Friday, June 10, 2016

வராக்கடன் என்னும் அட்டைப்பூச்சி


சி.பி.கிருஷ்ணன்

கடனை திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் கம்பெனிகளை வங்கிகள் கையிலெடுக்க வேண்டும்; ஒவ்வொரு வங்கியும் அதிக அளவில் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிக் கட்டாத முதல் 30 கடனாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்.

பல்லாண்டு காலமாக வங்கிகளுக்கு மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ளது வராக் கடன் என்ற பிரச்சனை. 1991களிலிருந்து வங்கி களுக்கு திரும்ப செலுத்தப்படாத கடனுக்கு “செயல்படாத சொத்து” (சூடிn ஞநசகடிசஅiபே ஹளளநவ -சூஞஹ) என்று செல்லமாக பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அதன் பெயர் மோசமான கடன் (க்ஷயன டுடியn).இந்த வராக்கடன் வங்கித் துறையின் மொத்த லாபத்தில் கணிசமான பகுதியை விழுங்கி விடுகிறது. இது சமீப காலமாக மிகவும் அதிகமாகி லாபத்தின் பெரும்பங்கை ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி போல் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. வராக்கடன் என்பது வங்கி களை நலிவுறச் செய்வதன்மூலம் நாளடைவில் வீழ்த்தி விடக்கூடிய ஆபத்து கொண்டது.2015 மார்ச் இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.2,79,000 கோடி. இதில் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளின் வராக்கடன் ரூ.74,000 கோடி; மற்ற பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.2,05,000 கோடி. மொத்த வராக்கடனில் 73 சதவீதம் வராக்கடன் ஒரு கோடி ரூபாயும் அதற்கு மேலும் கடன் வாங்கி திருப்பிக் கட்டாத வர்களால் உருவாக்கப்பட்டது என்று டி.என்.ஏ. (னுசூஹ – னுயடைல சூநறள ஹயேடலளளை னவ..19.6.2015) என்ற பத்திரிகையின் ஆய்வு கூறுகிறது.2012 - 2015 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் வராக் கடனை தள்ளுபடி செய்தன. 2012-13-ல் ரூ.27,231 கோடியும், 2013-14-ல் ரூ.34,409 கோடியும், 2014-15-ல் ரூ.52,542 கோடியும் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த தள்ளுபடியான கடனின் முழு விவரத்தை பொதுத்துறை வங்கிகள் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். அப்போதுதான் கடனை வசூல் செய்ய வாய்ப்பிருந்தும் திருப் பிக் கட்டாத பெரு 

No comments: