பி.எஸ்.கிருஷ்ணன்
இந்திய ஆட்சிப் பணியில் 1956ல் என் பணியைத் தொடங்கிய நாளிலிருந்து 22 ஆண்டு களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற நாள் வரை சமூக நீதிக்கான என் பணி தொடர்ந்தது. நான் பணியாற்றிய போது இச்சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக நிறைய திட்டங் களை என்னால் முன்னெடுக்க முடிந்தது. இத்திட்டங்களுள் முதன்மையானது, எஸ்.சி. மக்களுக்காக உரு வாக்கப்பட்ட சிறப்புக்கூறு திட்டமும் பழங்குடி யினர் நலனுக்காக உரு வாக்கப்பட்ட பழங்குடி யினர் துணைத்திட்ட மும் ஆகும். இத்திட்டங் கள் உண்மையிலேயே மானசீகமாக நடை முறைப்படுத்தப்பட்டிருந் தால், இந்திய அரசியல் சாசனம் வகுத்த சமத் துவம் இந்நாட்டில் என்றோ நிஜமாகியிருக்கும். ஏற்கெனவே வளர்ச் சியின் பயன் அனைத்தை யும் தமதாக்கிக் கொண்டிருக்கும் உயர் சமூக வகுப்பினர் அள வுக்கு இவர்களும் ஓரளவு முன் னேற்றம் கண் டிருப்பர். பிற்படுத்தப்பட்டோ ருக்கு மத்திய அர சுப் பணிகளில் இடஒதுக்கீடு பெற்றுத்தரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றியபோது, 1980 ஜனவரி முதல் தேதி யன்று என்னுடைய கையெழுத்தோடு மண் டலக் குழு அமைக்கப்பட்ட அறிக்கை வெளி யானது.இதனைத்தொடர்ந்து, அப்போதைய பிரதமர் வி.பி.சிங், சமூக நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், இவர்களோடு துறைச் செய லாளராக நானிருந்த காலத்தில் மண்டல குழு வின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தது.
நீண்ட காலம் பல்வேறு காரணங்களால் பல் வேறு சக்திகளால் தடை செய்யப்பட்டு வந்த மண்டல குழுவின் பரிந்துரைகள் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 மற்றும் 9ஆம் நாளன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பதினொன்றாம் திட்டத்தில் (2001) உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை அதி காரப்படுத்தும் பணிக்குழுவின் தலைவர் என்ற முறையில், பிற்படுத்தப்பட்டோர் முழுமையான வளர்ச்சிக்காக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து ஓர் அறிக்கையைத் தயாரித்தவன் என்று எடுத் துரைப்பதிலும் மகிழ்வடைகிறேன். மேலே என்னைப்பற்றி நானே சொல்லுகின்ற விசயங் களெல்லாம் என் சுய புகழ்பாடுவதற்காக கூறப் பட்டவை அல்ல. ஏற்கெனவே 60 ஆண்டுகள் இந்தியச் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நோக்கி என் பணியை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். இத்தனை காலம் இவ்வளவு பணியாற்றிய எனக்கு அண்மையில் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்வுகள் மிகப் பெரிய கவலையையும் ஆதங்கத்தையும் தந்துள் ளது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக் குப்பின்பும், எஸ்.சிக்களும், பழங்குடியினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் இச்சமூகத் தில் தாம் பெற வேண்டிய நியாயமான பங்கினை இன்னும் முழுமையாகப் பெறாத நிலையில் இவ் வகுப்பினரின் ஒற்றுமை இன்றைய காலக்கட் டாயம் என்ற நிலையில் இவர்களிடையே காணப்பெறும் மோதல் போக்கு கவலை தரும் செய்தியாகும்.
தமிழகத்தில் இக்குழுவினரிடையே ஒற் றுமை ஏற்பட பல முன்முயற்சிகள் நடந்ததை அனைவரும் அறிவர். ஆனால் அண்மையில் தருமபுரியில் நடந்த நிகழ்வுகள் இந்த நம் பிக்கையைச் சிதைத்துவிட்டது எனலாம்.வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையிலான காதல் திரு மணத்தையொட்டி தலித் மக்கள் வாழும் மூன்று கிராமங்களில் 300 வீடுகள் நொறுக்கப்பட்டதாக வும் அவர்தம் சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக வும் கேள்விப்படுகிறேன். இந்த நிகழ்ச்சி, 2005இல் அரியானா மாநி லத்தில் சோனபெட் மாவட்டத்தில் கோஹனா என்ற ஊரில் நடந்தேறிய நிகழ்வை நினைவு படுத்துகிறது. இக்கிராமத்தில் 55 தலித் மக் களின் வீடுகள் முழுமையாகத் தீ வைத்து எரிக் கப்பட்டன. 97 வீடுகள் சிதைவுக்குள்ளாயின. வீடுகளிலிருந்த பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அரியானா மாநிலத்தின் பெரும்பான்மை வகுப்பைச் சேர்ந்த ஒருவரை தலித் வகுப்பினுள் பால்மிகிஸ் பிரிவைச் சார்ந்த ஒருவரால் கொலை செய்யப்பட்டார் என்ற நிகழ்வுதான் இக்கோரத்தின் பின்புலமாகும். இம் மாநிலத்தின் இத்தாழ்த்தப்பட்ட வகுப்பினர் காலங்காலமாய் இந்த ஆதிக்க சாதியின் மேலாண்மைக்கு அடிபணிந்து வாழ்ந்தவர்கள்; கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வந்தவர்கள். ஒரு கொலை வழக்கை நடத்த வேண்டிய சட்டமுறை என்ன? குற்றவாளியை அல்லது குற்றவாளியென சந்தேகப்பட்டவரை கைது செய்தல்; விசாரணை மேற்கொள்ளல்; உரிய நீதிமன்றம் முன் நிறுத்துதல்; இவையெல் லாம் புறந்தள்ளி, பெரும்பான்மையினர் என் பதாலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகு திக்குள் அத்துமீறி நுழைந்து, அவர்களது வீடு களையும் சொத்துக்களையும் அழித்தல் என்ன நியாயம்.
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இருக்கும் நாட்டில் ஒரு கொலை வழக்கை நடத்தவும் சில சட்ட முறையைக் கையாள வேண்டாமா? நான் கோஹனாவிற்கு சென்றிருந்தேன். தாழ்த்தப்பட்ட பால்மிகிஸ் பிரிவினரில் 25 சத வீதம் பேர் மலம் அள்ளும் தொழில் செய்வதை விட்டுவிட்டனர். இவ்வூரில் வாழும் மக்களில் பெரும்பாலோர் மெட்ரிக் படிப்புக்கு முந்தைய வகுப்பு தேறியவர்கள்; இடஒதுக்கீடு மூலம் வேலை கிடைக்க இவர்களுக்குக் கல்வித் தகு தியில்லாத போதும், இவர்களைக்கேவலமாக கருத வைத்திருந்த தொழிலைவிட்டு இவர்கள் விரும்பியவாறு வேறு தொழிலை ஏற்றுக்கொண் டிருந்தனர். இவர்களின் கடுமையான உழைப் பால், இவர்கள் நல்ல முன்னேற்றம் கண் டனர். சுதந்திரமாகச் செயல்பட்ட இம்மக்களின் போக்கு பெரும்பான்மை சாதியினரை ஆத்திர மூட்டியது.1991 ஆகஸ்ட் 6ம் தேதி ஆந்திர மாநிலத்தில் சுண்டுருவில் நடந்த நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. ஆகஸ்ட் 11ம் நாள் இவ்வூருக்குச் சென்றேன். இங்கும் தலித் மக்கள் பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சியும், விவசாயத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை தலித் மக்கள் தேர்ந்துகொண்டதும் உயர் சாதியினருக்கு எரிச்சலைத் தந்தது; தாழ்த்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டின் மூலமும் உழைப்பின் மூலமும் பெற்ற சிறிய அளவு அந்தஸ்து உயர் வைக்கூட பக்கத்தில் வாழ்ந்த பிற்படுத் தப்பட்டோரால் சகிக்க இயலவில்லை. நாளும் தம்மிடம் வளர்த்துக்கொண்ட இந்த வெறுப் புணர்வு பெரிய அளவிலான தாக்குதலுக்கு வழி வகுத்தது.மத்தியப்பிரதேசம் சிவபுரியில் சில ஆண்டு களுக்கு முன் மேற்கண்டவாறே தாக்குதல்கள் நடந்தன. இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பெறும் இத்தாக்குதல்களில் ஒரு ஒற்றுமை காணப்படுவதைப் பார்க்கலாம். நாட்டின் பெரும் பகுதியில் வாழும் தாழ்த்தப் பட்ட மக்கள் விவசாயத்தை நம்பி, விவசாயக் கூலிகளாகவும், வேறு தொழில் செய்யும் தொழி லாளர்களாகவும் உள்ளனர். குறைந்த எண்ணிக் கையில் உள்ளோரே தேச அளவில் இவர்கள் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட சில வளர்ச்சித் திட்டங்களாலும், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் கிடைத்த ஒதுக்கீட்டுப் பயன்களாலும் முன்னேறியவர்கள், இவர்களின் வளர்ச்சியின் வெற்றி இடஒதுக்கீட்டைச் சார்ந் தது என்று கூற முடியாது. இவர்களின் தளரா உழைப்பே இவர்களின் வளர்ச்சிக்குக் காரணம். தருமபுரியில் சிதைக்கப்பட்ட 3 கிராமங்களில் இந்த நிலையைப் பார்க்க முடிந்தது. தலித் சமூக இளைஞர்கள் கட்டிட வேலை செய்யும் தொழி லாளர்களாக, பெங்களூரு போன்ற நகர்களுக் குச் சென்று கடுமையாக உழைத்து மிஞ்சிய பணம் கொண்டு இவர்கள் நம் வீடுகளுக்கு வாங்கிய பொருட்களும் இவர்கள் ஈட்டிய பணமும் அருகாமை சாதியினருக்கு வெறுப் பைத் தந்தது.தாழ்த்தப்பட்டவர் அல்லாத ஏனைய சமூ கத்தினர், இம்மக்களின் சிறிய வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்களைப் பாராட்டவேண்டும்.
இன்னும் இம்மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். அவர்கள் சமூகத் தில் சமத்துவ நிலையை எட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழ வேண்டும்.இந்தியாவில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட சமூ கத்தினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் கடுமையான உழைப்பாளிகள்தாம். ஆனால் இம்மக்கள் தீண்டாமை எனும் வன்முறையி லிருந்து விடுபட்டவர்கள், உடல் ரீதியான வன்முறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் இவர்கள் ஆட்படுவதில்லை. இந்நிலை தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். நம்மை ஆண்ட வெள் ளையர்கள் இலங்கையின் தேயிலை தோட்டங் களில் வேலை செய்ய தமிழகத்திலிருந்து தலித் மக்களையும் வன்னியர்களையும் அழைத்துச் சென்றனர். பிற்படுத்தப்பட்டவர்களும் சிறப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் அனைத்து நிலைகளிலும் உரிய வளர்ச்சி அடைய வேண் டும் என்பதற்காகவே பிற்படுத்தப்பட்டோரை அதிகாரப்படுத்தும் நோக்கில் பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் செயற்பாட்டுக் குழு உருவானது.மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்கள் இருவருமே சமநீதி மறுக்கப்பட்டவர் கள், அரசின் அதிகாரத்தில் இன்னும் இவர் களின் பங்கு மிகக்குறைவே. இவர்களுக்குரிய நீதி இவர்கள் ஒன்றிணையும் போதுதான் சாத் தியம் என்பதை இவர்கள் உணர வேண்டும்.1980களில் வன்னியர் சமூகத்தினர் இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்காக போராடியதை நான் அறிவேன். பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இடஒதுக்கீடு மூலம் பெறும் உரிமைகளை வன்னியரும் பெற உரிமை உண்டென்றாலும், சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோடு இவர்கள் போட்டியிட முடியவில்லை என்பதே உண்மை. வன்னியர்களின் இக்கோரிக்கை நியாய மானதே. வன்னியர்கள் முன்னெடுத்த போராட் டத்தின் விளைவாக பிற்படுத்தப்பட்டவர் களைப் பிற்படுத்தப்பட்டவரென்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்றும் பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனிக்கோட்டா ஒதுக் கித்தரப்பட்டது. இந்தப் பிரிவின்போது, இப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பணியாளர்கள் என்னிடமும் யோசனை கேட்டனர். என் யோ சனைகளும் இப்பிரிவுக்கு உதவியாய் அமைந் தது. இங்கு நடந்த துரதிருஷ்ட நிகழ்வுகள் என்னவென்றால், பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டில் எந்த பொறுப்பும் இல்லாத தலித் மக்கள் திருச்சி, தென்னாற்காடு மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் தாக்கப்பட்டது தான். இம்மாவட்டங்களில் நான் நேரடியாகச் சென்று விரிவாக ஆய்வு செய்தேன். தலித் மக்கள் தாம் வாழும் பகுதியில் தமக்கென காலங்காலமாக உயர் சாதி என்று கருதப் படுவோரால் ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய மறுத்தமைதான் இத்தாக்குதலுக்கு காரணம். இக்காலகட்டத்தில் கலப்பு திரு மணம் ஒரு பிரச்சனையாக எழவில்லை. என் னிடம் அப்போதெல்லாம் ஆலோசனை பெற வந்தவர்களிடம் தாக்குதலை நிறுத்தக் கேட்டுக்கொண்டேன். இரு பிரிவினருமே ஒதுக்கப்பட்டவர்தாம் என்பதால் இரு பிரி வினரும் இணைந்து உரிமைகளைப் பெற போராட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.சாதிய தாக்குதல்களுக்கு இப்போது கலப் புத்திருமணங்கள் அதாவது தலித் / தலித் அல் லாத பிற சாதியினரிடையே நிகழும் கலப்புத் திருமணங்கள் காரணங்களாய் அமைகின்றன. சாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் சாதியத்திற்கு எதிரான திரு மணங்கள் என்பதுதான் உண்மையாக இருக்க, இத்திருமணங்களுக்கு எதிராக தாக்குதல்கள் நிகழ்வது வருத்தம் தரும் செயற்பாடாகும்.
சாதி யம் நம் சமூகத்தின் அனைத்து அவலங்களுக் கும் மூலம் என்றும் ஒடுக்கலுக்கும் சுரண்டலுக் கும் முதல் காரணிகள் என்றும், சம நீதி விரும் பும் பெரும்பான்மை மக்களின் ஒருமித்தக் கருத் தாக இருந்து வந்திருக்கிறது. சாதியத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஈடேற்றத்திற்கு சமூக நீதிக்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வும் குறிப்பாக கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வும் வேண்டிய தேவையினை சமத்துவம் விரும்புவோர் வேண்டினர். மகாத்மா பூலே, நாராயணகுரு, டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் சமத்துவ நீதிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடினர். தமிழ்நாட் டைப் பொறுத்தவரையில் பெரியார் சாதி யொழிப்புப் போரில் மிகப்பெரிய பெற்றி பெற்றார் என்று சொன்னால் அது மிகையில்லை. இத்தருணத்தில், டாக்டர் ராமதாசும் அவரின் ஆதரவாளர்களும் என்னைக் கௌர வித்த இரண்டு நிகழ்வுகளை நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். 2002ஆம் ஆண்டு வெளியான அரசியல் சாசன செயற்பாட்டின் மறு ஆய்வு தொடர்பான அறிக் கையின் போது நடந்த நிகழ்வு. இந்த ஆணை யத்தின் தலைவராக இருந்தவர் நீதியரசர் வெங் கடசெல்லையா அவர்கள். இவர் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான நீதியில் பெரும் அக்கறை கொண்டவர். இவ்வாணைய அறிக்கையின் பத்தாவது அத்தியாயத்தை வரைவு செய்யும் பணி என்னிடம் தரப்பட்டது. இந்த அத்தியாயம் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலானோர் தொடர்பானது. இந்த அத்தியாயம் பற்றியும், இதன் பின்னணிக் குறிப்பையும் நான் எழுதிய நுஅயீடிறநசiபே னயடவைள கடிச நஅயீடிறநசiபே ஐனேயை; ஹ சுடியன ஆயயீ (ஆயயேம ஞரடெiஉயவiடிn, னுநடாi 2009) என்ற நூலின் பின்னிணைப்பில் பார்க்கலாம். என்னு டைய வரைவில் தரப்பட்ட ஒவ்வொரு வார்த் தையும் ஆணையத்தின் தலைவர் அவர்களால் நுணுகி ஆராயப்பட்டு விரிவான விவாதத் திற்குப்பின் ஆணையத்தால் அப்படியே ஏற் றுக்கொள்ளப்பட்டது. இவ்வறிக்கையில் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய குறிப்பை முதன் முதலாகப் பார்த்தவர் டாக்டர் ராமதாசு அவர்கள்தான். என்னுடைய இப்பங்களிப்பு பற்றி அறிந்த ராமதாசின் பணியால் ஈர்க்கப் பட்ட ஓர் அமைப்பு என்னைப் பாராட்ட ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் டாக்டர் ராமதாசும் ஆணையத் தின் ஒரே தலித் உறுப்பினரான நீதியரசர் புன் னையாவும் கலந்துகொண்டனர். பாராட்டுவிழா நிகழ்வின்போது நான் சாதி மறுப்பு/ கலப்புத் திருமணம் செய்து கொண்டவன் என்ற செய்தி வெளியாயிற்று. இச்செய்தி கேட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் டாக்டர் இராமதாசும் மகிழ்ந்தனர். பாராட்டிக் கை தட்டினர். இக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும் பான்மையோர் வன்னியர் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் காட்டிய ஆர வாரம் சாதிமறுப்புக்கு கலப்புத் திருமணத்திற்கு ஆதரவானது என்பது நிரூபணமாகியது.இன்னொரு நிகழ்வையும் இங்கு நினைவு கூர விரும்புகிறேன். மத்திய அரசின் கல்வி நிறு வனங்களில் இடஒதுக்கீட்டை ஏற்கெனவே எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு அளிக்கப்பட்டு வந்ததைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கப்பெற வேண்டும் என்ற சட்டம்-2006ஐ சரிதான் என்று நான் நியாயப்படுத் தியபோது என்னுடைய நிலைப்பாட்டை டாக் டர் ராமதாசு உணர்ந்து கொண்டார். இந்த இட ஒதுக்கீட்டிற்கான நியாயத்தை அன்றைய சொலி சிட்டர் ஜெனரல் சிறப்பு வழக்குரைஞர் பராசுர னுக்கு எடுத்துரைத்ததையும் ராமதாசு அறிவார். பல மாநில அரசுகள் இதில் கட்சிக்காரராக சேர்ந் திருந்தன. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் போது தினமும் நான் அங்கிருந்து வழக்கிற்கு வேண்டிய செய்திகளையும் கருத்துக்களையும் தந்து கொண்டிருந்தேன். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் 2008ல் அளித்த தீர்ப்பிற்கு பிறகு என் னையும் ராமதாசையும் பாராட்டும் வகையில் பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.சமூகத்தின் சில பிரிவினரும் கட்சிகளும் கூட வன்கொடுமைத் தடைச்சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இம்மாதிரி கோரிக்கைகள் இச்சட்டம் இயற்றப்பட்ட போதும் எழுந்தது. 1990ல் இந்திய பிரதமரால் கூட்டப்பட்ட கூட்ட மொன்றில் ஒரு மாநில முதல்வர் இம்மாதிரி யான கோரிக்கையை எழுப்பினார். நான் அப் போது சமூக நலச் செயலாளராக இருந்தேன். இந் தக் கோரிக்கை என்றுமே வெற்றிப்பெறப் போவ தில்லை.தருமபுரி மற்றும் வச்சாத்தி வன்முறைகள் தமிழ்நாடு மக்களின் மனசாட்சியை உலுக்க வேண்டும். அம்பேத்கரும், பெரியாரும், மேலும், பல சமூகத் தலைவர்களும் மற்றும் இந்திய அர சியல் சாசனம் கண்ட கனவும் நனவாக வேண் டும் என்பதே என் அவா.
கட்டுரையாளர், இந்திய அரசின் முன்னாள் செயலர் மற்றும் 60 வருடங்களுக்கு மேலாக சமூக நீதிக்காக தொடர்ந்து பணியாற்றுபவர்.
தீக்கதிர் 18-02-13
No comments:
Post a Comment