Tuesday, September 20, 2011

ஆக. 5- வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம்
-சி.பி.கிருஷ்ணன்
ஆகஸ்ட் 5ம் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தவுள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடெங்கிலும் உள்ள பொதுத்துறை வங்கிகள், உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் என்று ஒட்டுமொத்த வங்கித் துறையில் உள்ள 75,000 கிளைகளில் பணிபுரியும் பகுதி நேர துப்புரவாளர் முதல் மூத்த மேலாளர்கள் (ளுநniடிச ஆயயேபநசள) வரை உள்ள அனைத்துப் பகுதி ஊழியர்களும், அதிகாரிகளும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். ஜூலை 7 நடைபெறுவதாயிருந்த இந்த வேலைநிறுத் தம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளி போடப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும். இதற்கான அறைகூவலை ஹஐக்ஷநுஹ, க்ஷநுகுஐ, சூஊக்ஷநு, ஹஐக்ஷடீஊ, ஹஐக்ஷடீஹ, ஐசூகூருஊயுடன் இணைந்த ஐசூக்ஷநுகு, ஐசூக்ஷடீஊ மற்றும் க்ஷஆளு உடன் இணைந்த சூடீக்ஷறு, சூடீக்ஷடீ ஆகிய ஒன்பது சங் கங்களின் கூட்டமைப்பான ருகுக்ஷரு விடுத்துள்ளது.

மத்திய அரசின் மக்கள் விரோதக் தொழி லாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், கைவிடக் கோரியும் ஊழியர்களின் சில பணி நிலைமைகளில் முன்னேற்றம் வேண்டியும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

வங்கிகள் தேசியமயம்

நாடு விடுதலைப் பெற்றதிலிருந்து 1969 வரையிலான 22 வருடங்களில் 500க்கும் மேற்பட்ட சிறியதும், பெரியதுமான வங்கிகள் திவாலாகி இழுத்து மூடப்பட்டன. அவ்வங்கி களின் சேமிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். எனவே, வங்கிகள் தேசியமய மாக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங் களும் இடதுசாரிக் கட்சிகளும் வலுவான இயக்கம் நடத்தின.

புதிய பொருளாதாரக் கொள்கை அம லான பின் புதிய தனியார் வங்கிகளுக்கு ஆக் கமும், ஊக்கமும் கொடுக்கப்பட்டன. பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டன. பணி நியமனம், புதிய கிளைகள் திறப்பு ஆகியவை நிறுத்தப்பட்டன. படிப்படியாக 1969க்கு முந்தைய சூழலை உருவாக்க தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மத்திய ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

தற்போது அதன் உச்சகட்டமாக அப்பட்ட மான மக்கள் விரோதக்கொள்கையை கூச்ச நாச்சமின்றி அமல்படுத்த துடிக்கிறது மத்திய அரசு.

மூன்று மசோதாக்கள்

2011 மார்ச் 22ம் தேதி வங்கித் துறையை சார்ந்த மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத் தில் மத்திய நிதி அமைச்சரால் அறிமுகப்படுத் தப்பட்டன. அவை சட்டமாக்கப்பட்டால் பல் லாண்டு காலமாக இயங்கி வரும் தனியார் வங்கிகள், உள்நாட்டு/வெளிநாட்டு பெருமுத லாளிகள் கைகளுக்கு மாறிவிடும், பொதுத் துறை வங்கிகளின் உண்மையான கட்டுப் பாடு தனியார் பெருமுதலாளிகளின் ஆளு மைக்கு சென்றுவிடும். பொதுத்துறை வங்கி கள் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.

பாஜக அரசின்

தனியார்மய முயற்சி

“பொதுத்துறை வங்கிகளில் மத்திய அர சின் பங்கினை 33 சதவீதமாக குறைக்க வேண்டும்” என்று பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசின் நிதி அமைச்சர் யஷ் வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் 2000ம் ஆண்டு ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அறிமுக உரையில் அவர் “பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு வாக்குரிமை அதிகபட்சமாக ஒரு சதவீதம் என்று சட்டவிதி உள்ளது. எனவே, அரசின் பங்கு 33 சதவீதமாக குறைக்கப்பட்டா லும் மத்திய அரசுதான் கொள்கை முடிவை எடுக்கும். இயக்குநர் குழுவை கட்டுப்படுத் தும். பொதுத்துறைத் தன்மை கெடாது” என் றார். ஆனால், தற்போது (மார்ச் 22ம் தேதி) அந்த ஒரு சதவீத ஓட்டு ரிமை உச்சபட்சத்தை 10 சதவீதமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிகிறார். இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா ஓட்டெடுப் புக்கு வலியுறுத்துகிறார். பாஜக துளியும் கூச்ச மின்றி காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்க்கிறது. “ஒரு சதவீதம் உச்சபட்ச ஓட்டுரிமையால் பொதுத்துறை தன்மை கெடாது” என்று சொன்ன பாஜக காங்கிரசுடன் இணை கிறது. இடதுசாரி கள் தாம் பிரதானமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

க்ளோபல் டிரஸ்ட் பாங்க் திவால்

வங்கிகள் தனியார்மயமானால் என்ன ஆபத்து என்று சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. 1969க்கு பின்னர் பாங்க் ஆப் தஞ்சா வூர், பாங்க் ஆப் தமிழ்நாடு, பாங்க் ஆப் கொச் சின் போன்ற 20க்கும் மேற்பட்ட தனியார் வங் கிகள் திவாலாகி விட்டன. ஒரு முக்கிய மாற் றம் - அவை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டு சேமிப்பாளர்களின் பணம் காப்பாற்றப்பட்டது. 1994ல் அன்றைய நிதி அமைச்சர் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த க்ளோபல் ட்ரஸ்ட் பாங்க் (தமிழில் உலக நம் பிக்கை வங்கி) உள்ளூர் மக்கள் நம்பிக்கை யையும் இழந்து 12 ஆண்டுகளுக்குள்ளாகவே, 2006ல் மூழ்கிப் போனது. இதில் வேடிக்கை என்ன வென்றால் அதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவ்வங்கியை துவக்கிய ரமேஷ் கெல்லிக்கு “புதுமையான வங்கியாளர்” (ஐnnடிஎயவiஎந க்ஷயமேநச) என்று பட்டம் சூட்டப்பட்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அவ் வங்கி ஏற்படுத்திய ரூ.1100 கோடி நஷ்டம் பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் தலையில் திணிக்கப்பட்டது.

தனியார் வங்கிகள் யாருக்காக?

இது ஒருபுறம். புதிய தனியார் வங்கிகளும், அந்நிய நாட்டு வங்கிகளும் யாருக்காக செயல் படுகின்றன? அந்நிய நாட்டு வங்கியின் ஒரு கிளை கூட கிராமப்புறத்திலோ அரை நகர்ப் புறத்திலோ கிடையாது. Òபுதிய தனியார் வங்கி களும் ரிசர்வ் வங்கியின் கிராமப்புற கிளைகள் திறப்பதற்கான வழிகாட்டுதலை அப்பட்ட மாக மீறுகின்றன. ஏழை, எளிய மக்களுக் கான முன்னுரிமைக் கடனோ, பிணை (ளுநஉரசவைல) இல்லாத ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனோ இவை மருந்துக்கும் வழங்குவது கிடையாது. விவசாயக்கடன் என்பதெல்லாம் இவர்கள் அகராதியிலேயே கிடையாது. 35,000க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிக் கிளைகள் கிராமப்புறத்தில் இயங்குகின்றன. 14,000க்கும் மேற்பட்ட கிராம வங்கிக் கிளை கள், ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிக் கிளைகள் கிராமங்களில் இயங்குகின்றன. ஆனாலும், கடந்த பத்தாண்டுகளில் நடந் தேறியுள்ள பத்தாயிரக்கணக்கான விவசாய தற்கொலைகளுக்கு “குறைந்த வட்டியில் வங் கிக் கடன் கிடைக்காதது” ஒரு முக்கிய கார ணமாக உள்ளது. இந்த நிலையில் இவை தனி யாருக்கு தாரை வார்க்கப்பட்டால் நிலைமை என்னாகும்?

பெருநகரில் பொதுத்துறை வங்கிகளில் காசோலைப் புத்தக வசதியுடன் கணக்கு துவங்க குறைந்தபட்ச இருப்பு ரூ.1000/- ஆனால் அந்நிய வங்கியில் இது ரூ.75,000/-அதற்கு குறைந்தால் மாதம் ரூ. 350/- தண்டத் தொகையாக பிடிக்கப்படும். யாருக்கான வங்கிகள் இவை?

பெருமுதலாளிகளின் ஏஜெண்டுகளா?

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்கித் துறை சீர்திருத்தங்கள் தொடரும் என்று அமெரிக்க முதலீட்டாளர்கள் கூட்டத் தில் உறுதி அளிக்கிறார்.

திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஒரு படி மேலே சென்று “ஏராளமான கட்டுப்பாடுகளின் கார ணமாகவே நாம் நிதி நெருக்கடியிலிருந்து தப் பித்தோம் என்றொரு கருத்து நிலவுகிறது. அது என்னைப் பொறுத்தவரை தவறானது. நமது நாடு தொடர்ந்து தாராளமயக் கொள்கை யை கடைப்பிடிக்க வேண்டும். நிதித்துறை சீர்திருத்தங்கள் தொடர வேண்டும்” என்று கூறுகிறார்.

இவர்களெல்லாம் மத்திய அரசின் பிரதி நிதிகளா? பெருமுதலாளிகளின் ஏஜெண்டு களா?

ஒருபுறம் பொதுத்துறை வங்கிகளை இணைத்து கெட்டிப்படுத்தப் போகிறோம் என்கிறது மத்திய அரசு. “பொதுத்துறை வங்கி களின் இணைப்பு மிகவும் அவசியமான தொன்று. இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்டேட் வங்கியின் இரண்டு துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்து விடுவோம்” என்கிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. இதற்காக வங்கிகள் இணைப்பிற்கு “போட் டிக் குழுமத்திலிருந்து” (ஊடிஅயீநவவைiடிn ஊடிஅஅளைளiடிn) எந்தவிதமான ஒப்புதலும் பெறத் தேவையில்லை என்றொரு திருத்தத்தையும் முன்மொழிந்துள்ளார். ஆனால், மறுபுறம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய வங்கிகளல்லாத நிதிக் கம்பெனிகள் (சூக்ஷகுஊள) வங்கிகளாக மாறவோ, வங்கிகள் துவங்கவோ அனுமதி அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி. இதை எப்படி அனுமதிக்க முடியும்?

வங்கிப்பணி வெளியாட்களிடம்

வங்கிகளில்லாத கிராமப்புறங்களில் மக்களுக்கான உள்ளடக்கிய வங்கி சேவை புரிவதற்காக 73,000 கிராமங்களில் “ஸ்வாபி மான்” என்றொரு திட்டத்தை துவக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக தனியார் நிறுவனங்கள் மூலமாக “வியாபார உதவியாளர்கள்” நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலமாக வங்கிச் சேவை நீட்டிக் கப்படும் என்கிறது மத்திய அரசு.

தனியாரின் வியாபார உதவியாளர்கள் மூலம் வங்கிச்சேவை நீட்டிக்கப்படுமானால், வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு, ரகசியத்திற்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? வங்கிகளில் உள்ள நிரந்தரப் பணியாளர்களின் காலி இடங்கள் எப்படி நிரப்பப்படும்? வியா பார உதவியாளர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அது எப்படி தடுக்கப்படும்? பட்டியலின மக்களுக்கு கிடைத்து வந்த கவுரவமான வேலை வாய்ப்பு என்னாகும்? இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.

பொதுத்துறை வங்கிகளும், கிராம வங்கிக ளும், கூட்டுறவு வங்கிகளும் கிராமப்புறங்க ளில் சாதாரண மக்களுக்கு சிறந்த வங்கிச் சேவை அளித்து வரும்போது, ஏன் இத்த கைய சேவை முறைமாற்றப்பட வேண்டும்? குறிப்பாக கிராம வங்கிகள் வழங்கும் கடனில் 81 சதவீத கடன் ஏழை, எளிய மக்களுக்கான முன்னுரிமைக் கடனாக உள்ளபோது, புதிதாக தனியார் மூலம் சேவை என்பது எதற்காக? அதுமட்டுமல்ல கிராம வங்கிகளையே தனி யாருக்கு தாரை வார்க்கவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இதை எப்படி அனு மதிக்க முடியும்?

மிகச் சமீபத்தில் பரோடாவில் 22 வங்கி கள் இணைந்து கொடுத்த ரூ.1100 கோடி கடன் எப்படி மோசடியானது என்பது பற்றி ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மோசடிக்கு முக்கிய காரணம் “வாடிக்கை யாளர்களின் பெயர், விலாசம் போன்ற அடிப் படை விவரங்களை சேகரித்து கணக்கில் ஏற்றும் பணி வெளியாருக்கு விடப்பட்டது தான்” என்கிறது. ஆனாலும் பல வங்கிப் பணி கள் தொடர்ந்து வெளியாட்களிடம் ஒப்படைக் கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்கு. இதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

மூன்று லட்சம் காலியிடங்கள்

வங்கிப் பணிகளுக்கு ஆளெடுப்பது கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னா லேயே நிறுத்தப்பட்டுவிட்டது. 1991ல் வங்கி களின் ஒட்டுமொத்த வியாபாரம் ரூ.3,94,000 கோடி. அது 2010ல் ரூ.82,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 20 மடங்குக்கு மேல் வியாபாரம் உயர்ந்துள்ளது. ஆனால், இக்கால கட்டத்தில் மூன்று லட்சம் ஊழியர்கள் குறைந்துள்ளனர். மேலும் மூன்று லட்சம் ஊழியர்கள் வரும் ஐந்தாண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். இவை பணி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதும், மீண்டும் க்ஷளுசுக்ஷ (பாங்கிங் சர்வீஸ் பணி நியமன ஆணையம்) மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கை.

உலக வங்கியிடம் ஏன் கையேந்த வேண்டும்?

ஒருபுறம் மத்திய அரசு, பெருமுதலாளி களுக்கு பல்வேறு சலுகைகளாக கடந்த சில ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி விட்டுக் கொடுத்துள்ளது. அரசின் வருவாயில் துண்டு விழுந்துள்ளது. ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாய் லாபமாகவும், டிவிடெண்டுக ளாகவும் தந்த பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி மறுமுதலீடு வழங்க மத்திய அரசிடம் பணமில்லையாம். உலக வங்கியி டம் கையேந்துகிறது. விளைவு - அதன் அனைத்து மக்கள் விரோத, ஊழியர் விரோத நிபந்தனைகள் ஏற்கப்பட வேண்டுமாம்.

தொழிற்சங்கங்களை

ஒழித்துக் கட்டும் கமிட்டி

கண்டேல்வால் கமிட்டி என்றொரு கமிட்டி அமைக்கப்பட்டு அவற்றின் பரிந் துரைகள் மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளன. அந்த கமிட்டி, வங்கித் துறையில் உள்ள ஒரேமாதிரியான சம்பள விகிதம் மற்றும் பணிநிலைமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிறது. ஊழியர்களை “நன்றாக பணி செய்பவர், செய்யாதவர்” என்று பிரித்து, அவர்களின் சம்பளத்தை அதற்கேற்றாற் போல் மாற்ற வேண்டும் என்கிறது. ஊழியர் களின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்க வேண்டும் என்கிறது. அதிகாரிக ளின் எண்ணிக்கையை எழுத்தர்கள் போல் இரு மடங்காக்க வேண்டும். கடைநிலை ஊழியர்களே இருக்கக் கூடாது... என்றெல் லாம் பரிந்துரைத்துள்ளது அக்கமிட்டி. இவை யெல்லாம் அமலாக்கப்பட்டால் இன்றைக்கு தொழில்நுட்பத் துறையில் உள்ளது போன்ற நிலையே உருவாகும். இக்கமிட்டியின் பரிந் துரைகளை ஏற்பதன் மூலம் மத்திய அரசின் நோக்கமே ஊழியர்களை பிளவுபடுத்தி தொழிற்சங்கங்களுக்கு முடிவுகட்டுவது தான். இதை எப்படி வங்கி ஊழியர்கள் மவுன மாக அனுமதிக்க முடியும்?

இவற்றோடு சில முக்கியமான ஊழியர் கள், அதிகாரிகள் நலன் சார்ந்த கோரிக்கை களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

* ஊழியர்கள்/அதிகாரிகள் பணியிலிருக் கும்போது இறக்க நேரிட்டால் அவர்தம் குடும்பத்தினருக்கு வேலை / ஈட்டுத் தொகை என்பது ஆறாண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்சனையாக தொடர்கிறது. இது உடனடியாக தீர்க்கப் பட வேண்டும்.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பென்சன் திட்டத்தில் முன்னேற்றம் வேண்டும். ஒவ்வொரு ஊதிய உயர்வு ஒப் பந்தத்தை ஒட்டி பென்சன் தொகையில் முன்னேற்றம் வேண்டும். குடும்ப பென்ச னில் உயர்வு வேண்டும். அனைவருக் கும் ஒரேமாதிரியான பஞ்சப்படி வேண்டும்.

* ரிசர்வ் வங்கி போல், ஏராளமான நாடுக ளில் உள்ளதுபோல் வாரம் 5 நாட்கள் வங்கிச்சேவை வேண்டும்.

* அதிகாரிகளுக்கு வேலை நேர நிர்ணயம் என்பதே இல்லை. அவர்கள் நாளொன் றுக்கு 12 மணி முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின் றனர். ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களிலும் கூட பணி செய்ய நிர்ப்பந்திக் கப்படுகின்றனர். அதிகாரிகளின் வேலை நேரம் வரைமுறைப்படுத்தப்பட வேண் டும். ஊழியர்களின் ஒப்பந்தப்படியான வேலை நேரம் மதிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள் கையை முறியடிக்க பத்து லட்சம் வங்கி ஊழி யர்களும், அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.

ஆகஸ்ட் 5 வேலை நிறுத்தத்தின் வெற்றி, மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் பாதையில் பயணிப்பதற்கு தடைக்கல்லாக அமையும் என்பது உறுதி.

- நன்றி 'தீக்கதிர்'

No comments: