Saturday, September 28, 2013

ரஷ்யாவிலிருந்து ஓர் வேண்டுகோள் - விளாடிமிர் புடின், ஜனாதிபதி, ரஷ்யா




‘சிரியாவைத் தாக்காதே’ என்ற முழக்கம் உலகம் முழுவதுமிருந்து மட்டுமல்ல, அமெரிக்க மக்களிடமிருந்தும் ஆவேசமாக எழுந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், நியூயார்க் டைம்ஸ் ஏட்டில் (12-9-2013) எழுதியுள்ள கட்டுரை வருமாறு:
சிரியாவைச் சுற்றி நடந்து கொண் டிருக்கும் சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்க மக்களோடும் அவர்களது அரசியல் தலைவர்களோடும் நேரடியாகப் பேசு வதற்கு என்னை நிர்ப்பந்தம் செய்திருக் கின்றன. நமது சமூகங்களிடையே போதுமான தொடர்புகள் இல்லாமல் இருக்கும் இந்த தருணத்தில் இது முக்கியமானதென்று கருதுகிறேன்.
நம்மிடையேயான உறவுகள் பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றன. பனிப்போர் காலத்தின்போது நாம் ஒரு வருக்கொருவர் எதிராக நின்றோம். ஆனால் நாஜிச சக்திகளை தோற்கடிப்பதற்காக கூட்டாளிகளாக ஒன்றுபட்டு நின்றோம். அத்தகைய பேரழிவு இனி ஒருபோதும் மீண்டும் நடவாமல் தடுக்கும் நோக்கத் துடன் இப்பூவுலகின் சர்வதேச அமைப் பாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது.
ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு : போர் மற்றும் அமைதி தொடர்பான எந்தவிதமான முடிவுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தொற்றுமையின் கீழ்தான் எடுக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவித்த தலைவர்களின் புரிந்துணர்வு.
அப்போது அமெரிக்காவின் கருத்துப்படி ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடு களுக்கு ரத்து அதிகாரம் அளித்து ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் அது உறுதி செய்யப்பட்டது.இதுவே பல்லாண்டு காலமாக சர்வ தேச உறவுகள் நிலைத்திருப்பதற்கு அடிப் படையாகவும் அமைந்துள்ளது. நாடுகளின் கூட்டமைப்பு(லீக் ஆப் நேசன்ஸ்) என்ற அமைப்பிற்கு ஏற்பட்ட கதி ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஏற் படுவதை யாரும் விரும்பவில்லை. உண் மையான நோக்கங்கள் இல்லாததன் காரணமாகவே அந்த கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது.
இப்போது ஐக்கிய நாடுகள் சபையையும் செல்வாக்குடைய நாடுகள் தன்னிச்சையாக தாண்டிச் சென்று, பாதுகாப்பு கவுன்சிலின் எந்தவித மான அனுமதியும் இன்றி ராணுவத்தாக்கு தலில் ஈடுபடுமானால் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதே கதி ஏற்படும்.பல்வேறு நாடுகளிலிருந்தும், போப் உள்பட பெரும் அரசியல் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ள போதிலும், சிரியா வை அமெரிக்கா தாக்கக்கூடும் என்பது பெரும் எண்ணிக்கையில் அப்பாவிகளை கடுமையாகப் பாதிப்பதிலும், மிகப்பெரும் பதற்றமும் பீதியும் நிகழ்வதிலும் போய் முடியும்; இப்படிப்பட்ட மோதல் சிரியா வின் எல்லைகளையும் தாண்டிப் பரவு வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அப்படி ஒரு ராணுவத் தாக்குதல் நடக்குமானால் அது வன்முறையைத் தீவிரப்படுத்தும்; புதிய வகை பயங்கரவாத அலைகளைத் தோற்று விக்கும். அது ஈரானிய அணுசக்தி பிரச்ச னையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட் டுள்ள பல்முனை முயற்சிகளை சீர் குலைக்கும்; இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை தீவிரப்படுத்தும்; மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் மிகப்பெரும் அழிவையும் ஏற்படுத்தும்; ஒட்டுமொத்த சர்வதேச சட்டம் - ஒழுங்கு கட்டமைப் பையே கைமீறிப் போகச் செய்துவிடும்.சிரியாவில் இன்றைக்கு ஜனநாயகத் திற்கான போராட்டம் நடந்துகொண்டிருக்க வில்லை. மாறாக, பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கிற இந்த நாட்டில் அர சுக்கும் எதிர்த்தரப்புக்கும் இடையே ஒரு ஆயுத மோதல் நடந்துகொண்டிருக்கிறது. சிரியாவில் ஜனநாயகத்திற்கான முன் னோடிகள் சிலர் இருக்கிறார்கள்.
ஆனால் அதைவிட அதிகமாக அல்கொய்தா பயங் கரவாதிகளும், அனைத்துவிதமான குழுக் களைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் அர சுடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த எதிர்த்தரப்போடு மோதி வருகிற அல் நுஸ்ரா முன்னணியையும் இராக்கிய இஸ்லாமிய அமைப்பையும் லேவந்த் என்ற அமைப்பையும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா வின் வெளியுறவுத்துறை சேர்த்துள்ளது. மேற்படி எதிர்த்தரப்பினருக்கு அந்நிய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் சப்ளை செய்து தூண்டிவிடப்பட்டுள்ள இந்த உள்நாட்டு மோதல் என்பது உலகிலேயே மிகவும் இரத்தம் தோய்ந்த ஒன்றாகும்.அரபு நாடுகளைச் சேர்ந்த கூலிப் படையினர் சிரியாவில் மோதலில் ஈடு பட்டிருக்கிறார்கள்; மேற்கத்திய நாடுகளி லிருந்தும், ரஷ்யாவிலிருந்தும் கூட நூற் றுக்கணக்கான பயங்கரவாதிகள் அங்கே மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்; இது மிகவும் கவலையளிக்கக்கூடியது.
சிரியா வில் தற்போது கிடைக்கக்கூடிய அனு பவங்களோடு நமது நாடுகளுக்கு அவர் கள் திரும்பி வந்தால் என்னாகும்? லிபி யாவில் இதுபோன்ற மோதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அதைத்தொடர்ந்து மாலி நாட்டிற்குள் சென்றார்களே, அதே போன்ற அச்சுறுத்தல் நம் அனைவருக்கும் இருக்கிறது.
சட்டத்தை பாதுகாப்பது... : துவக்கம் முதலே சிரியாவின் மக்கள் தங்களது சொந்த எதிர்காலத்தை தாங் களே தீர்மானித்துக் கொள்ள உதவும் வகையில் ஒரு அமைதியான பேச்சு வார்த்தையே தீர்வாகும் என்று ரஷ்யா வலி யுறுத்தி வந்துள்ளது. நாங்கள் சிரிய அரசாங் கத்தை பாதுகாக்கவில்லை; சர்வதேசச் சட்டத்தையே பாதுகாக்கிறோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன் சிலை பயன்படுத்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. ஏற்கெனவே ஏராளமான பிரச்சனைகளில் சிக்கி கடு மையான கொந்தளிப்பில் இருக்கும் இந் தப் பூவுலகம் மேலும் பயங்கரத்திற்குள் சிக்கிவிடாமல் சர்வதேச உறவுகளை பாதுகாப்பதற்கான சில வழிகளில் ஒன் றாக சர்வதேசச் சட்டம் - ஒழுங்கை பாது காப்பது அமையும் என நம்புகிறோம்.சட்டம் என்பது இப்போதும் சட்டம் தான். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதை அவசியம் பின்பற்றியாக வேண் டும். தற்போதைய சர்வதேசச் சட்டங்க ளின்படி ஒரு நாடு தனது சுய பாதுகாப் பிற்கு அல்லது ஐ.நா. பாதுகாப்புக் கவுன் சிலின் முடிவின்படி மட்டுமே ராணுவத் தாக்குதலை பிரயோகிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
வேறு எதுவும் எந்தவிதத் திலும் ஐக்கிய நாடுகள் சபையின் சாச னத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாதது; அப்படிப்பட்ட செயல் ஒரு ஆக்கிரமிப்பு என்றே கருத முடியும்.சிரியாவில் விஷவாயு பிரயோகிக்கப் பட்டது என்பதில் யாரும் சந்தேகம் எழுப் பவில்லை. ஆனால் அது சிரியாவின் ராணுவத்தால் பயன்படுத்தப்படவில்லை என்று நம்புவதற்கும் அடிப்படைவாத சக்திகளுக்கு ஆதரவாக நிற்கிற சக்தி வாய்ந்த அந்நிய நபர்களால் ஒரு ராணுவத் தலையீட்டை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தோடு சிரியாவின் எதிர்தரப்பு படையினரே விஷவாயுவை பிரயோகித் திருக்கக்கூடும் என்பதற்குமான ஏராள மான காரணங்கள் இருக்கின்றன. இந்த பயங்கரவாதிகள் இன்னொரு தாக்கு தலுக்கும் தயாராகியிருக்கிறார்கள் என தக வல்கள் வருகின்றன.
இந்த முறை அந்தத் தாக்குதல் இஸ்ரேலின் மீதாகக் கூட இருக்கலாம் என்பதையும் மறுப்பதற் கில்லை.மற்ற நாடுகளில் ஏற்படக்கூடிய உள் நாட்டு மோதல்களில் ராணுவ ரீதியாக தலையிடுவது அமெரிக்காவின் பொது வான நியதியாக மாறிக்கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இது அமெரிக்கா வின் நீண்டகால நலன் சார்ந்ததா? எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற கோடிக் கணக்கான மக்கள் அமெரிக்காவை ஒரு முன்மாதிரி ஜனநாயகமாக கருத முடியாத நிலை எழுந்துள்ளது. ஒரு கொடூரமான ராணுவ சக்தியாக, ‘நீங்கள் எங்களோடு இருக்கிறீர்களா? அல்லது எதிராக இருக் கிறீர்களா?’ என்று மிரட்டி கூட்டாளி களை உருவாக்கிக் கொள்கிற நாடாகவே அது அறியப்படுகிறது.
ஆனால் இவர்களது ராணுவத் தாக்கு தல் எந்தவிதத்திலும் பயன்படவில்லை; அர்த்தமுள்ளதாகவும் இருக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் இன்றைக்கும் பதற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது. அங் கிருந்து சர்வதேசப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால் பிறகு என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. லிபியா இன்றைக்கு பழங்குடியினர் மற்றும் போர்க்குழுக்களுக்கு இடையே சிக் குண்டு சிதறிக்கிடக்கிறது. இராக்கில் உள் நாட்டுப் போர் நீடித்துக் கொண்டிருக் கிறது. ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அமெரிக் காவில் பலரும் இராக்கையும் சிரியாவை யும் சுட்டிக்காட்டி தங்களது அரசாங்கத் தை கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள். சமீப காலத்தில் செய்த தவறுகளை மீண் டும் மீண்டும் தங்களது அரசாங்கம் ஏன் செய்ய விரும்புகிறது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எப்படிக் குறி வைக்கிறீர்கள் அல்லது எப்படிப்பட்ட அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பிரச்சனை யல்ல; எதைப் பயன்படுத்தினாலும் நீங்கள் யாரைப் பாதுகாக்கப் போவதாகக் கூறுகிறீர்களோ அதே குழந்தைகளும் முதியவர்களும் உள்பட அப்பாவி உயிர்கள் பலியாவது தவிர்க்க முடியாது.புதியதோர் வாய்ப்புபல்வேறு கேள்விகளால் இந்த உலகம் தனது எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண் டிருக்கிறது; சர்வதேசச் சட்டத்திற்கு பணிய முடியாது என்று சொன்னால், உங் களது பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத் திக் கொள்ள வேறு வழியை கண்டுபிடித் துக் கொள்ளப் போகிறீர்களா? இப்படித் தான் பல்வேறு நாடுகள் பேரழிவு ஆயுதங் களை தங்கள் வசம் குவித்து வைப்பது அதிகரிக்கிறது. நீங்கள் அணுகுண்டு வைத்திருந்தால் உங்களை எவராலும் தொட முடியாது என்று கருதுகிறீர்கள்.
அப்படியே இருக்கட்டும். ஆனால் நாங்கள் ஆயுதப்பரவல் தடையை வலுப்படுத்து வதற்கான தேவையை முன்வைத்து பேச்சுவார்த்தையை முன்மொழிகிறோம். ராணுவத் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டுகிற தொனியை அவசியம் நிறுத்திக் கொள்ள வேண்டும்; நாக ரிகமான பாதைக்கு திரும்ப வேண்டும்; ராஜீய ரீதியான, அரசியல் தீர்வுக்கு வழி வகுக்கிற பாதைக்குத் திரும்ப வேண்டும்.கடந்த சில நாட்களில் ராணுவத் தாக்குதலை தவிர்ப்பதற்கான ஓர் புதிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிரியா தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தி, அதைத் தொடர்ந்து அவற்றை அழித்து விடவும் தயாராக இருப்பதாக அறிவித் திருப்பதை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சர்வதேச சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.ஜனாதிபதி ஒபாமாவின் அறிக்கை களைப் பார்க்கும்போது ராணுவத் தாக்குத லுக்கு ஒரு மாற்றாக இதை அமெரிக்கா பார்க்கத் துவங்கியிருக்கிறது எனக் கருத முடிகிறது.
சிரியா தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்த ஜனாதிபதி ஆர்வம் தெரிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த நம்பிக்கையை காப்பாற்ற நாம் கூட் டாகப் பணியாற்றுவது அவசியம். கடந்த ஜூன் மாதம் வடக்கு அயர்லாந்தில் உள்ள லாப் எர்னே நகரில் நடைபெற்ற ஜி-8 உச்சி மாநாட்டில் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையை நோக்கி முன்னேறுவோம். சிரியா மீதான ராணுவத் தாக்குதலை தவிர்த்தோமானால் சர்வதேச விவகாரங் களில் நல்லதோர் சூழல் மேம்படும்; பரஸ் பரம் நாடுகளிடையே நம்பிக்கை வலுப்படும்.
பூவுலகை அச்சுறுத்திக் கொண்டிருக் கும் இதர பல முக்கியப் பிரச்சனைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான கதவுகளைத் திறக்க அதுவே வழி.ஜனாதிபதி ஒபாமாவுடன் எனது பணி சார்ந்த உறவும், தனிப்பட்ட உறவும் நம்பிக் கையின் அடிப்படையிலேயே வளர்ந் திருக்கிறது. நான் அதுகுறித்து பெருமைப் படுகிறேன். கடந்த செவ்வாயன்று அமெரிக்க மக்களுக்கு அவர் ஆற்றிய உரையை மிகுந்த கவனத்தோடு படித் தேன்.
அமெரிக்காவின் கொள்கையாக அவர் முன்வைத்திருக்கிற அமெரிக் காவின் தனித்துவம் என்ற அம்சத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக் காவின் தற்போதைய கொள்கைகள் அமெரிக்காவை வேறுபடுத்திக் காட்டு கிறது என்றும் அதுவே அமெரிக்காவின் தனித்துவம் என்றும் அவர் பெருமிதம் கொள்கிறார். இது மிகவும் ஆபத்தானது. உலகில் பெரிய நாடுகளும் சிறிய நாடு களும்; பணக்கார நாடுகளும் ஏழை நாடு களும்; மிக நீண்ட ஜனநாயக பாரம்பரியம் கொண்ட நாடுகளும் ஜனநாயகத்தை கண்டுபிடிப்பதற்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கிற நாடுகளும் இருக்கின் றன. அவரவர் கொள்கைகளும் வேறுபட் டவை.
நாம் அனைவரும் வேறுபட்டவர் களே; ஆனால் இறைவனின் ஆசிகளைப் பெறுவதற்காக மன்றாடும்போது, இறை வனால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் சமமானவர்களே என்பதை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.
(நன்றி : இந்து)தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

No comments: