நூல் மதிப்புரை
தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சி எஸ் பஞ்சாபகேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 'உழைக்கும் வர்க்கம்' ஏட்டின் வெளியீடாக வெளி வந்துள்ளது. பல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி ஆவணப்படுத்தியுள்ள தோழர் என் ராமகிருஷ்ணன் இதை எழுதியிருப்பது மிகவும் பொருத்தமானது.
நவம்பர் 2009ல் சி எஸ் பி யின் துணவியார் திருமதி திருபுரசுந்தரி அம்மாள் மறைந்தபோது அவரது குடும்பத்தார் 'அம்மா' என்ற நினைவு குறிப்புகள் மற்றும் இயக்கச் செய்திகள் அடங்கிய நூலை வெளியிட்டனர். ஒரு பகுதி செய்திகள் அதில் கிடைத்தாலும் முழுமையான நூலாக இது வெளி வந்துள்ளது நிறைவைத் தருகிறது.
1924 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, எஸ் எஸ் எல் சி படித்து, 1954ல் ஆரணியில் தபால் தந்தி துறையில் பணியில் சேர்ந்த சி எஸ் பி 1957ல் வேலூருக்கு மாறுதல் செய்யப்பட்டார். அங்குதான் அவரது தொழிற்சங்க பணிகள் தீவிரமடைந்தன. கே ஆர் சுந்தரம் போன்ற தலைவர்களுடன் இணைந்ததாலும், ஜன சக்தி மற்றும் மார்க்சிய நூல்களை கற்றதாலும் தொழிற்சங்க தலைவராகவும், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவராகவும் உயர்ந்தார். தபால் தந்தி ஊழியர்கள் பல்வேறு பகுதிவாரி சங்கங்களில் சிதறிக் கிடந்தனர். 1954ல் ஒன்பது சங்கங்களாக உருவாகி, அவைகள் இணைந்து தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனம் (என் எப் பி டி இ) உருவாக்கப் பட்டது. தில்லியில் நடைபெற்ற இந்த அமைப்பை கட்டி வளர்க்கும் முன்னோடித் தலைவராக அவர் விளங்கினார்.
1960 ம் ஆண்டில் தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ஒன்றுபட்ட போராட்டத்தை துவக்கினர். சிஎஸ்பி கைது செய்யப்பட்டு வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார். வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்போது அவரும் திருபுரசுந்தரி அம்மாவும் எழுதிய டைரி குறிப்புகள் ஏழு குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் வறுமையை படம் பிடித்துக் காட்டுகிறது. கண்கள் பனிக்கின்றன.
ஆனாலும் சிஎஸ்பி துவண்டு விடவில்லை. அதே ஆண்டில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
தபால் தந்தி துறையின் அடி மட்டா ஊழியர்களான இ டி பிரிவினர் முதல் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அரசு ஊழியர் கங்காதரன், ராகவேந்திரன், ரங்கநாதன், டி கோபாலகிருஷ்ணன், என் கோபாலகிருஷ்ணன், சுதாகரன், அபிமன்யு, மாணிக்க மூர்த்தி, செல்லப்பா, சாவித்திரியம்மாள் போன்ற அன்றைய தபால் தந்தி துறை இளம் தலைமுறையினரை வளர்த்தெரடுத்து தலைவராக்கிய பெருமை சிஎஸ்பி திருபுரசுந்தரி தம்பதியருக்கு உண்டு. குடும்பம் முழுவதும் இன்று தொழிற்சங்க, சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு எடுத்துக்காட்டான குடும்பம். மகன் ரவிசங்கர் தான் காதலித்த பானுவை வீட்டிற்கு அழைத்து வந்து உடன் திருமணம் செய்ய வேண்டிய நிலையை விளக்கியபோது, தயக்கம் இல்லாமல் நடத்தி வைத்தவர் திருபுரசுந்தரி அம்மாள். இயக்கப் பணிகள் முடித்து தாமதமாக வந்த சிஎஸ்பி, நான் என்ன செய்வேனோ அதை நீ செய்துள்ளாய் என்றார். எத்தகைய குடும்ப ஜனநாயகம்! இசையிலும் கலையிலும் அவருடைய ஈடுபாடு நூலில் ஆங்காங்கே விரவிக்கிடக்கிறது.
அவரது பேச்சாற்றல், வகுப்பு எடுக்கும் திறமை, ஒரு சிறந்த அமைப்பாளராக அவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் அவரது சக தோழர்கள் மூலம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'உழைக்கும் வர்க்கம்' என்ற மாத இதழை துவக்கி தன் வாழ்நாள் முழுவதும் அதன் ஆசிரியராக இருந்து, ஊழியர்களை சரியான வழியில் ஒற்றுமைப் படுத்தியவர்.
பல்முனைத் திறமைகள் கொண்ட அவர் வாழ்வும் இயக்கப்பணிகளும், அவரது அனுபவங்களும், வெற்றி தோல்விகளும் பதிவாகியுள்ள இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.
வெ சுந்தரம்
நன்றி செம்மலர் பிப்ரவரி 2011
என். ராமகிருஷ்ணன் எழுதிய
சி.எஸ்.பஞ்சாபகேசன்
இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை

No comments:
Post a Comment