Friday, November 29, 2013

பண மதிப்பு ஏற்றம், இறக்கம் - யாருக்காக?



முதலாளித்துவத்தின் முக்கியமான அம்சமே பணத்தைப் பயன்படுத்தும் திட்டம் ஆகும். ஒரு பொருளையும் இன்னொரு பொருளையும் பணத்தின் மூலமே பரிமாற்றம் செய்ய முடியும். ஒரு பொருளை விற்பது மற் றும் இன்னொரு பொருளை வாங்குவது ஆகி யவை, அதாவது பரிமாற்றத்தின் காலம் கூடு தலாக இருந்தாலும், பணத்தின் மூலம்தான் நடைபெறுகின்றன. செல்வத்தின் ஒரு குறிப் பிட்ட அளவு, செல்வந்தர்களால் பணமாகத் தான் வைத்துக் கொள்ளப்படுகிறது. செல்வந் தர்கள் அவ்வாறு செய்வதுதான், முதலாளித்து வத்தின் ஒரு அம்சம் ஆகும். வருங்கால ஒப் பந்தங்கள் அனைத்தும் பணவடிவில்தான் செய்யப்படுகின்றன. பணத்தின் மதிப்பு பெரிய அளவில் தேய்ந்துவிடாது என்னும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த பரிமாற்றங்கள் அனைத்தும் நடை பெறுகின்றன.
நிதிமயமாக்கல்
பணத்தின் மதிப்பு குறைப்பை தடுத்து நிறுத்துவது என்பது அவசியமானது. ஏனெ னில் பொருள் உற்பத்தியானது அதிகரிக்க அதிகரிக்க, நிதிச்செல்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பணத்தின் மதிப்பு குறையும்போது சொத்தின் மதிப்பு குறை கிறது. பணத்தின் மதிப்பு எதனோடும் இணைக் கப்படாத பொழுது, அதாவது விலைவாசி யோடு இணைக்கப்படாத பொழுது இந்த நிலை ஏற்படுகிறது. நவீன முதலாளித்துவத் தில் நிதிப்பகுதியின் அளவு பன்மடங்காக பெருகுகிறது. அப்போது பணத்தின் மதிப்பு நிலையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தங்களுடைய நிதிப்பகுதி அதிகாரம், கட்டுப்பாட்டின் அளவு குறையக் கூடாது என்று முதலாளித்துவம் எதிர்பார்க் கிறது. இதைத்தான் ‘நிதிமயமாக்கல்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பணவீக்கத் தடுப்பு அரண்
முதலாளித்துவத்தின் முக்கியம் பணத் தின் மதிப்பை பாதுகாப்பதே ஆகும். இது எப்படி சாதிக்கப்படுகிறது? காத்திருப்பு தொழிலாளர் படையே (வேலையில்லாப் பட் டாளம்) முதலாவதும் மிக முக்கியமானது மாகும். தொழிலாளிகளின் உண்மை ஊதியத் தைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்படுவதே, வேலையில்லாத அல்லது காத்திருப்பு தொழிலாளர் படையாகும். அதாவது முத லாளியின் உபரிமதிப்பு (இலாபம்) நிலையாக இருப்பதற்காகவே இந்த காத்திருப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை ஊதியத் தைக் குறைப்பதற்காக மட்டும், இந்தப் படை உருவாக்கப்படவில்லை.
ஊதிய உயர்வுக் கோரிக்கைகளை தொழிலாளி எழுப்பாமல் இருப்பதற்காகவும், இந்தப் படை உருவாக் கப்படுகிறது. இந்த வேலையில்லாப் படை மிக மிக சிறியதாக மாறுமேயானால், அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே வேலை யின்மை செல்லுமானால், பண ஊதியமும் விலைவாசியும் மேல்நோக்கிச் செல்லும். இதைத்தான் பணவீக்கத் தடுப்பு அரண் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ராபின்சன் கூறினார். இந்த பணவீக்கச்சுவர் என்னும் கற்பனைச்சுவர் ஏற்படுமானால், வேலையில்லாத் திண்டாட் டம் என்பது குறையும்.
விவசாயப் பொருட்களுக்கு குறைந்த விலை
பணத்தின் மதிப்பை அப்படியே நிலை நிறுத்த வேண்டுமானால், இந்த காத்திருப்புப் படை நிரந்தரமாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் முதலாளித்துவ தலைநகரங்களுக்கு, தொலைதூரத்தில் உள்ள நிலங்களிலிருந்து அடிப்படைப் பொருட்கள் உற்பத்தியாகின் றன. முதலாளித்துவத்துக்கு முந்தைய நிலப் பிரபுத்துவத்தால் உருவாக்கப்படும் இந்த பொருட்களை, விலை ஏறாமல் வைத் துக் கொள்வது என்பது இதில் அடக்கம். மேலும் அவற்றைக் குறைந்த விலைக்கு முதலாளித் துவ தலைநகரங்களுக்கு கொண்டு வருவதும் இதில் அடக்கம். முதலாளித்துவ நகரங் களின் பணத்தாளின் அடிப்படையில் இந்தப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்வது, பணத்தின் மதிப்பைப் பாது காப்பதற்கு முக்கியம் ஆகும்.
காலனியத் தன்மை
வரலாற்றில், நாடுகளை அடிமைப் படுத்தி வைத்திருந்த காலத்தில் எவ்வாறு செய்யப்பட்டதோ, அதுதான் இப்போதும் செய்யப்படுகிறது. அந்த அடிமைத்தன்மை முடிந்த பிறகும் கூட பல புதிய உத்திகளின் மூலம் ஏகாதிபத்தியம் அதே பாதையில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக முன்பும் சரி, இப்போதும் சரி, ஏகாதிபத்தியம் தன்னு டைய பணத்தின் மதிப்பை பாதுகாத்துக் கொள்ள பல செயல்களைச் செய்து வருகிறது.
மறைமுகக் காத்திருப்புப் படை
ஏகாதிபத்தியத்தின் இரண்டாவது நடவடிக் கை என்ன என்பதை பார்ப்போம். காத்திருப் புப் படையின் விளைவுகளை நாம் பார்த் தோம். லெனின் சொன்னதைவிட கூடுத லாக முதலாளித்துவம் செயல்படுகிறது. முத லாளித்துவ தலைநகரங்களுக்கு வெளியே உள்ள பிரதேசங்களில், அடிப்படை பொருட் களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் கூடுதல் விலை கிடைக்காமல் பார்த்துக் கொள்வது நடைபெறுகிறது. அதாவது சிறு விவசாயி களும் சிறு உற்பத்தியாளர்களும் தாங்களும் ஒரு காத்திருப்புப் படையே (அதாவது வேலையில்லாததோர் படையின் இன் னொரு பகுதி) என்ற உணர்வு இல்லாமல் செயல்பட வைப்பதுதான் முதலாளித்துவத் தின் இன்னொரு அம்சம். அடிமை நாடு களை வைத்திருந்தபோது அடிமை நாடு களின் செல்வத்தைக் கொண்டு செல்லுதல் மற்றும் தொழிற்சாலை உருவாகாத தன்மை யில் வைத்திருத்தல் ஆகியவற்றை செய்தது போலத்தான் இப்போதும் ஏகாதிபத்தியம் செயல்படுகிறது.
வேலையில்லாப் படை
ஏகாதிபத்தியத்தின் இந்த வகை செயல் பாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கிவிட்டன. இந்த வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நிரந்தரமாக போக்க முடியாததாக உள்ளது. மேலும் வேலை யில்லாத படையில் உள்ளோரை முதலாளித் துவமும் ஏற்றுக் கொள்வதில்லை. வேலை யில்லாதோர் வேலை தேடி, அந்த முத லாளித்துவ நாடுகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு, குடிபெயரும் தன்மையைக் கடு மையாக்கி வைத்துள்ளனர். அது முன்னும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அதன் காரணமாக வேலையில்லாதோர் மூன்றாம் உலக நாடுகளிலேயே தங்கியிருந்தாக வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் நிரந்தரமான வேலையற்றோர் படை அமைப்பு இருக்கிறது. அதாவது வேலையில்லாதவர்கள், தகுதிக்கும் குறை வான வேலைபார்ப்போர், அரைகுறை வேலை பார்ப்போர், பெயரளவில் வேலையிலிருப்போர் மற்றும் மறைமுகமாக வேலையற்றோர் என்று ஒரு பெரிய படையே உள்ளது. மேலும் இந்தப் படைக்கு தங்களுடைய பணமதிப்பை ஏற்றிக் கொள்வதற்கான கூட்டுப்பேர சக்தி குறைவாக உள்ளது.
முதலாளித்துவ தலைநகரங்களில் உள்ள வேலையற்றோர்
முதலாளித்துவ தலைநகரங்களில் உள்ள வேலையற்றோரும் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர். வேலையற்றோர், தகுதிக்கும் குறைந்த வேலைபார்ப்போர் கொண்ட மிகப்பெரிய படை அங்கு உள்ளது. முதலாளித்துவத்துக்கு காத்திருப்புப் படை யாகத்தான் இது கருதப்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பாளிகளின் உண் மை ஊதியத்தையும், பண ஊதியத்தையும் குறைப்பதற்குத்தான் இந்தக் காத்திருப்புப் படை பயன்படுத்தப்படுகிறது. எல்லை தாண்டி பொருட்களும், மூலதனமும் இப் போது வருவது அதிகப்படுத்தப்பட்டுவிட் டது. அவ்வாறு வருவதால் உற்பத்தியாளர் களின் ஊதியத்தைக் கட்டுப்படுத்துவதற் காக இந்தப்படை பயன்படுத்தப்பட்டு வரு கிறது.
உள்நாட்டு - வெளிநாட்டு வேலையில்லா படை
முதலாளித்துவ தலைநகரங்களின் மூல தனம், உண்மையில் தனது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலையில்லாப் படை களை வைத்துள்ளது. இப்படைகளை வைத் திருப்பதன் நோக்கமே அடிப்படைப் பொருட் களை உற்பத்தி செய்கிற விவசாயிகள் மற் றும் சிறு உற்பத்தியாளர்களை கட்டுப் பாட்டிற்குள் வைத்திருப்பதற்கேயாகும். தேவையான பொழுது, முன்பு உலகப் போருக்குப் பின் பயன்படுத்தியது போல, அந்தப் படையை பயன்படுத்திக் கொள்வதே, உலக முதலாளித்துவத்தின் நோக்கம் ஆகும். தன்னுடைய பணத்தின் மதிப்பைக் காப் பாற்றிக் கொள்ள ஏகாதிபத்தியம், உள்நாட் டிலும், வெளிநாட்டிலும் வேலையில்லாப் படையை வைத்திருக்கிறது.
அடிப்படைப் பொருட்கள் உற்பத்தி
நாம் இரண்டாவது விசயத்துக்கு வரு வோம். செல்வம் குவிகின்ற பொழுது, தூரப் பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படுகிற அடிப்படைப் பொருட்களுக்கான கேட்பு அதி கரிக்கின்றது. அவற்றின் விலை ஏறாவிடில், அதுவும் பணத்தின் மதிப்பை சீர்குலைத்து விடும். அப்போது அவற்றின் வழங்கலை (ளுரயீயீடல) அதிகப்படுத்த வேண்டும். ஆனால் இதுபோன்ற பல பொருட்கள், உதாரணமாக வெப்பமண்டல பகுதிகளிலிருந்து வருகின்ற பொருட்களின் வழங்கலை அதிகப்படுத்த முடியாது. ஏனெனில் நிலத்தின் அளவை அதிகப்படுத்த முடியாது. பல வகை பயிர் களை அதிகப்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இன்றி உற்பத்தியை அதிகப் படுத்த முடியாது.
பொருள் உற்பத்தியில் அரசுகளின் பங்கு
இந்தப் பணிகள் அரசின் முயற்சி இருந் தால்தான் செய்ய முடியும். விடுதலைக்குப் பிறகு மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் அத்தகைய ஒரு முயற்சியை எடுத்தன. பாச னத்திற்குக் கூடுதல் பொது முதலீடுகள், அரசு ஆராய்ச்சிகள் மூலம் வேளாண்மை விரிவுபடுத்தப்பட்டன. மேலும் விவசாயக் கடன்கள் எளிமைப்படுத்தப்பட்டன. அதிக விரிவாக்கப் பணிகள் பலமான வலைப் பின்னல் வேலைகள் மூலம் அதிகப்படுத்தப் பட்டன. விவசாயிகளுக்கு நிறுவனக் கடன் களை அதிகப்படுத்துதல், விதைகள் வழங்கு தல், உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கு ஓர ளவு நியாயமான விலை ஆகியவை வழங் கப்பட்டன. இதன் மூலம் புதிய சூழ்நிலை களில் முதலாளித்துவ பெருநகரங்களுக்கு தேவையான அடிப்படைப் பொருட்களை அனுப்புதல் உறுதி செய்யப்படுகிறது. அதே சமயம் இந்தப் பொருட்கள் உற்பத்தி செய்த இடங்களிலேயே இல்லாமலும் செய்யப்பட்டு விடுவதால், இந்தப் பொருட்கள் முதலாளித் துவ தலைநகரங்களில் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு விடுகிறது.
அடிமைநாடுகளில் செய்யப்பட்டது
அடிமைநாடுகளைக் கையில் வைத் திருந்தபோது, முன்பு முதலாளித்துவம் எப்படி அடிமை நாடுகளிலிருந்து அநியாய மாக செல்வதைக் கொண்டு சென்றதோ, எப் படி தொழிற்சாலை உருவாகாத தன்மையை ஏற்படுத்தியதோ, அதே செயல்களை முத லாளித்துவம் மீண்டும் செய்கிறது. இதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு மக்களின் வாங் கும் சக்தி குறைகிறது. இதனால் முதலாளித் துவ பெருநகரங்களில் விலை ஏறாமல் பார்த் துக் கொள்ளப்படுகிறது. இந்தப் பொருட்கள் பெருநகரவாசிகளுக்கு தேவையில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது மூன்றாம் உலக நாடுகளின் நிலங்கள் யாவும் முதலாளித்துவ பெருநகரவாசிகளுக்கு தேவையான வேறுபொருட்களை உற்பத்தி செய்யும் நிலங்களாக மாற்றப்படும். மூன்றாம் உலக நாட்டு மக்களை ஏழ்மையில் தள்ளி, முதலாளித்துவ பெரு நகர மக்களுக்கு தேவை யான பொருட்களை விலை உயர்வின்றி கிடைக்கச் செய்வதன் மூலம், தன்னுடைய நாட்டுப் பணத்தின் மதிப்பு குறையாமல் ஏகாதிபத்தியம் பார்த்துக் கொள்கிறது.
சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயம்
தாராளமயமாக்கல் கொள்கை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் அரசின் செலவுகள் குறைக்கப்பட்டன. சிக்கன நட வடிக்கை என்ற பெயரில், ஏழை மக்கள், விவ சாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களுக்கு அரசு மானியங் கள் குறைக்கப்பட்டன. அரசுத்துறைகள் தனி யார்மயமாக்கப்பட்டன. இந்த வகையான அனைத்து நடவடிக்கைகளும், மக்களின் வாங்கும் சக்தியை கணிசமாகக் குறைக் கின்றது. எனவே செலவினங்களுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக மூன்றாம் உலக நாட்டு மக்கள் தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் அடிப்படைப் பொருட்களை வாங்கும் நிலை இல்லாமல் போய்விடுகின்றனர். இதன் கார ணமாகவும், முதலாளித்துவ நகரங்களுக்கு பொருட்கள் செல்லுதல் அதிகமாகிவிடு கிறது.
கட்டாய சேமிப்பு
விலை உயர்வு என்பது மூன்றாம் உலக நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். அதே சமயம் ஏகாதிபத்திய நகரங்களில் விலை உயர்வு அனுமதிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் முதலாளித்துவ நகரங்களில் உள்ளோருக்கு தேவைக்கும் குறைவாக பொருட்கள் கிடைக்கிறது என்று கொள் வோம். அப்போது மூன்றாம் உலக நாட்டு மக்களிடையே அந்தப் பொருட்களுக்கான விலை உயர்த்தப்படுகிறது. இதன்படி அந்த மக்கள் தங்களுடைய வருமானத்திற்கு குறை வில்லாத விலை உயர்வை சந்திக்க வேண்டி யுள்ளது. விலைகள் உயர்த்தப்படும்போது, மூன்றாம் உலக மக்கள் விலை உயர்ந்ததால் தங்களுடைய தேவையைக் குறைத்துக் கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதன் மூலமும் முதலாளித்துவ நகரங்களுக்கு தேவையானப் பொருட்கள் கூடுதலாக கிடைத்துவிடுகிறது. இதைத்தான் மூன்றாம் உலக நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் ‘கட்டாய சேமிப்பு’ என்று பொருளாதார நிபு ணர்கள் சொல்லுகின்றனர். அதாவது அவர் களுடைய வருமானத்தின் பெருந்தொகை விலைவாசிக்கு செலவு செய்யப்படுவதால், அவர்களுடைய வருவாய் உறிஞ்சப்படுகிறது.
நாணய மதிப்பைக் குறைத்தல்
மூன்றாம் உலக நாடுகளில், பொருட்கள் விலை உயர்வதால், முதலாளித்துவ தலை நகரங்களில் எந்த இழப்பும் ஏற்படாது என் பதுடன், பண மதிப்பிலும் எந்த மாற்றமும் ஏற் பட்டுவிடாது. விலைவாசி ஏறும்போது, மூன் றாம் உலக நாடுகளின் நாணய மாற்று மதிப்பு குறைக்கப்பட்டுவிடும். முன்பு அந்தப் பொருள் எத்தனை டாலருக்கு வாங்கப்பட்டதோ, அதே அளவு டாலருக்குத்தான் பொருள் வாங்கப்படும். நாணய மதிப்புக் குறைப்பு என்பது மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டப்பட்டு விடும். இதற்கு எந்தவித தலையீடும் தேவை யில்லை. பணவீக்கம் அதிகரிக்கும்போது, செல்வம் வைத்திருப்போர், நாணய பரிமாற்ற மதிப்பு குறைய வேண்டும் என்று எதிர்பார்க் கின்றனர். அப்போது நாணய மாற்று விகி தத்தை ஊகத்தின் மூலம் (வதந்தியின் மூலம்) மூன்றாம் உலக நாடுகளின் பணமதிப்பைக் குறைத்து விடுகின்றனர்.
செல்வம் உச்சியில் குவிதல்
சுருக்கமாக சொல்லப்போனால், முத லாளித்துவம் பல வகை நடவடிக்கைகளை தன் கைவசம் வைத்துள்ளது. அவற்றைப் பயன்படுத்தி தன்னுடைய பணத்தின் மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த நட வடிக்கையின் மூலம் உலகின் மிகப்பெரும் மக்கட்தொகையானது கட்டாயமாக ஏழ்மைக் குள் தள்ளப்படுவதுதான் நடைபெறுகிறது. தங்களுடைய நாட்டின் பணமதிப்பு குறை யாமல் இருப்பதற்காக முதலாளித்துவத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அவர் களுடைய நாட்டில் எந்த சேதமும் இல் லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மார்க்ஸ் ஊடுருவிப் பார்த்துச் சொன்னார். “துருவத் தில் செல்வம் சேர்வதும், மையப்பகுதியில் வறுமை குவிவதும் தான் முதலாளித்துவம் உருவாக்கும் உலகம் ஆகும்.”
- பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில் : திருவாரூர் குரு