Friday, February 25, 2011

பெண்ணால் முடியும்


தங்களுக்கு என்று ஒரு இசையுலகத்தை படைத்துக்கொண்டு கோலோச்சிக்கொண்டிருந்த ஆணுலகத்தின் ஊடாக ஒரு பெண் நுழைந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார் 27 வயது சுஜாதா. ஆந்திராவின் நாயுடுப் பேட்டையைச் சேர்ந்தவர். தாய் மாமன் நாதஸ்வரக் கலையில் நாதஸ்வரக் கலையில் ஈடுபட்டு தொழிலாகவும் செய்து வந்தார். அந்தா சூழலில் 7 வயது சுஜாதாவுக்கும் நாதஸ்வரக்கலையில் ஈடுபாடு வந்தது. அவருடைய ஆர்வத்தை கண்டு தாய் மாமனும் கலையை சொல்லிக் கொடுத்தார். காலை 4 மணி முதல் 7 மணிவரை தினந்தோறும் அசுர சாதகம் செய்தார் சுஜாதா. சுவாசத்தை இழுத்துப் பிடித்து தம் கட்டும் வித்தையை, கடும் உழைப்பின் மூலம், கைவரப் பெற்றார். இன்று திருமணங்களில் நாதஸ்வரம் இசைக்கிற வாய்ப்புக்கள் சுஜாதாவை தேடிவருகின்றன. வெல்க பெண்ணின் வன்மை.
தகவல் உஷா PNB சென்னை. நன்றி Bank Workers Unity, மார்ச் 2011

No comments: