Saturday, March 15, 2014

லெக்சாண்ட்ரா மிக்காயிலொவ்னா கொல்லொண்டாய் பேசினார்.

உழைக்கும் மகளிர் பிரச்சனைகளை உழைப்பாளிகள் கட்சி கையில் எடுத்தவுடன், ஏராளமான பெண்கள் விருப்பத்துடன் கட்சியில் சேர்ந்தனர். கட்சிதான் தங்களின் உண்மையான பாதுகாவலன் என்ற உண்மையை அங்கீகரிக்கத் தொடங்கினார்கள். தங்களுடைய அவசரமான கோரிக்கைகள் மட்டுமல்லாது, பெண்களுக்கான விஷேச தேவைகளையும் மனதிற்கொண்டு உழைக்கும் வர்க்கம் போராடுகிறது என்று அவர்கள் உணரத்தொடங்கியுள்ளனர். இன்னும் அதிக எண்ணிக்கையில் உழைக்கும் பெண்களை சோசலிஸ்ட் இயக்கத்துக்குள் கொண்டு வரும் பொறுப்பு பெண்களிடத்தில்தான் உள்ளது” “மகளிர் உழைப்பாளிகள் என்று தனிப்பட்டு ஏன் சொல்லவேண்டும் என்று சிலர் வினவக்கூடும்.சோசலிஸ்ட் பெண்கள் இயக்கம் மற்றும் பெண்களுக்கு வாக்குரிமை கேட்கும் இயக்கங்கள் உள்ளிட்ட பூர்ஷ்வா இயக்கங்களுக்கு இடையிலான முக்கியமான வித்தியாசத்தை புரிந்து கோள்ளாதவர்கள்தான் இவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்.பெண்ணியவாதிகளின் குறிக்கோள் என்ன? முதலாளித்துவ உலகில் தங்கள் தந்தையும், கணவரும் பெற்றுள்ள அனைத்து அதிகாரங்களையும், உரிமைகளையும் தாங்களும் பெற வேண்டும் என்பதே பெண்ணியவாதிகளின் இலட்சியமாகும். ஆனால் மகளிர் தொழிலாளர்களின் இலட்சியம் என்ன? பிறப்பு மற்றும் செல்வத்தில் இருந்து பெறப்படும் உரிமைகள், சலுகைகள், அதிகாரங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் அவர்களின் இலட்சியமாகும். ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைகள் வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.ஆனால், நாங்கள் தொழிலாளிகள் மற்றும் குடிமக்கள் என்பதுடன் நாங்கள் தாய் என்பதையும் மறக்கத் தயாராயில்லை. ஒரு தாயாகவும், எதிர்கால சந்ததியை தருபவர்களாகவும் எங்களுக்கென்று சில விஷேச சலுகைகளை எங்களுக்காகவும், எங்கள் குழந்தைகளுக்காகவும் கேட்கிறோம். அரசிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் சிறப்பு பாதுகாப்புகளையும் நாங்கள் கேட்கிறோம்.”

No comments: