அல்ச்டேர் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் மேற்கண்ட முடிவு வந்துள்ளதாக இன்றைய தினமணி செய்தி கூறுகிறது. ஆரம்ப கல்வி பயின்றவர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் இறை நம்பிக்கை மேலும் மேலும் படிப்பை தொடரும்போது அப்படியே குறைந்துவிடுகிறது என்றும் தங்கள் மீதான நம்பிக்கை தவிர வேறு எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றும் பிரிட்டனில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு கூறுகிறது.