியல் தேடலுக்கு நிதியுதவி அளித்தது அரசு நிதியில் இயங்கிய இந்த அறக்கட்டளை.  நேரடி தொழில் மற்றும் லாப நோக்குடன் தொடர்பு அற்ற ஆய்வு நிதி கொண்டுதான் அமெரிக்க அறிவியல் வளர்ந்துள்ளது என விவரித்தார் எரிக் ஷெமிட். 

அரசு கைவைக்காமல் தனியார் மயமாக இருந்ததால் தான் சமீப காலத்தில் பெரிதும் போற்றி புகழ்ந்து பேசப்படும் இன்போஸிஸ் போன்ற தகவல் தொழில்நுட்பத் துறை செழித்தது உலக வரைபடத்தில் இந்தியாவைஏற்றியுள்ளது என சிலர் வாதம் செய்கின்றனர். இவர்களுக்கு வரலாறு தெரியவில்லையா அலல்து வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றனரா என்பது தான் புரியவில்லை.   1960-1970களில் மத்திய அரசின் மின்னணு துறை Department of Electronics) முன்யோசனையுடன் செயல்பட்டு TIFR போன்ற நிறுவனங்களில் கணினி ஆய்வுகளை துவங்கி வேண்டிய மனித வளத்தை தயார் செய்தது. மனிதவளம் தயாரிப்பு தனியார் துறையில் நடக்க இயலவில்லை. ஐ ஐ டி போன்ற நிறுவனங்கள் தாம் கணினி விற்பனர்களை தயார் செய்தது. அதன் விளைவாகவே இந்தியா ஐ டி மென்பொருள் துறையில் மேலாதிக்க இடத்தில உள்ளது என்பதை மறுக்க முடியுமா? மேலும் மென்பொருள் ஏற்றுமதி செய்ய இந்தியாவால் முடியும் என முன் அனுமானம் செய்து  1972இல் ஏற்றுமதிக் கொள்கையில்  ஐ டி நிறுவனங்கள் குறைந்த விலையில் கணினி இறக்குமதி செய்ய வழிவகுத்து 1980-1990 ஐ டி பூங்காக்களை ஏற்படுத்தி தொழில் முனைவோருக்கு வசதி செய்து கொடுத்து வரி சலுகைகள் இலவச இன்டர்நெட் வசதி போன்ற சேவைகளைத் தந்து ஊக்கம் கொடுத்து வளர்ந்தது தான் இந்திய ஐ டி துறை. 1990கள் வரை ஐ டி தொழில்துறை பெற்ற அரசு உதவிகளை மறந்த அம்னீசிய பேச்சுதான் "ஐ டி துறையில் தனியார் துறை சாதனை" எனும் புருடா. சிறப்பான நுட்ப மனிதவளத்தையும் அறிவையும் தரவல்ல IISC போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதால்தானே பெங்களூரு இந்தியாவின் ஐ டி தலைநகராக, உலக வரைபடத்தில் இடம் பிடித்து? 

நிலவில் நீர்ப்பசை இருப்பதைக் கண்டுபிடித்து நிலவு பற்றிய இதுவரையிலான அறிவியல் கருத்துகளையே புரட்டிப்போட்டது இந்திய சந்திரயான் திட்டம். இதனால் என்ன "பயன்" என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வரலாற்று ஆய்வுகள், மொழியியல் ஆய்வுகள் போன்ற பல நுணுக்க ஆய்வுகளையும் "பயன் என்ன" என்ற கேள்வியில் பின்னுக்குத் தள்ள முயல்கிறது புதிய-தாராளவாத அரசியல்-பொருளாதார பார்வை. இதே அளவுகோலைக் கைகொண்டால் கலிலியோ பூமிதான் சூரியனை சுற்றுகிறது என ஆய்வு செய்ததற்கோ, புராண ராகு-கேது பாம்பு சூரியனை விழுங்கும் கட்டுக்கதைகளை மறுத்து ஆரியபட்டர் நிலவு மறைவதால்தான் கிரகணம் ஏற்படுகிறது எனஆய்வு செய்ததற்கோ என்ன "பயன்" என்று கேட்டுவிடலாம்தான். "பயன்" என்பதை தொழில் பண்டம் உற்பத்தி மற்றும் உடனடி லாபம் என்று மட்டும் விளங்கிக் கொள்ளும் குறுகிய புதிய-தாராளவாத புரிதலைத் தான் இந்த பார்வை வெளிப்படுத்துகிறது. லாபநோக்கு மட்டும் படைப்பாக்கத்தையும் அறிவியல் அறிவையும் வளர்துவிடாது. 

இந்திய அறிவியல் சந்திக்க வேண்டிய சவால்கள், சமாளிக்க வேண்டிய சிக்கல்கள் பல உள்ளன. எனினும் தனியார்மயம் ஒருபோதும் அதற்குத் தீர்வு ஆகாது. இவற்றில் பலவற்றுக்கு அறிவியல் தொழில்நுட்ப உள்ளீடு அவசியம். இந்திய அறிவியல் செல்லவேண்டிய பயணம் நெடியது. பார்வைகள் விரிவடைந்து எளிய மக்களின் தேவைகள் சார்ந்து ஆய்வுகள் அவசியம். சுற்றுசூழல் சிக்கல்களை சமாளிக்கும் விதமான புதிய தொழில் நுட்பங்கள் அவசியம். ஏற்கனவே நடந்த மின்னணுப் புரட்சியின் போது நாம்  அப்போதுதான் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்திருந்தோம். கணினிப் புரட்சியில் நம்மால் ஓரளவு பங்கு கொள்ள முடிந்தது. தற்போது முன்னணியில் இருக்கும் நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார் எளிய தொழில்நுட்பம் போன்ற புதிய வளர்ச்சிகளில் நாம் முன்னணியில் இருக்க முயலவேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் காணவேண்டும். போதிய நிதி ஓதுக்கீடு, ஆய்வுகளுக்கு சுதந்திரம், தொழில்நுட்ப ஆய்வு மட்டுமல்ல வரலாறு போன்ற சமூக ஆய்வுகளுக்கும் போதிய ஆதரவு என முன்நோக்கு பார்வையுடன் கூடிய சரியான அறிவியல் தொழில்நுட்பக் கொள்கையே இன்றைய தேவை. 
 
(கட்டுரையாளர் மத்திய அரசின் விக்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் விஞ்ஞானி)

Friday, September 18, 2015

மறை நீர்

மறை நீர் (Virtual water)

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

Tuesday, August 11, 2015

மனித உடம்பின் ரகசியங்கள்

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

👃👀👂👅👄💪😊

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...

2. நாம் 6
விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்
தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்...

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை...

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்...

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8
மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்
உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்
தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது...

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்
உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
ஆயுட்காலம் 120 நாட்கள்...

8. நம்உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன...

9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்
பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது...

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்...

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு...

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்...

15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது...

16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது...

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
ு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது...

20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்...

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9
லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது...

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது...

24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது...

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது...

29. மூளையின்
மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது...

32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்...

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்...

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந
்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...

36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன...

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது...

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது...

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...

41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்...

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது...

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே...

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது...

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...

46. உடலில் ரத்தம் பாயாத
பகுதி கருவிழி மட்டுமே...

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...

49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்...

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது..

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்...

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்...

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்...

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்
உள்ளன...

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்
வளர்கிறது..

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040
தடவை சுவாசிக்கின்றோம்..

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்
வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்
இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்
வளரும்...

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன...

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக
குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..

65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது...

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்...

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது...

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்
ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்...

74. தானாக
மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50
லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்...

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்
ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்
உள்ளன..

80. மனிதனுக்கு 4 வகையான பற்கள்
உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்
9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்
உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்
தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்
உருவானது..

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்
தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½
லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்
375 முறை ஏற் படுகிறது..

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20
சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20
ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல
ஆணி ஒன்று செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால
் உபரியாக காற்றை உள்வாங்க
கொட்டாவி விடுகிறோம்...

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி...

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்
வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
😊👍

Saturday, July 25, 2015

What are Antioxidants ?

What are Antioxidants?
By Dr Ananya Mandal, MD

All living organisms utilize oxygen to metabolize and use the dietary nutrients in order to produce energy for survival. Oxygen thus is a vital component for living. Oxygen meditates chemical reactions that metabolize fats, proteins, and carbohydrates to produce energy.

Dark side of oxygen
While oxygen is one of the most essential components for living, it is also a double edged sword. Oxygen is a highly reactive atom that is capable of becoming part of potentially damaging molecules commonly called “free radicals.”

Free radicals
These free radicals are capable of attacking the healthy cells of the body. This may lead to damage, disease and severe disorders. Cell damage caused by free radicals appears to be a major contributor to aging and diseases like:

cancer
heart disease
decline in brain function
decline in immune system etc.
Overall, free radicals have been implicated in the pathogenesis of at least 50 diseases.

Since free radicals contain an unpaired electron they are unstable and reach out and capture electrons from other substances in order to neutralize themselves. This initially stabilizes the free radical but generates another in the process. Soon a chain reaction begins and thousands of free radical reactions can occur within a few seconds on the primary reaction.

Friday, May 15, 2015

Jahn - Teller metals

Scientists have discovered a new state of matter, called 'Jahn-Teller metals'And it could be the key to understanding one of the biggest mysteries in physics today - high-temperature superconductors.BEC CREW12 MAY 20153.6k17An international team of scientists has announced the discovery of a new state of matter in a material that appears to be an insulator, superconductor, metal and magnet all rolled into one, saying that it could lead to the development of more effective high-temperature superconductors.Why is this so exciting? Well, if these properties are confirmed, this new state of matter will allow scientists to better understand why some materials have the potential to achieve superconductivity at a relativity high critical temperature (Tc) - "high" as in −135 °C as opposed to −243.2 °C. Because superconductivity allows a material to conduct electricity without resistance, which means no heat, sound, or any other form of energy release, achieving this would revolutionise how we use and produce energy, but it’s only feasible if we can achieve it at so-called high temperatures.As Michael Byrne explains at Motherboard, when we talk about states of matter, it’s not just solids, liquids, gases, and maybe plasmas that we have to think about. We also have to consider the more obscure states that don’t occur in nature, but are rather created in the lab - Bose–Einstein condensate, degenerate matter, supersolids and superfluids, and quark-gluon plasma, for example. By introducing rubidium into carbon-60 molecules - more commonly known as 'buckyballs' - a team led by chemist Kosmas Prassides from Tokohu University in Japan was able to change the distance between them, which forced them into a new, crystalline structure. When put through an array of tests, this structure displayed a combination of insulating, superconducting, metallic, and magnetic phases, including a brand new one, which the researchers have named 'Jahn-Teller metals'. Named after the Jahn-Teller effect, which is used in chemistry to describe how at low pressures, the geometric arrangement of molecules and ions in an electronic state can become distorted, this new state of matter allows scientists to transform an insulator - which can’t conduct electricity - into a conductor by simply applying pressure. Byrne explains at Motherboard: "This is what the rubidium atoms do: apply pressure. Usually when we think about adding pressure, we think in terms of squeezing something, forcing its molecules closer together by brute force. But it's possible to do the same thing chemically, tweaking the distances between molecules by adding or subtracting some sort of barrier between them - sneaking in some extra atoms, perhaps.What happens in a Jahn-Teller metal is that as pressure is applied, and as what was previously an insulator - thanks to the electrically-distorting Jahn-Teller effect - becomes a metal, the effect persists for a while. The molecules hang on to their old shapes. So, there is an overlap of sorts, where the material still looks an awful lot like an insulator, but the electrons also manage to hop around as freely as if the material were a conductor."And it’s this transition phase between insulator and conductor that, until now, scientists have never seen before, and hints at the possibility of transforming insulating materials into super-valuable superconducting materials. And this buckyball crystalline structure appears to be able to do it at a relatively high TC. "The relationship between the parent insulator, the normal metallic state above Tc, and the superconducting pairing mechanism is a key question in understanding all unconventional superconductors," the team writes in Science Advances.There’s a whole lot of lab-work to be done before this discovery will mean anything for practical energy production in the real world, but that’s science for you. And it’s got people excited already, as chemist Elisabeth Nicol from the University of Guelph in Canada told Hamish Johnston at PhysicsWorld: "Understanding the mechanisms at play and how they can be manipulated to change the Tc surely will inspire the development of new [superconducting] materials".

Friday, April 10, 2015

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு லிட்டர் பால்..!



உலகளவில் தற்போது அனைத்து நாடுகளிலும் சத்தின்மையும் அதனால் குழந்தைகள் நோஞ்சான்களாகவும் அதன் விளைவாக பிஞ்சிலேயே நோயாளிகளாக உருவாவதும் பெரும் கவலையளிக்கக்கூடிய விசயமாக மாறி வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பிரச்சனை எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளிலும் ஜரோப்பிய நாடுகளிலும் கூட இந்த நிலைமை நீடிக்கிறது.
இன்றைக்கு உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை கள் அமல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. சத்தின்மை என்பதை வெறும் போதாக்குறை உணவுப்பிரச்சனையாக மட்டும் கருதிட முடியாது. அது எதிர்காலத் தலைமுறையை கடுமையாக பாதிக்கக்கூடிய மிகவும் சிக்கலான பிரச்சனையாகும். குழந்தைபிறந்ததிலிருந்து 5 வயது வரை மூளைமற்றும் உடலின் முக்கிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு சத்துணவு அடிப்படையானதும் அவசியமானதுமாகும் என்று மருத்துவ ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.இப்பருவத்தில் போதிய சத்துணவுகிடைக்காவிட்டால் மூளை வளர்ச்சி யானது பாதிக்கப்படும். நாட்டின் எதிர்கால தலைமுறையே அறிவிலிகளாக மாறும் அபாயத்தை கற்பனை செய்து பார்க்கவே அச்சம் தரும்.
இதை உலக நாடுகள் உணராமல் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த முதலாளித்துவ சமூக அமைப்பு இந்த துயரத்திலேயே ஆதாயம் தேடுகிறது.ஆனால் இந்த நிலையில் இன்னொரு துருவமாக உலக நாடுகளிடையே முற்றிலும் மாறுபட்டுத் திகழ்கிறது சோசலிச கியூபா. அங்கு மக்களின் ஆரோக்கியத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. கியூபா முழுவதும் எப்படித் தேடினாலும் அங்கு சத்தின்மையால் அவதியுறும் குழந்தையையோ அல்லது நோஞ்சான்களையோ காண முடியாது என்று ஐநாவின் குழந்தைகளின் நிதி அமைப்பு அறிக்கை கூறுகிறது. அவ்வளவுஏன், அங்கு பிரசவத்தின் போது அன்னையர் இறப்பு விகிதமும் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இப்படி ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த நாடாக கியூபா திகழ்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் எடைகுறைவுக் குழந்தைகள் 28 விழுக்காடும், மத்திய கிழக்கு நாடுகளிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் 17 விழுக்காடும், கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் 15 விழுக்காடும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கரீபியன் நாடுகளிலும் 7 விழுக்காடுமாக உள்ளனர். ஆனால், கியூபாவில் எடை குறைவு என்ற பிரச்சனைக்கே இடமில்லை . இதற்கு காரணம், பல ஆண்டுகளாக அங்கு கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகளே. உலகம் முழுவதும் 85 கோடியே 20 லட்சம் மக்கள் பசியால் வாடுகின்றனர். இதில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டும் 5கோடியே 30 லட்சம் மக்கள் பசியால் வாடுகின்றனர். மெக்சிகோவில் 52 லட்சம் மக்களும் ஹைதியில் 8 லட்சம் பேரும் சத்தின்மையால் அவதியுறுகின்றனர். வேடிக்கை என்னவெ னில், அதே லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கியூபாவில் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலைமை. சரி, சத்தின்மையை அறவே நீக்க கியூப அரசு என்ன செய்தது?எத்தனையோ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூப அரசு, ஆண்டுக்கு 1 கோடியே 30 லட்சம்டாலர்களை தங்கள் நாட்டுக் குழந்தை களின் சத்துணவுக்காக ஒதுக்கு கிறது.
இந்த விசயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமின்றி, குழந்தை பிறந்ததிலிருந்தே முழுமையான கண்காணிப்பு தொடங்குகிறது. அந்த கண்காணிப்பு அவர்கள் வளர் இளம் பருவத்தை அடையும் வரை நீடிக்கிறது. பிறந்ததிலிருந்து தாய்ப்பாலுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்காக தாயின் உடல் நலத்தைப்பேணிட அவருக்கும் சத்தானஉணவு அளிக்கப்படுகிறது. 6 மாதம் வரை பிற முக்கிய சத்துணவுகளுடன் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் எந்தப் பாகுபாடுமின்றி நாள்தோறும் 6 மாதத்திலிருந்து 7 வயது வரை 1 லிட்டர் பால் அளிக்கப்படுகிறது. அத்துடன் முறையான சத்துணவும் அளிக்கப்படுகிறது. 13 வயது வரை பழச்சாறுகள் மற்றும் இறைச்சிகள் அளிக்கப் படுகினறன. இத்துடன் மலிவான விலையில் சோயாவும் வெண்ணெய் கட்டிகளும் அளிக்கப்படு கின்றன.இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அவசியமான உணவுகள் இலவசமாக அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர். அன்றாடம் ஒரு லிட்டர் பாலுடன் தனியே புரதச் சத்துணவுகள் தருவதும் உறுதிப் படுத்தப்படுகிறது.பள்ளிகளில் 15 வயது வரையும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் உணவில்சிறப்பு ஒதுக்கீடுகள் உண்டு. இந்தசிறப்பு ஒதுக்கீடுகளில் கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்,முதியவர்கள், சிறப்புத் தேவையுடை யோர் மற்றும் நோயுள்ள குழந்தை களுக்கு தனிக் கவனத்துடன் உணவு வழங்கப்படுகிறது. இப்படி அரசின்கண்காணிப்புடன் சத்துணவுத் தேவைகள் நிறைவேற்றப்படுவதால்தான்,
கியூபாவில் சத்தின்மையும் இல்லை; நோஞ்சான் குழந்தைகளும் இல்லை. உலக நாடுகளில் மிகப்பெரிய செல்வந்த நாடு; ஜனநாயக நாடு என்றெல்லாம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் அமெரிக்காவில் நெஸ்லே போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் தாய்ப்பாலை மறைமுகமாக புறக்கணிக்கக்கோரி பால் பவுடர்களுக்கு விளம்பரம் செய்ய பல ஆயிரம் கோடி டாலர்களை செலவழிக்கின்றன. தாய்ப்பாலை புறக்கணிக் கக்கோரும் அந்த கம்பெனிகள் 8 ஆயிரம்கோடி டாலர் அளவிற்கு முகப்பூச்சுஅழகு சாதனங்களின் விளம்பரங் களுக்கு செலவழிக்கின்றன. நோயுறும் குழந்தைகளுக்கு மருந்துகள் மட்டும் 40 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை செய்யப்படுகினறன. இதுதான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உண்மை முகம். ஆதாரங்கள் :1. ஐ.நாவின் குழந்தைகள் நிதி அமைப்பு (யுனிசெப்) அறிக்கை 2. கியூபாவின் மருத்துவப் புரட்சி

Wednesday, April 8, 2015

Cuba restructures its socialism: steadily but without stopping or pausing

Cuba restructures its socialism: steadily but without stopping or pausing » peoplesworld

havana520x320





















HAVANA, Cuba - Approximately 30 miles west of this city, one of the largest construction projects since the start of the Cuban revolution in 1959 is taking shape - a state of the art container port in Mariel Bay. Once complete it will be the largest deep-water port in the Caribbean.
The publicly owned Mariel Port, straddling a major maritime transport artery, and an associated special economic zone is envisioned as a vital economic engine. It aims to attract foreign investment capital and trade, capable of receiving 1 million containers a year including from larger ships crossing through the expanded Panama Canal.
The project is part of the far reaching restructuring and updating of Cuba's socialist model well underway, literally a revolution in the revolution, that seeks to correct mistakes festering for decades which have contributed to a slowdown in economic growth, growing foreign debt, inefficiencies and black market 
Objectives of restructuring
In the late 1990s as Cuba began emerging from the "special period" brought on by the collapse of socialism in the Soviet Union and Eastern Europe, slowing economic development (1.8 percent average yearly growth) made it painfully obvious changes needed to be made.
Cuban socialism had adopted the highly centralized socialist model of the Soviet Union. "We even copied that model badly," said Raul Castro. "As Fidel said, among all the errors we may have committed, the greatest of them all was that we believed that someone really knew something about socialism, or that someone actually knew how to build socialism."
Small changes were already beginning by 2007 including legalizing pay supplements from foreign companies, dropping some consumer prohibitions, creating a sliding salary scale for state workers and increasing prices for agricultural products. These heralded much bigger changes to come.
In 2010 in the wake of the U.S. economic blockade, the global economic crisis, skyrocketing costs of imports, crop damage inflicted from hurricanes and a declining birth rate, the Communist Party of Cuba (CPC) initiated a discussion that ultimately involved nearly eight million of the island's 11 million population.
Discussions took place in workplaces organized by the Cuban Workers Central (CTC) Cuba's main labor federation, in universities, academic centers and neighborhoods. What emerged were 313 Economic and Social Guidelines later adopted by the National Assembly. This became the blueprint guiding what is happening today.
"This is a historic moment and we have to adjust to it," said Jorge Arias, CPC International Relations Department. "We are changing everything that must be changed. We are embarking on a deep change in economy and society."
To date 140 measures have been implemented laying the foundation for bigger changes. Most are geared to eliminating prohibitions and making it easier to buy and sell homes and automobiles, travel abroad and allowing Cuban athletes to sign professional contracts abroad.
"This is what people were demanding so we responded," noted Ricardo Ramirez, a CPC economist.
The guidelines fit the realities of Cuba today, at this level of economic and social development and rest on several basic principles: the continuity and irreversibility of socialism as the system of choice (the goal is to "build a prosperous and sustainable socialism"), economic planning and a dominant public sector, continued economic development that modernizes industry and infrastructure and an increase in the living standards.
The Cuban people are not giving up any gains of the revolution. The public sector will still dominate the economy and free education and healthcare will be maintained. "We proceed with the changes without leaving anyone unprotected," said Ramirez. "This is a basic value of the Revolution."
Correcting mistakes
 Among the mistakes being addressed is a leveling of wages that flowed from what can be described as utopian egalitarianism. This gave rise to a lack of incentive and discipline resulting in low productivity and efficiency.
"Many of us Cubans confuse socialism with freebies and subsidies and equality with egalitarianism," Raul Castro has said. "We have to erase the notion forever that Cuba is the only nation in the world where one can live without working."
The new guidelines are restoring the principal "to each according to their work," with differing pay rates pegged to quality and quantity of work. Recently salaries for 440,000 healthcare workers were increased.
Another mistake resulted in a "paternalistic" role for government, which led to subsidizing things and not people, including things that some people didn't need. For example, beginning early on everyone received a food ration card whether they needed it or not. Those who didn't need it often sold it contributing to the growth of a black market.
Previously the state budget for education and health care were funded with taxes on state enterprises. A new tax law was adopted after a national discussion in 2012 bringing huge changes. For the first time every Cuban will be responsible for these and other costs including retirement benefits through a progressive tax on salaries. State enterprises, cooperatives and businesses will also pay taxes.
The state was seen as the employer for life and payrolls became bloated. Operations are now being streamlined through shedding some 1.5 million jobs from state enterprises. All displaced workers get assistance finding new jobs or are offered retraining.
A major part of streamlining is decentralizing management and decision-making. No longer will the state through its ministries directly operate, manage and control all aspects of production. It "will allow the State to focus on raising the efficiency of the basic means of production, which are the property of the entire people, while relieving itself from those management of activities that are not strategic for the country," said Castro in remarks to the 6th CPC Congress in April 2011.
Publicly owned enterprises are increasing their independence and authority. It means work units, and trained economists, accountants, industrial managers and business executives are being vested with much greater decision making authority. Before enterprises waited for decisions made elsewhere, too often budgets were made and overrun and goals set and not fulfilled. All that is changing.
Deepening participatory democracy and decentralization
The decentralization of decision-making builds upon Cuba's model of "participatory democracy." This model includes the countrywide discussions on major questions like the economic guidelines and new laws. It gives greater power to grassroots entities like the monthly general assemblies at work locations. The CTC believes that 85 percent of union members are involved in discussions through these meetings.
The restructuring changes will decentralize authority from the federal level to the provincial and municipal level and separate government policy and decision making from public administration functions.
"We are streamlining administrative structures. We hope to make sure the economy has more independence. In streamlining structures the numbers of workers will naturally be reduced," said Ramirez.
Many of the new policies are preceded by experiments. Two newly formed provinces once a part of Havana province: Artemisa and Mayabeque are places where new ideas are incubated. Once the kinks are worked out changes will be spread to the rest of the country.
The reforms will also ensure separation between public administration and the CPC, which over the years overstepped its responsibilities and encroached on management. The CPC will focus on initiating changes and innovations, ideological and education work and mobilizing the people behind the guidelines and restructuring.
Expanded property forms
While public ownership of the main means of production is predominant, the guidelines specify several other forms of property including foreign ownership, cooperatives, small private farms and self-employed workers.
Since 2010, nearly 500,000 more workers are employed in the private sector, 62 percent of which belong to unions. Most are working in food, transit and retail. After a nationwide discussion and many modifications, a new labor code was adopted in 2013 that protects the rights of all the nation's 5.2 million workers including in the private sector.
It is expected private sector production will grow to 40-45 percent of GDP from five percent currently, adding 1.8 million workers. A domestic market is being created independent of the state sector. For example, agricultural cooperatives used to buy everything from publicly owned enterprises. Now they go for the best deal on the market, although they often get more favorable terms from public enterprises.
Cooperative forms of production had been widespread in the agricultural sector where farmers pool their land, livestock, equipment and resources and split up the profits. The new model promotes cooperatives in the service sector. Nearly 500 non-agricultural cooperatives have now been licensed employing 10,000 people. There are now 1500 pilot projects approved, with 3000 expected by the end of 2015.
No turning back
Change is not easy, but everyone agrees there is no turning back. The economy didn't reach the 2.2 percent projected growth for 2014. Cuban economists say it was due to a number of factors including the global economic crisis, low level of foreign investment and production inefficiency.
"The results so far are growth, but not at the pace we have planned. There has been some slowdown in the economic growth but it picked up at the end of the 2014. We think that we think will be reversed this year. We project four percent growth for 2015," said the CPC economist.
Foreign investment
The Mariel Port and economic zone is part of a bigger project to radically improve the nation's infrastructure by upgrading port facilities, rail and roadways, transport, refrigeration. By offering tax and legal incentives Cuba hopes to attract badly needed foreign capital. At the recent CubaExpo the government presented 240 projects, which total $8 billion in investments.
A new foreign investment law adopted in 2014 cuts taxes on profits in half to 15 percent, allows full foreign ownership of operations and allows investment in all sectors of the economy except education, healthcare and military. Special tax rates apply to joint foreign and Cuban state ownership and business through international economic associations. All hiring and payment of wages are handled through a Cuban employment agency. Labor conditions are governed by the national labor code.
Some may see this as a step backward, but according to the Cubans it's necessary to gain the needed capital for development and create jobs.
A lot of foreign investment is expected in the tourism industry. With the normalization of relations with the U.S., Cuba expects three million tourists from North America. Presently one million Canadians visit, 400,000 Cuban Americans, and 90,000 Americans. The port of Havana is being modernized to accept cruise liners.
The aim is also to make Cuban products and services more competitive in the international market and to diversify them. Exports are expected from the pharmaceutical industry and medical personnel, thousands of whom are working abroad including in Brazil and Venezuela.
"We don't have a lot of resources, only human labor power," said Ramirez.
Agricultural reforms
 One big priority is to expand farming by leasing idle land for free on the condition it must be farmed and maintained. "We are an agricultural country," said Ramirez. "There was a lot of land that was idle so we decided to hand it over to be farmed for free leasing terms to produce food."
In the last four years, over 1.1 million hectares of farmland have been drawn into production employing some 180,000 farmers. If successful, the increased agricultural production will allow substitution of many high priced imports with domestically produced equivalents. This was costing the country dearly and adding to a balance of trade deficit.
Recently a delegation of U.S. agricultural representatives visited. "It's a matter of time," former Agriculture Secretary John Block, who is an Illinois hog farmer and Washington lawyer, said as he toured a cooperative farm outside Havana. "It'll be lifted and we'll have normal relations. We should have done it a long time ago."
Cuban socialism has entered uncharted waters. The vast changes occurring raise many new and difficult challenges. Among them how to deal with new social inequalities, winning the young generation so far removed from the 1959 Revolution and ideological challenges from market forces.
But as the Cubans say, "we are making changes steadily, without stopping or pausing. We won't do anything that disrupts the unity of the country. We are implementing big decisions, little by little, but doing it together."
Photo: People on the streets of Havana, Cuba.

Monday, March 30, 2015

பகத் சிங்கும் குலசேகர ஆழ்வாரும் சந்தித்து விலகும் புள்ளி....






எஸ் வி வேணுகோபாலன் 


மாபெரும் புரட்சிக்காரன் என்ற அடையாளத்தை, பகத் சிங் தனது அரசியல் உணர்வில், போராட்ட குணத்தில், விடுதலைக்கான வேட்கையில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. 24 வயதுகூட நிரம்பாத பருவத்தில் அவரை வெள்ளை ஏகாதிபத்தியம்  தூக்கிலிட்டமைக்கு கூடுதல் காரணிகள் இருக்கக் கூடும். நண்பர் ஒருவரது புத்தகத்தின் மீது தோழமை கெழுமிய காத்திரமான நூல் விமர்சனமும், மகாத்மா காந்தியே ஆனாலும் கேள்விகளுக்கு உட்பட்டவர்தான் அனைவரும் என்று சொல்லும் நெஞ்சுரமும், பெற்றெடுத்த தந்தை பாசத்தோடு தன்னைச் சிறையில் இருந்து மீட்கத் துடித்தபோது, தன் அர்ப்பணிப்பு உணர்வைக் கொச்சை செய்யவேண்டாம் என்று அவரிடத்துச் சொல்லும் தீர்க்கமான மன வலிமையும் கொண்டிருந்தவர் பகத் சிங். அடிப்படையில் அவர் இறை நம்பிக்கை அற்றவராக இருந்தது காலனி ஆதிக்கத்தைக் கட்டியாண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ராஜ துரோக செயலாகவே பட்டிருக்கும் என்பது கவனிக்க வேண்டியது. 

அடிமைத் தனத்தைக் கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்ள வைக்கும் மத உணர்வை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரும் மக்களைப் பெரிய கலகத்திற்குத் தூண்டுகின்றனர் என்பது மாட்சிமை தாங்கிய மகாராணிகளுக்குத் தெரியும். தான் நாத்திகன் ஆனதை ஆவணப் படுத்திச் சென்றிருக்கிறார் பகத் சிங் என்பது சிந்திக்க வேண்டிய முக்கிய வரலாற்றுக் குறிப்பு.

பொதுவாக இறையுணர்வு இல்லாதிருப்போரை மண்டைக்கனம் படைத்தவராகவே சமூகம் பேசும். திமிர், அகங்காரம் என்ற சொல்லாடல்களை பகத்சிங் அற்புதமாக மறுத்து  முன்வைக்கும் வாதங்கள் அடங்கிய 'நான் ஏன் நாத்திகன்" என்ற அந்த நூல் இளைய தலைமுறை வாசிக்க வேண்டிய முக்கிய பிரதி ஆகும். 

பள்ளிப்பருவத்தில் கூச்ச சுபாவம் நிறைந்திருந்த தனக்கு, அகங்காரம் எப்படி தோன்றி இருக்க முடியாது என்பதைச் சொல்லும் பகத் சிங், கடவுளை தனது விரோதியாகவும் தான் பார்க்கவில்லை, ஏனெனில் அப்படி கருதுவது, ஒரு கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்வதாகிறது, தான் கடவுள் இருப்பதையே நம்பவில்லை என்று விவாதத்தைத் தொடர்கிறார். 

நிறுவனமயமாக்கப்பட்ட எதையும் கேள்வி கேட்பவருக்கு நேரும் பழி, அவப்பெயரே தனக்கும் நேர்கிறது என்று குறிப்பிடும் பகத் சிங், உலகில் உயிரின் தோற்றம், துயரங்கள், அழிவு என அனைத்து அம்சங்களையும் காரணம் காட்டி, இதில் கடவுளின்  பங்கு பாத்திரம்தான் என்ன என்று கேட்கிறார். டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம் எனும் ஆய்வு நூலை வாசிக்க பரிந்துரை செய்யும் பகத் சிங், ஸோஹம் சுவாமி எழுதிய பொதுபுத்தி எனும் புத்தகத்தையும் படிக்குமாறு சொல்கிறார்.

ஒவ்வொரு மதமும் உயிர்கள் குறித்துப் பேசுவதைக் கேள்விகளுக்கு உள்ளாக்கச் சொல்லும் பகத் சிங், இந்து  மதம் சொல்லும் முற்பிறப்பின் பாவங்கள் பற்றியும் கேள்விகளை எழுப்புகிறார். உயிர்களை பரிதவிக்க விட்டு, அவர்களுக்கு சோதனைகளைத் தந்து பிறகு அவர்களை உணரவைத்து ஆட்கொள்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்பது அவரது வலிமிகுந்த கேள்வி. 

பகத் சிங் குரலிலேயே அந்த இடத்தைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போம்: 

அதுதான் கடவுளின் சட்டம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்; இறைவன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றால், அவன் அனைத்திற்கும் மேலானவனாக இருக்க முடியாது; அவனும் நம்மைப் போலவே ஒரு அடிமைதான். அவனுடைய மகிழ்ச்சிக்கான திருவிளையாடல் என்று தயவுசெய்து கூறாதீர்கள்; நீரோ மன்னன் ஒரு ரோம் நகரை எரித்தான். அவன் கொன்றது எண்ணிக்கையில் அடங்கக்கூடிய அளவு மக்களைத்தான். சில துயரச் சம்பவங்களை நிகழ்த்தினான். எல்லாம் அவனுடைய மகிழ்ச்சிக்காக. ஆனால் வரலாற்றில் அவனுடைய இடம் எது? வரலாற்று ஆய்வாளர்கள் அவனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? இருக்கிற வசைச் சொற்கள் அனைத்தும் அவன்மேல் பொழியப்படுகின்றன. அவன் கொடுமைக்காரன், இதயமற்றவன், வெறிபிடித்தவன் என்ற வசைச் சொற்களால் வரலாற்று நூல்களின் பக்கங்கள் எல்லாம் கறைபடிந்துள்ளன. 

ஒரு செங்கிஸ் கான் தன் மகிழ்ச்சிக்காக சில ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தான்; நாம் அவன் பெயரையே வெறுக்கிறோம். இப்படி இருக்கையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தி வந்திருக்கிற, இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுடைய அந்த எல்லாம் வல்லானை, நிலைபேறுடைய நீரோவை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறோம்? செங்கிஸ்கான் செய்ததை விட அதிகமாக ஒவ்வொரு கணமும் செய்கிற கொடுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகம் என்ற பெயருக்கேற்ப எப்போதும் துன்பங்கள் நிலவுகிற இந்த உலகத்தை அவன் எதற்காகப் படைத்தான் என்று நான் கேட்கிறேன். இதெல்லாம் எப்படி நியாயமாகும்? 

இங்கேதான் ஒரு நுட்பமான கேள்வியை பகத் சிங் எழுப்புகிறார். இதை வாசிக்கையில் எனக்கு, பள்ளிக்கூட வாசிப்பில் தமிழ் பாட நூலில் படித்த குலசேகர ஆழ்வார் செய்யுள் ஒன்று நினைவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த அந்தப் பகுதி, நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் "பெருமாள் திருமொழி" எனும் பிரிவில் அடங்குவது. அற்புதமான தமிழ் இலக்கிய வாசிப்பான நாலாயிரத்தில் வரும் அந்த பாசுரம் இப்படி இசைக்கிறது: 

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ 
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே


எனக்கு எத்தனை சோதனைகள் அளித்தாலும், உன்னை விடமாட்டேன் என்று பற்றுதல் கொள்ளும் பக்தனின் குரல் இது. கத்தியை வைத்தும், வேறு விதத்திலும் சிகிச்சைகளை மேற்கொண்டாலும் மருத்துவனை வெறுக்காது அவன்பால் அன்பு கொண்டாடும் நோயாளியைப் போலவே, நீ எனக்கு எத்தனை துயர் தந்தாலும், உனக்கு நான் ஆட்பட்டே தீருவேன் என்கிற குதூகலக் கொண்டாட்டக் குரல் அது. 

தான் படைத்த உயிர்களுக்கே சோதனை தருவதும், பின் அதிலிருந்து அருள் பாலிப்பதும் எதற்கு என்று இந்த இடத்தில்தான் கேள்வியை வைக்கிறார் பகத் சிங். தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரைப் பேசுகிறார் ஆழ்வார். அந்த மருத்துவரே நோயையும் பரிசளித்தவராக இருந்திருப்பாரானால் எப்படி அதை  ஏற்க முடியும் என்று கேட்கிறார் பகத் சிங்!

துன்பப்படும் அப்பாவிகள் அடுத்த பிறப்பில் அதற்கான பரிசு பெறுவார்கள், தவறு செய்தவர்கள் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்களா? சரி, இந்தப் பிறப்பில் உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தியவன் அடுத்த பிறப்பில் அதன்மீது மருந்தைத் தடவுவான் என்பதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்? 

கிளேடியேட்டர் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர்களும் அதன் ஆதரவாளர்களும் பசியோடு இருக்கிற சிங்கங்களின் முன்னால் மனிதர்களை வீசினார்கள்; அந்த விலங்குகளிடமிருந்து அவர்கள் தப்பி வந்தால் அவர்களை நன்றாகக் கவனித்து ஆதரவு அளிப்போம் என்றார்கள்; இதை எந்த அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்? 

அதனால்தான் நான் கேட்கிறேன்: ``அனைத்துக்கும் மேலான அந்தக் கடவுள் எதற்காக உலகையும் அதில் மனிதனையும் படைத்தான்? உல்லாசத்துக்காகவா? அப்படியானால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம்?''


எனவே தான் மேற்சொன்னபடி வாதிடுகிறார் பகத் சிங். இந்தப் பகுதிக்குத் தொடக்கத்தில் முதலிலேயே பின்வரும் கேள்வியையும் அவர் எழுப்பிவிடுகிறார்:

ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன் உண்டு என்றால், இந்த பூமி அல்லது உலகத்தைப் படைத்தது யார்? அதைப் படைத்தது எதற்காக என்று தயவுசெய்து சொல்லுங்கள். துன்பங்களும் துயரங்களும், முடிவே இல்லாத எண்ணற்ற துயரச் சம்பவங்களும் நிறைந்த, உலகத்தில் உள்ள ஒரேயொரு மனிதன்கூட முழுக்கவும் திருப்தியடைய இயலாத உலகம் இது.

இறப்பிற்குப் பிறகு தொடர்ந்து வருவது எதையும் எதிர்பார்த்தோ, மறு ஜென்மம் பற்றிய கவலையோடோ, முந்தைய பிறவி குறித்த புகார்களோடோ தாம் சுதந்திர போராட்டத்திற்குள் இறங்கவில்லை என்று தெளிவாக்கும் பகத் சிங், மனிதர்கள் நிம்மதியாக வாழும் ஓர் அற்புத உலகை இங்கேயே படைக்கவே தான் புரட்சியில் இறங்கியதை அருமையாகப் பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல். 

விரக்தி உணர்வால் கடவுளை வெறுத்த மொழி அல்ல அது, இறை உணர்வின் பாற்பட்டு அடங்கிப் போய் தங்களை ஒப்புக் கொடுக்கும் கோடிக்கணக்கான மக்களை விழிப்படைய வைக்கும் தெளிவு பெற்ற மதியின் வெளிப்பாடு அது. 

ஆத்திகம் எப்படி மதிக்கத் தக்கது என்று சமூகம் செயல்படுகிறதோ, நாத்திக உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற முழக்கமே பகத் சிங்கின் ஆவணம். எனவேதான் ஜீவா அதை மொழிபெயர்த்துக் கொடுக்க, பெரியார் அதைக் குடியரசு இதழில் வெளியிட்டார். அந்தக் 'குற்றத்திற்காக' (?), ஜீவாவும், பெரியாரின் சகோதரர்-பதிப்பாளர் ஈ வெ கிருஷ்ணசாமியும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

மத உணர்வை அடிப்படை உணர்வாக தக்க வைப்பதை, தேவைப்பட்டால் அதை வெறியாக ஊட்டுவதை ஆட்சியாளர்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். அதைச் சுட்டிக் காட்டும் முற்போக்கு சிந்தனையாளர்களை நாத்திகர்கள் என்று சொல்லி மக்களிடம் இருந்து தனிமைப் படுத்துவதில் குறியாக இருக்கின்றனர். 

இந்திய விடுதலை வேள்வியில்  தன்னையே ஆகுதியாக ஆக்கிக் கொண்ட மாவீரன் பகத் சிங் நாத்திகன் என்பதை பாமர மக்கள்  அதிகம் அறிய மாட்டார்கள். எனவேதான், மத அடிப்படைவாதிகள் இப்போது பகத் சிங்கையும் அபகரிக்கத் துணிந்திருப்பது. எல்லா உன்னதமிக்க ஆளுமைகளையும், தேதிகளையும், நிகழ்வுகளையும் மதவெறி சக்திகள் தன்வயப்படுத்தி மக்களைக் குழப்பி, மோதவிட்டுத் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல துடிக்கும் நேரம் இது. அதற்காகவும் ஒரு புரட்சிக்காரர் குறித்த அரிய பக்கங்களையும் முன்வைப்பது தேவையாகிறது.


****************
நன்றி: வண்ணக்கதிர்: மார்ச் 29, 2015